பல்கலைக்கழகங்களை மீள திறப்பது தொடர்பிலான இறுதி தீர்மானம் இன்று

பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் இன்று (11) இறுதி தீர்மானம் எடுக்கவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இறுதி தீர்மானத்தை எட்டுவதற்கான விசேட கூட்டம் இன்று பகல் 2 மணியளவில் நடைபெறவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் அனைத்து துணை வேந்தர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
பல்கலைக்கழகத்தை ஆரம்பிப்பது தொடர்பிலான ஆலோசனைகள் சுகாதார அமைச்சிடமிருந்து கிடைத்துள்ளதாகவும் பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
No comments