உயர்தர வகுப்பு மாணவனின் புத்தாக்கத்தில் உருவான நாடிக் குழல் ஜனாதிபதியிடம் கையளிப்பு
உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் உருவாக்கிய இணைப்பற்ற நாடிக் குழல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷயிடம் கையளிக்கப்பட்டது. ஜனாதிபதி நேற்று முன்தினம் (13) முற்பகல் கண்டி வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு சென்ற சந்தர்ப்பத்தில் வெனுர விஜேசேகர என்ற உயர்தர மாணவன் தமது கண்டுபிடிப்பு தொடர்பாக ஜனாதிபதியை தெளிவுபடுத்தினார்.
உபகரணத்தை பரீட்சித்த ஜனாதிபதி, மாணவனின் திறமையை பாராட்டினார். வெனுர விஜேசேகர கண்டி திருத்துவக் கல்லூரியில் க.பொ.த உயர்தர கணிதப் பிரிவில் கல்வி கற்கின்றார். அவர் உருவாக்கிய நாடிக் குழலை இணைப்பின்றி பயன்படுத்த முடியும். அதன் மூலம் தனிநபர் இடைவெளியை பேணி நோயாளியை பரிசோதிப்பதற்கு வைத்தியருக்கு முடியும்.
மல்வத்து பீடத்தின் அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய நியங்கொட விஜித்தசிறி மற்றும் தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல பண்டார உள்ளிட்ட பலர் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.
(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)
Tags:- A/L, Student, Invention, President, Kandy, Lanka Educations, Learn Easy, lkedu
No comments