News

க.பொ.த உயர்தர (2020) பரீட்சை விடைதாள்களை மதிப்பீடு செய்ய நிகழ்நிலை (Online) ஊடாக விண்ணப்பிக்கலாம்

இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களை தெரிவுசெய்வதற்கான விண்ணப்பங்கள் ஒன்லைன் முறையில் ஏற்கப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.


இதன்படி பிரதான பரீட்சை உத்தியோகத்தர், மேலதிக உத்தியோகத்தர்கள், உதவிப் பரீட்சை உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கான விண்ணப்பங்களைப் பூர்த்திசெய்து பரீட்சைகள் திணைக்களத்தின் www. doenets.lk என்ற உத்தியோகபூர்வஇணையதள முகவரிக்கு அனுப்பமுடியும்.

இந்த நடைமுறையைத் தொடர்ந்து விண்ணப்பங்களைத் தரவிறக்கம் செய்து, அச்சிடப்பட்ட பத்திரத்தின் எஞ்சிய பகுதியை பூர்த்திசெய்து நிறுவனத் தலைவர் ஊடாக அடுத்த மாதம் ஜூலை 10ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியவாறு பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும். மேலதிக விபரங்களை 1911, 0112-785-231 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும்.
Tags:- A/L, Marking, Application, July 10, Department of Education,Doenets,Teachers

No comments

Lanka Education. Powered by Blogger.