எதிர்வரும் 15 ஆம் திகதி பல்கலைக்கழகங்கள் திறக்கப்படுகின்றன
எதிர்வரும் திங்கட்கிழமை (15) பல்கலைக்கழகங்கள் திறக்கப்படவுள்ளன.
மருத்துவ பீட மாணவர்களுக்கான இறுதி ஆண்டு பரீட்சைக்காக நாளை மறுதினம் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
விடுதி வசதி பெற்றுள்ள அனைத்து மாணவர்களும் நாளை தங்களுடைய விடுதிகளுக்கு செல்ல வேண்டும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் போராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் உள்ள பல்கலைக்கழகங்களில் 10 மருத்துவ பீடங்கள் காணப்படுகின்றன.
அவற்றில் 8 பீடங்களில் நாளை மறுதினம் இறுதியாண்டு பரீட்சை நடைபெறவுள்ளது.
எழுத்துப் பரீட்சையின் பின்னர், செயன்முறை பரீட்சை மற்றும் பயிற்சிகள் வைத்தியசாலைகளில் நடத்தப்படும் என பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பல்கலைக்கழக மாணவர்களின் இறுதியாண்டு பரீட்சைகளை இம்மாதம் 22 ஆம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 15 ஆம் திகதிக்குள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
No comments