மாணவர்களின் திறன்களை அடையாளம் காண விசேட இலக்கம்
தரம் 1 இற்கு சேர்த்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 35 இலிருந்து 40 ஆக அதிகரிப்பதற்கு சட்ட அங்கீகாரம் கிடைத்திருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
உதவி ஆசிரியர்கள் இணைத்துக்கொள்ளும் அடிப்படையில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு அனுமதி கிடைத்திருப்பதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
நேற்று (29) நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இந்த நடைமுறைக்கு அமைவாக தேர்தலுக்கு பின்னர் இதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மாணவர்களின் ஆற்றல் மற்றும் திறன்கள் தொடர்பிலான தகவல்களை இலகுவாக அறிந்துகொள்ளக்கூடிய வகையில் ஒவ்வொரு மாணவருக்கும் விசேட இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த விசேட இலக்கம் பாடசாலை கட்டமைப்புக்குள் கல்வி நடவடிக்கைகள் நிறைவடையும் வரையில் செல்லுபடியாகும் என்றும் கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்தார். விடுமுறை வழங்கப்பட்டுள்ள அரச பாடசாலைகள் அனைத்தும் 10 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
No comments