News

பல்கலைக்கழகம் இல்லாத மாவட்டங்களில் உயர் தொழிநுட்ப நிலையங்கள் அமைக்கத் தீர்மானம்!


நாட்டில் இதுவரை பல்கலைக்கழகம் அமைக்கப்படாத 10 மாவட்டங்களில் உயர் தொழிநுட்ப பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, களுத்துறை, காலி, ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, அனுராதபுரம், மாத்தறை, புத்தளம், மன்னார், முல்லைத்தீவு மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் குறித்த உயர் தொழிநுட்ப பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படவுள்ளன.
அத்துடன், ஒரு வருட காலப்பகுதிக்குள் குறித்த பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இதன்மூலம் நாட்டில் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 25ஆக அதிகரிக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Tags;- Universities, Advanced, Technical, College, Districts, Lanka Educations, Ministry, Media person, Learn Easy, lkedu

No comments

Lanka Education. Powered by Blogger.