நூலறிவுப் போட்டி 2020
நூலறிவுப் போட்டி 2020
நல்லூர்க் கந்தசுவாமி ஆலய உற்சவ காலத்தை முன்னிட்டு, பாடசாலை மாணவர்களின் வாசிப்புத் திறனையும் வாசிப்பிற்கான தேடலையும் ஊக்கப்படுத்தும் நோக்கில் நடாத்தும் நூலறிவுப் போட்டி 2020
- பாடசாலை மாணவர்களிடையே அருகி வரும் வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் நோக்கத்தை உடையதாகவுங் குறிப்பாகச் சமய நூல்கள், நீதி நூல்கள், புராண இதிகாசக் கதைகளை வாசிப்பதில் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் இப்போட்டி நிகழ்வு முன்னெடுக்கப்படுகிறது.
- இவ்வினாத்தாளிற் பெரும்பாலான வினாக்கள் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் எழுதிய, உரைவகுத்த, பரிசோதித்த நூல்களை (ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, நன்னெறி, சேக்கிழார் நாயனார் சரித்திரம், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம், திருநாவுக்கரசு நாயனார் புராணம், சுந்தரமூர்த்தி நாயனார் புராணம், நாவலர் எழுதிய நீதி வாக்கியங்கள், நித்திய கரும விதி, சிவாலய தரிசன விதி, புட்ப விதி, சிவபூசைத் திரட்டு, நன்னெறிக் கட்டுரைகள், கந்தபுராண வசனம் முதலானவை) உள்ளடக்கியது.
- இப்போட்டியிற் பங்குபற்ற விரும்பும் மாணவர்கள் வினாத்தாள்களைப் பின்வரும் இடங்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
- இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்திலும் (இல. 248 1/1 காலி வீதி கொழும்பு - 4), இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வடக்கு மாகாணக்காரியாலயத்திலும் (ஆனைப்பந்திக் குருகுலம், பருத்தித்துறை வீதி, ஆனைப்பந்தி) இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கிழக்கு மாகாணக்காரியாலயத்திலும் (இந்துக் கலாசார மண்டபம் நாவற்குடா, மட்டக்களப்பு ) பெற்றுக்கொள்ளலாம்.
- இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மூலமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
- நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் அமைந்துள்ள இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மணிமண்டபத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.
- https://www.hindudept.gov.lk/web/images/pdf/noolarivuppoddi2020.pdf என்ற இணையத் தளமூடாகவும் பதிவிறக்கஞ் செய்துகொள்ள முடியும். பதிவிறக்கம் செய்யும் வினாத்தாளை A-4 தாளின் இரண்டு பக்கமும் வரக்கூடியவாறு எட்டுப் பக்கங்களிற் பிரதி செய்துகொள்ளவும்.
- வினாத்தாளிலேயே விடைகளைப் பூர்த்தி செய்க. பூர்த்தி செய்யப்பட்ட விடைத்தாள்களை, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் , இல. 248 1/1 காலி வீதி கொழும்பு – 4 அல்லது, ‘ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மணிமண்டபம், நல்லூர் ஆலய வளாகம், நல்லூர்’ என்ற முகவரிக்கு அல்லது ‘இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், வடக்கு மாகாணக் காரியாலயம், ஆனைப்பந்திக் குருகுலம், பருத்தித்துறை வீதி, ஆனைப்பந்தி’ அல்லது இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாணக் காரியாலயம், இந்துக் கலாசார மண்டபம் நாவற்குடா, மட்டக்களப்பு ’ என்ற முகவரிக்குத் தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ கிடைக்குமாறு செய்யலாம்.
- 15.08.2020 இற்கு முன்னர் விடைத்தாள்கள் ஒப்படைக்கப்படவேண்டும்.
- வெற்றியாளர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பெறுமதியான பரிசில்கள் வழங்கிவைக்கப்படும்.
- இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் எழுதிய, உரைவகுத்த, பரிசோதித்த நூல்களில் முதற் தொகுதியாக வெளியிட்ட பதினைந்து நூல்கள் கொண்ட தொகுதியினையும் மாணவர்களின் நலன் கருதி விசேட சலுகை விலையில் வழங்கவுந் தீர்மானித்துள்ளது.
- மேலதிக விபரங்களுக்கு தொடர்புகொள்ள: 011 2552641, 021 2225612, 065 2223438
அன்பான பெற்றோர்களே!
உங்கள் பிள்ளைகளின் வாசிப்புப் பழக்கத்தினை ஊக்கப்படுத்துஞ் செயற்பாட்டில் உங்களுடைய வகிபாகமே முக்கியமானது. இத்தகைய போட்டிகளிற் பிள்ளைகளைப் பங்குபெற வைத்து, அவர்களுடைய எதிர்காலஞ் சிறப்புற அமையப் பக்கபலமாகுங்கள் என்று, அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
பணிப்பாளர்,
இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம்
No comments