அரச ஓவிய சிற்ப விழா 2020
புத்தசாசன, கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் அரச கட்புலக்கலை ஆலோசனைக் குழு ஏற்பாடு செய்கின்ற அரச ஓவிய சிற்ப விழாவிற்கான விண்ணப்பங்கள் 2020 பெப்ரவரி 24 ஆம் திகதி தொடக்கம் 2020 மே மாதம் 31 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும். பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவத்துடன் ஓவியத்தின் பெயர் வரைந்த ஓவியத்தின் 02 புகைப்படப் பிரதிகளும், சிற்பம் அல்லது நிறுவல் படைப்பின் முன்பக்கம் உட்பட மற்றைய இருபக்கங்களும் எடுக்கப்பட்ட 03 புகைப்பட பிரதிகளுடன் உங்களுடைய கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம் ஒன்றினையும் உள்ளடக்கிய இறுவெட்டுடன் “பணிப்பாளர், கலாசார அலுவல்கள் திணைக்களம், 8 ஆம் மாடி, செத்சிறிபாய, பத்தரமுல்லை" என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் அல்லது நேரடியாக கொண்டு வந்து கையளிக்கலாம். (கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் “அரச ஓவிய சிற்ப விழா -2020" என குறிப்பிடல் வேண்டும்) உங்களால் அனுப்பப்படும் படைப்புக்கள் பிரபல நடுவர்கள் குழுவினரால் மதிப்பீடு செய்யப்பட்டு தெரிவுசெய்யப்படும் படைப்புக்களின் மூலப் படைப்பினை நாம் அறிவிக்கும் திகதியில் குறிப்பிடப்படும் இடத்தில் கொண்டுவந்து கையளித்தல் வேண்டும். தெரிவுசெய்யப்படும் அனைத்து படைப்புகள் மீண்டும் மதிப்பீட்டின் பின்பு கண்காட்சிக்கு தகுதியான படைப்புகள் மட்டும் 2020 அரச ஓவிய சிற்ப விழாவின்போது கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும் என்பதுடன் அவற்றிற்கு சான்றிதழ் மற்றும் வெற்றிப் பெறுபவர்களுக்கு விருது, சான்றிதழ் மற்றும் பணப்பரிசு என்பனவும் வழங்கப்படும்.
போட்டிப் பிரிவுகள்
> ஓவியம் 01. மேற்பூச்சு 02. நிலக் காட்சி 03. ஆக்கத்திறன் படைப்புக்கள் (ஆக்கப்பூர்வமான, மேற்பூச்சு, நிலக்காட்சி) 04. பாரம்பரிய ஓவியத்தை பிரதிப்படுத்தல் (ஓவியப் பிரதிப்படுத்தலின்போது இடத்தின்
சுருக்கக் குறிப்பினை வழங்கவும் மற்றும் சிற்ப படைப்பின் புகைப்பட பிரதியை சமர்ப்பித்தலும் கட்டாயமானதாகும்.)
> சிற்பம் 01. மேற்பூச்சு படைப்புக்கள் 02. ஆக்கத்திறன் படைப்புக்கள் (ஆக்கப்பூர்வமான நிலக்காட்சி) 03. பாரம்பரிய சிற்பம்
(அசல் படைப்பின் சிறுகுறிப்பு மற்றும் அசல் படைப்பின் புகைப்படத்தினை சமர்ப்பித்தல் கட்டாயமாகும்.) (தேவையான நிரந்த தலைப்பினை உபயோகிக்க முடியும்)
> நிறுவல் சிற்பம்
(வழங்கப்படும் இடவசதியின் அதி கூடிய அளவு 8ஓ8ஓ8 (உயரம், நீளம், அகலம்) ஆகும்) > தீட்டல் ஓவியம் > அச்சு விதி (செைவபை ஆயமந)
போட்டி நிபந்தனைகள்
01. இதற்கு விண்ணப்பிப்பவரின் வயது 18 வயதிற்கு மேற்பட்டதாக இருத்தல் வேண்டும். 02. போட்டிக்காக 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு படைப்புகள் மாத்திரம் சமர்ப்பிக்க முடியும் 03. கடந்த முறை சமர்ப்பித்த படைப்புகள் இம்முறை போட்டிக்காக சமர்ப்பிக்க முடியாது 04. நீங்கள் விரும்பிய தலைப்பினை தெரிவு செய்துகொள்ளமுடியும் 05. நீங்கள் விரும்பிய வடிவத்தில் ஓவியம் தீட்டலாம். 06. ஒரு பிரிவில் ஒரு படைப்பினை மாத்திரம் சமர்ப்பித்தல் வேண்டும். 07. சமர்ப்பிக்கும் படைப்புகளின் கூடிய அளவு உயரம் 8 அடி, அகலம் 8 அடி, நீளம் 8 ஆக
இருத்தல் வேண்டும். 08. சமர்ப்பிக்கப்படும் படைப்புகளின் குறைந்த அளவு உயரம் - 2 அடி, அகலம்- 2 அடி,
நீளம் - 2 அடி இருத்தல் வேண்டும். 09. விண்ணப்பப்படிவத்தின் தகவல்களை சிங்களம், தமிழ் அல்லது ஆங்கில மொழியில் சரியாகவும் தெளிவாகவும் வழங்கவேண்டும். தகவல்கள் பிழையாகவோ அல்லது தெளிவற்றதாகவோ
இருப்பின் போட்டியில் இருந்து நிராகரிக்கப்படும். 10. இறுவெட்டு சமர்ப்பிக்கும் போது போட்டிக்காக சமர்ப்பிக்கப்படும் படைப்பின் புகைப்படம் மற்றும்
தங்களின் புகைப்படம் மாத்திரம் 11. இறுவெட்டில் உள்வாங்கப்படும் புகைப்படம் (300னிடை சநளழடரவழை) ஆகியவற்றை
கொண்டிருத்தல் கட்டாயமாகும். 12. இருவெட்டு மற்றும் புகைப்படத்தின் பின்புறத்தின் பெயர், முகவரி, ஒப்பம் என்பன தெளிவாக
குறிப்பிடல் வேண்டும். 13. தங்களால் அனுப்பப்படும் படைப்புக்களின் புகைப்படங்கள் மற்றும் இறுவெட்டுக்கள் என்பன
திருப்பி வழங்கப்படமாட்டாது. 14. முதற் சுற்றின்போது தங்களால் அனுப்பப்படும் படைப்புக்களின் புகைப்படங்கள் பிரபல நடுவர்
குழுவினரால் மதிப்பீடு செய்யப்பட்டு தெரிவுசெய்யப்படும் படைப்புக்களில் முதல் படைப்பை பெற்று மீண்டும் அதனை மதிப்பீடு செய்யப்பட்டு கண்காட்சிக்காக சமர்ப்பிக்கப்படும். மேற்படி படைப்புக்கள் மீண்டும் தங்களுக்கு வழங்கப்படும். கண்காட்சியின் பின்பு மறுதினமே தங்களின் படைப்புக்களை அகற்ற வேண்டும் என்பதுடன்,
அகற்றப்படாத படைப்புக்களுக்கு திணைக்களம் பொறுப்பு கூறாது. 16. படைப்புகள் சமர்ப்பிக்கும்போதும், மீண்டும் எடுத்துச்செல்லும் போதும், கண்காட்சி கூடத்திற்குள்
எடுத்துச்செல்லும்போதும் மற்றும் படைப்புகள் கண்காட்சிக்காக தயார்படுத்தலின்போதும்
படைப்பாளி சமூகமளித்தல் கட்டாயமானதாகும். 17. நடுவர்குழுவினால் எடுக்கப்படும் தீர்மானங்கள் இறுதி முடிவாகும்.
பணிப்பாளர் கலாசார அலுவல்கள் திணைக்களம் 08ம் மாடி, செத்சிறிபாய, பத்தரமுல்லை .
தொடர்புகளுக்கு:- 011-2882551 ஃ 011-2872031 மேலதிக விபரங்களுக்கு www.culturaldept.gov.lk என்ற இணையதளத்திலும் https://www.facebook.com/culturaldept.gov.lk/ என்ற முகநூல் முகவரி வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்ப படிவத்தை பதிவிறக்க
No comments