பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பம்
பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பம்; 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்புகளே நடைபெறும் காலை 7.30 முதல் பிற்பகல் 3.30 வரை கல்வி செயற்பாடு.
நாடளாவிய அனைத்துப் பாடசாலைகளும் இன்று 11, 12 மற்றும் 13ம் வகுப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காகத் திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்தது. கொரோனா வைரஸ் சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கருத்திற்கொண்டு பாடசாலைகளைத் திறக்கும் காலங்கள் மற்றும் பரீட்சைகளை நடத்தும் தினங்களை திருத்தம் செய்வதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது. அதற்கிணங்க இன்று 11, 12 மற்றும் 13
மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நாடளாவிய அனைத்துப் பாடசாலைகளிலும் காலை 7.30 மணி முதல் பி. ப. 3.30 மணி வரை நடைபெறவுள்ளன.
ஏனைய வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஆகஸ்ட் 10ம் திகதி ஆரம்பமாகும். இந்நிலையில் இம்மாணவர்களை பாடசாலைக்கு அழைத்து பின்பற்றப்பட வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பில் சுகாதாரத்துறை அதிகாரிகளால் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதற்கிணங்க கல்வி அமைச்சின் மூலமும் விசேட ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதனைப் பின்பற்றி பாடசாலைகளை நடத்திச் செல்ல வேண்டும் என அதிபர் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. அதேவேளை எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக பாடசாலைகளைக் கையளிக்கவுள்ள பாடசாலைகளில் உள்ள அதிபர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கும் வகையில் அனைத்துப் பாடசாலைகளிலும் அதிபர்கள் மற்றும் பிரதி அதிபர்கள் எதிர்வரும் 28, 29, 30, 31 ம்திகதிகளில் பாடசாலைகளில் தரித்திருக்குமாறு கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நாட்களில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படாத விதத்தில் உதவித் தேர்தல் ஆணையாளர்கள் தேர்தல் நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளில் வழங்க வேண்டிய வசதிகள் தொடர்பில் அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவர் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Tags:- Schools,Reopens, Today, August, July, Teachers, Principal, Election, Voters, Lanka Educations, A/L, O/L, Vice principal, Stay, Learn Easy, lkedu
No comments