11 ஆம் திகதி பாடசாலைகள் மீளத் திறப்பது என்பது வதந்தி
பாடசாலைகள் மீண்டும் 11 ஆம் திகதி ஆரம்பமாகும் என ஒரு வதந்தி மிக வேகமாகப் பரவி வருகின்றது.
குறிப்பாக Whatsup, Viber குழுக்களில் ஊடாக அதிகம் பகிரப்பட்டுக் கொண்டிருக்கும் இச்செய்தியில் எந்த உண்மையும் இல்லை.
கல்வி அமைச்சோ வேறு அதிகாரிகளோ இது தொடர்பாக எந்தத் தீர்மானத்தையும் எடுக்க வில்லை. தீர்மானம் எடுப்பது தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலில் தற்போதைய சூழ்நிலையில் பாடசாலையைத் திறப்பது தொடர்பாக தீர்மானத்தை எடுக்க முடியாது என தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலைகளை எப்போது மீளத் திறப்பது என்பது தொடர்பாக கல்வி அமைச்சும் சுகாதாரத் திணைக்களமும் இணைந்து தீர்மானித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கும்.
இதே நேரம் குறித்த வட்சப் செய்தி போலியானது என்பதற்கு அதன் உள்ளடக்கமே சான்றாக அமையும்.
1) அனைத்துப் பாடசாலைகளும் 11 ஆம் திகதி திறக்கப்படும் ... என செய்தி சொல்கிறது. எந்த மாதம் என்று குறிப்பிடப்படவில்லை.
2) அத்தோடு உண்மையான செய்தி வந்தாலும் அதனை நம்ப வேண்டாம் என்றும் இச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
3) எழுத்துப் பிழை
4) ....கல்வி அமச்சர் இணையத்தலத்தில் .... வெளியிட்டுள்ளார்.
இவை இச்செய்தி போலியானது என்பதற்கான ஆதாரமாகும்.
நன்றி : techmore
No comments