அரச சிறுவர் ஓவிய விழா - 2020
புத்த சாசன, கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சு,
கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும்
அரச கட்புலக்கலை ஆலோசனைக்
குழு ஏற்பாடு செய்கின்ற அரச சிறுவர் ஓவிய விழா - 2020
இன் ஆரம்ப சுற்றுக்கான ஓவியங்களை 2020 ஜனவரி 01 ஆம்
திகதி தொடக்கம் 2020 மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை
கொழும்பு - 07, தேசிய கலாபவனத்தில் ஏற்றுக்கொள்ளப்படும்.
இவ் ஓவியங்களிலிருந்து ஒரு மாவட்டத்திற்கு 150 ஓவியங்கள்
தேர்ந்தெடுக்கப்படுவதோடு தேர்ந்தெடுக்கப்படுவோர் இரண்டாம்
சுற்றுக்காக முன்னனுப்பப்படுவர். இரண்டாம் சுற்று போட்டி
மாகாண மட்டத்தில் விசேட பயிற்சி பட்டறை மூலம் நடாத்த
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் முதலாம் சுற்றின்
அனைத்து வெற்றியாளர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்
இரண்டாம் சுற்றில் தீட்டப்படுகின்ற ஓவியங்களிலிருந்து
தேர்ந்தெடுக்கப்படும் படைப்புக்கள் “2020 அரச சிறுவர் ஓவிய
விழாவிற்காக சமர்ப்பிக்கப்படும். இவற்றில் இருந்து
வெற்றிபெறும் பிள்ளைகளுக்கு அரச சிறுவர் ஓவிய விழாவின்
போது விருதுடன் பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள்
வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
போட்டி நிபந்தனைகள்
01. நீங்கள் விரும்பிய தலைப்பினை தெரிவு செய்துகொள்ளமுடியும்
02. நீங்கள் விரும்பிய வடிவத்தில் விரும்பிய மூலகத்தினைக்கொண்டு ஓவியம் தீட்டலாம்.
03. ஓவியம் 18*14 அங்குலத்தைப் கொண்டிருத்தல் வேண்டும்.
04. ஒருவர் ஒரு ஆக்கத்தினை மாத்திரமே போட்டிக்கு சமர்ப்பிக்க முடியும்.
05. போட்டியாளர்கள் நிரந்தர விதிவிட மாவட்டத்தில் இருந்து மட்டுமே விண்ணப்பிக்க
முடியும்.
06. அனுப்பப்படும் ஆக்கங்கள் இதற்கு முன்னர் வேறு எந்த போட்டிக்காகவும் சமர்பித்ததாக
இருக்கக்கூடாது.
07. ஓவியத்தின் பின்புறத்தில் கீழ்க்காணப்படும் விடயங்களை சரியான முறையில் தமிழ்
அல்லது ஆங்கில மொழியில் பூர்த்தி செய்தல் வேண்டும். இந்த விடயங்கள் சரியான முறையில் வழங்கப்படாத ஆக்கங்கள் போட்டியிலிருந்து நீக்கப்படும்.
08. சரியான முறையில் போட்டி நிபந்தனைகளுக்கு ஏற்ப சமர்ப்பிக்கப்படாத ஓவியங்கள்
மற்றும் பிழையான முறையில் நிரப்பப்படும் ஆக்கங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படும்.
09. தங்களால் அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் பிரபல நடுவர் குழாமினால் தெரிவு
செய்யப்படுவதோடு, தேர்ந்தெடுக்கப்படும் பிள்ளைகள் மாத்திரம் மாவட்டப்போட்டிக்காக தெரிவு செய்யப்படுவர். அத்தோடு போட்டி நடைபெறும் தினம், நேரம் மற்றும் இடம்
என்பன பின்னர் அறியத்தரப்படும்.
10. போட்டியின் நிமித்தம் சமர்ப்பிக்கப்படுகின்ற ஓவியங்கள் மீள கையளிக்கப்பட மாட்டாது.
No comments