News

ஆத்தி சூடி - விளக்கவுரைகள், பாடல்

கடவுள் வாழ்த்து



ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

ஆத்தி-திருவாத்தி பூமாலையை சூடி-அணிபவராகிய சிவபெருமான் அமர்ந்த-விரும்பிய

தேவனை-விநாயகக் கடவுளை ஏத்தி ஏத்தி-வாழ்த்தி வாழ்த்தி தொழுவோம்-வணங்குவோம் யாமே-நாமே.


1.அறம் செய விரும்பு - நீ தருமத்தை(கடமையை)ச் செய்ய ஆவல் கொள்.

2. ஆறுவது சினம்  கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.

3. இயல்வது கரவேல் - உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு

4. ஈவது விலக்கேல் - ஒருவர் மற்றவர்க்கு கொடுப்பதைவேண்டாமென்று தடுக்காதே.

5.உடையது விளம்பேல்உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களை பிறர் அறியுமாறு சொல்லாதே.

6. ஊக்கமது கைவிடேல்எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது.

7. எண் எழுத்து இகழேல்கணிதஇலக்கண நூல்களைத் தினமும் தவறாமல் நன்கு கற்க வேண்டும்.

8. ஏற்பது இகழ்ச்சிஇரந்து வாழ்வது இழிவானதுஅதனால் யாசிக்கக் கூடாது.

9. ஐயம் இட்டு உண்யாசிப்பவர்கட்கு பிச்சையிட்டுப் பிறகு உண்ண வேண்டும்.

10. ஒப்புரவு ஒழுகுஉலக நடையை அறிந்துகொண்டுஅத்தோடு பொருந்துமாறு நடந்துகொள்.

11. ஓதுவது ஒழியேல் -நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.

12. ஔவியம் பேசேல் -ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.

13.அஃகஞ் சுருக்கேல்அதிக இலாபத்துக்காகதானியங்களை குறைத்து அளந்து விற்காதே.





-------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

 Tags:-  Lanka Educations, Learn Easy, lkedu, 

Get in Touch With Us to Know More
Like us on Facebook

No comments

Lanka Education. Powered by Blogger.