பாடசாலை ஆரம்பம் தற்போதைக்கில்லை : அமைச்சரவையில் கல்வி அமைச்சர்
கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும் அது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இன்னமும் வராத காரணத்தினால் பாடசாலைகளை உடனடியாகத் திறக்காதிருக்க அமைச்சரவை நே்றறுத் தீர்மானித்துள்ளது.
இதன்படி, பாடாசலைகளை இன்னும் ஒரு மாதங்களுக்கு திறக்கப்படாது என அறிய முடிகிறது.
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்றுக் காலை அரைச்சரவை கூட்டம் நடந்தது. இதன்போது பாடாசலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இயன்றளவு விரைவில் பாடசாலைகளை ஆரம்பிக்க வேண்டுமெனவும் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளை மேலும் இழுத்தடிக்க முடியாதென்றும் ஜனாதிபதி இதன் போது வலியுறுத்தியுள்ளார்.
சுகாதார பாதுகாப்பு முன்னேற்பாடுகளை ஏற்கனவே படிப்படியாக எடுத்துவருவதாக இங்கு குறிப்பிட்ட அமைச்சர், பாடசாலைகளை எப்போது மட்டில் ஆரம்பிக்கலாம் என்பதை ஜீன் 10 ஆம் திகதிக்குள் உறுதியாக அறிக்க முடியும் எனவும் கூறியுள்ளார்.
எவ்வாறயினும் அதுவரை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்காத வகையில் தொலைக்காட்சி ஊடாகவும் இணையவழிகள் ஊடாகவும் கல்விச் செயற்பாடுகளை விரிவுபடுத்தி நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் இங்க விளக்கமளித்துள்ளார்.
இதவேளை பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் போது ஆரம்பவகுப்பு மாணவர்களுக்கு பால் பைக்கற்றுகளை தினசரி வழங்கவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
நன்றி : தமிழன்
நன்றி : தமிழன்
No comments