புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பம் கோரல்..!
இந்திய அரசின் வெளிவிவகார அமைச்சு ‘இந்தியாவுக்கான கல்விச்சுற்றுலா மற்றும் இந்தியாவை அறிந்து கொள்ளல்’ (கே.பி.ஐ) என்ற திட்டத்தின் கீழான புலமைப்பரிசில் என்பவற்றுக்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளதாக கண்டி உதவி இந்தியத் தூதுவராலயம் அறித்துள்ளது.
மேற்படி திட்டத்தின் ஆறு பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தகுதியான இலங்கைப் பிரஜைகள் இதற்கு விண்ணப்பிக்க முடியும். இந்திய அரசின் கே.பி.ஐ 60 தொடக்கம் 65 என்ற தொடர் இலக்கத்தையுடைய புலமைப்பரிசில் திட்டமானது 2020 ஜுலை முதல் பெப்ரவரி 2021 வரை காலப்பகுதியில் இடம்பெறும் சுற்றுலாவாகும்.
கொவிட் 19 பிரச்சினை காரணமாக இந்நிகழ்ச்சி திட்டம் தடைப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை இந்நிகழ்ச்சி திட்டமானது கர்னாடகா, அசாம், ஒடிசா, அருணாச்சல பிரதேசங்களை உள்ளடக்கியுள்ளது. இது இந்தியாவின் வேறுப்பட்ட கலாசார. பொருளாதார சமூக, விஞ்ஞான தொழிநுட்ப, தகவல் தொழிநுட்ப மற்றும் தகவல்துறை சார்ந்த சுற்றுலாவாகும். மேற்படி புலமைப்பரிசில் திட்டத்துக்கு 18 முதல் 30 வயது வரையான பல்கலைக்கழக மாணவர்கள், இந்திய வம்சாவளி பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். ஆங்கில மொழியில் பேசக் கூடிய, இந்திய வம்சாவளிப் பிரஜைகளே இதற்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு முன் புலமைப்பரிசில் ஏதும் பெற்று இந்தியா செல்லா தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலதிக விபரங்களுக்கு 0812222652, 0812223786 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் கண்டி உதவி இந்தியத் தூதுவராலயத்துடன் தொடர்பு கொள்ளலாம்.
No comments