தேசிய கல்வியியல் கல்லூரிகள் நாளை ஆரம்பம்
தேசிய கல்வியியல் கல்லூரிகளும் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளும் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகும் என கல்வி அமைச்சின் ஆசிரிய கல்விக்கான பிரதான ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
நாளை திங்கட்கிழமை விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மாத்திரமே கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் நாளை கல்லூரிகளுக்கு சமூகமளிக்கத் தேவையில்லை என்றும் மாணவர்கள் கல்லூரிக்கு வருகை தர வேண்டிய தினம் தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதே வேளை, ஆசிரியர் மத்திய நிலையங்களும் நாளைய தினம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:- College of Education, Students, Tomorrow,
Tags:- College of Education, Students, Tomorrow,
No comments