News

தேசிய பரீட்சைகள் பிற்போடப்படும் அல்லது பாடத்திட்டம் குறைக்கப்பட்டு பரீட்சைகள் நடாத்தப்படும் - டலஸ்

தேசிய பரீட்சைகள் பிற்போடப்படும் அல்லது பாடத்திட்டம் குறைக்கப்பட்டு பரீட்சைகள் நடாத்தப்படும் என கல்வி அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்.



டெய்லிமிரர் பத்திரிக்கு வழங்கிய நேர்காணலில் தேசிய பரீட்சைகள் தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தேசிய பரீட்சைகளைப் பொறுத்தவரையில் மூன்று தெரிவுகள் காணப்படுகின்றன.

ஒன்று பாடசாலைகள் மூடப்பட்டதால் மாணவர்கள் மே 30 வரை இழந்துள்ள 276 மணித்தியாலக் கற்றலை மேலதிக நேரத்தை பெற்று இழந்த மணித்தியாலங்களில் பாடம் நடாத்தி பரீட்சையை நடாத்துதல். உண்மையில் இது மனிதாபிமானம் அற்ற செயல் தான். இதனை நாங்கள் கருத்தில் கொள்ளவே மாட்டோம்.

இரண்டாவது, பரீட்சையைப் பிற்போடுவது இது கடந்த காலங்களிலும் இலங்கையில் மிகவும் பிரபல்யமான முறையாகும்.

மூன்றாவது பாடத்திட்டத்தின் சில பகுதிகளை குறைத்துவிட்டு பரீட்சையை உரிய காலத்தில் நடாத்துவது.

நாம் இரண்டாவது மற்றும் மூன்றாவது தெரிவுகள் குறித்தே அதிக கவனம் செலுத்துகிறோம். முதலாவது தெரிவு குறித்து கவனம் செலுத்தவில்லை என்றார்.

பாடசாலையை மீளத் திறப்பது தொடர்பான வினாவிற்கு, அரச நிறுவனங்களில் முதலில் மூடப்பட்டதாகவும் இறுதியில் திறக்கப்படுவதாகவும் பாடசாலைகள் அமையும் என்றார்.

கோவிட் 19 தாக்கத்தால் இலங்கையில் முதலாவதாக பாடசாலைகளே மூடப்பட்டன. மார்ச் 13 ஆம் திகதி பாடசாலைகள் மூடப்பட்டன. தற்போது அரச நிறுவனங்கள் திறக்கப்படுகின்றன. இந்த ஒழுங்கில் இறுதியில் பாடசாலைகள் திறக்கப்படும் என ஊகிக்கலாம். 

No comments

Lanka Education. Powered by Blogger.