கல்விச் சமூகத்துக்கு பேஸ்புக் வழங்கும் புதிய சேவை
பேஸ்புக் நிறுவனம் கல்விச் சமூகமானது ஒன்லைன் மூலமாக கல்வி கற்பதற்குரிய வளங்களுக்கான வழிகாட்டல்களை தற்போது வழங்கியுள்ளது.
தற்போதைய நிலையில் உலகின் பெரும்பாலான நாடுகளில் மக்கள் லொக்டவுன் நிலையில் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர்.
இதனால் கல்விச் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே இவர்களுக்கு உதவும் முகமாக ஒன்லைன் மூலமாக பேஸ்புக்
உற்பத்திகளை கொண்டு கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான வளங்களை எப்படி உருவாக்குவது என்பதற்கான வழிகாட்டுதலே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது ஆங்கிலம், ஹிந்தி, மராட்டி, குஜராத்தி மற்றும் கன்னட மொழிகளில் இந்த வழிகாட்டி கிடைக்கக்கூடியதாக இருக்கின்றது.
No comments