பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான சுற்றுநிருபம் வெளியீடு - சா/த, உ/த மாணவர்களுக்கு முன்னுரிமை
பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அதற்கான வேலைத்திட்டங்கள் அடங்கிய சுற்றுநிரூபமொன்றை, கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
குறித்த சுற்றுநிரூபம், மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக, அனைத்துப் பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சின் கல்வி இராஜாங்கச் செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர தெரிவித்துள்ளார்.
இதன்படி, பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன்னரும் ஆரம்பித்த பின்னரும், மேற்படி சுற்றுநிரூபத்தின்படி செயற்படுவது கட்டாயம் என்றும், அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாடசாலைகளை மீண்டும் ஆரம்பித்த பின்னர் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய ஆலோசனைகள் அடங்கிய வேலைத்திட்டமொன்றைத் தயாரிக்குமாறும், கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ள அமைச்சு, பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரிகளின் பரிந்துரைகளுக்கு அமைய, அவ்வேலைத்திட்டத்தைத் தயாரிக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், கல்விப் பொதுத் தராதர சாதாரணதரம் மற்றும் உயர்தர மாணவர்களுக்கு முன்னுரிமையளித்தே, பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென்றும் தெரிவித்துள்ள கல்வி அமைச்சு, எவ்வாறாயினும், சுகாதார வழிகாட்டல்களுக்கமைய, மாணவர் தொகையைத் தீர்மானிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.
நன்றி : மிரர்
நன்றி : மிரர்
Good
ReplyDelete