News

உயர்தர பரீட்சைகள் ஒத்திவைக்கப்படமாட்டாது - கல்வி அமைச்சர்



சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளதைப் போன்று கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் ஒத்தி வைக்கப்பட மாட்டாது.

இது தொடர்பில் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இவ்வருடம் ஓகஸ்ட் மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள உயர்தர பரீட்சைகள் ஒத்தி வைக்கப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அவை முற்றிலும் உண்மைக்கு புறம்பானவையாகும்.

முழு உலகிற்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோன வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்கு முகங்கொடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் மணவர்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படும் வகையிலான போலி செய்திகளை பரப்ப வேண்டாம் என்று கல்வி அமைச்சு கேட்டுக் கொள்கிறது. அத்தோடு இவ்வாறான போலி செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் அரசாங்கத்தால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வமான செய்திகளை மாத்திரமே நம்புமாறும் அரசாங்கம் பொது மக்களிடம் கேட்டுக் கொள்கிறது.

இந்த நிலையில், குறித்த தினத்தை அண்மிக்கும்போது, அப்போதைய நிலவரம் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Lanka Education. Powered by Blogger.