பல்கலைக்கழக இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களின் கவனத்துக்கு
அனைத்து பல்கலைக்கழகங்களினதும் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான திகதியை தீர்மானிக்கும் பொறுப்பு பல்கலைக்கழகங்களின் உப வேந்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இன்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் கருத்துத் தெரிவித்தார்.
அதற்கேற்ப, 11 நிபந்தனைகளுடன் இன்று முதல் பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும்
ஒரு பீடத்தில் ஒரே தடவையில் இரண்டு வருட மாணவர்களை மாத்திரம் அழைத்தல் இதன் முதல் நிபந்தனையாகும். இறுதி வருட மற்றும் மூன்றாம்
பரீட்சைக்கு முன்னரான எந்த கல்வி நடடிவக்கைகளும் நான்கு வாரங்களுக்கு மேற்படக் கூடாது.
இறுதி வருட மருத்துவ பீட மாணவர்களுக்கு பயிற்சியை ஆரம்பிக்க முடியும். அதற்கான அனுமதியை குறித்த பீடங்கள் மேற்கொள்ளும்.
பல் வைத்தியம் மற்றும் ஆயுள்வேத மருத்துவம் ஆகியவற்றின் இறுதி வருட மாணவர்களின் பயிற்சியை ஆரம்பிக்க முடியும்.
கற்றல் நடவடிக்கைகள் முடிந்த கையோடு மாணவர்கள் வீடுகளுக்கு மீளச் செல்ல வேண்டும்.
பல்கலைக்கழக வளாகம், மாலை 7 மணிக்குப் பின்னர் எந்தக் காரணத்திற்காகவும் திறக்கப்படமாட்டாது.
விளையாட்டு, சமூக வேலைகள், மற்றும் ஏதேனும் ஒன்று சேரல் முதலானவற்றுக்கு அனுமதியில்லை .
பலக்லைக்கழகத்தை நடாத்திச் செல்லுவதற்கு தேவையான கல்வி சார், கல்வி சாரா ஊழியர்களின் பங்கேற்பை பெற்றுக் கொள்வது உபவேந்தர்களின் தீர்மானமாகும்.
எனினும், பல்கலைக்கழகங்களின் முதலாம் வருட மாணவர்களின் கற்றல் நட்டிவக்கைகளை ஆரம்பிப்பதற்கான தீர்மானம் இன்னமும் எட்டப்படவில்லை என பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.
No comments