மூடப்பட்டிருந்த பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் 113 நாட்களின் பின்னர் கல்வி நடவடிக்கைகளுக்கா இன்று திறக்கபப்பட்டது. கட்டம் கட்டமாக பாடசாலைகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு அமைய இன்று 5ஆம், 11ஆம் மற்றும் 13 தர மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கை மாத்திரம் இடம்பெறுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 13 ஆம் திகதி முதல் சகல பாடசாலைகளும் மூடப்பட்டன. அறநெறி பாடசாலைகள மேலதிக வகுப்புக்கள் என்பனவும் மூடப்பட்டன. கடந்த வாரம் பாடசாலையை ஆரம்பிக்க முதல் கட்ட நடவடிக்கை இடம்பெற்றது. அதன் போது ஆசிரியர்கள் மற்றும் கல்விசார் ஊழியர்கள் மாத்திரமே வரவழைக்கப்பட்டனர்.பாடசாலை நேர அட்டவனை சுகாதார பாதுகாப்பு வேலைத்திட்டங்களை தயாரித்தல் மற்றும் பாடசாலை வளாகத்தை தொற்று நீக்கம் செய்தல் ஆகியன கடந்த வாரம் இடம்பெற்றன. இன்றைய தினம் பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் பாடசாலை சுற்றாடல் சுத்தப்படுத்தப்படடுவதை காணக்கூடியதாக இருந்தது.
13ஆம் தர மாணவர்களுக்கு கலை 7.30 மணி மதல் மாலை 3.30 மணி வரை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும். 5ஆம் தர மற்றும் சாதாரண தர பரீட்சைக்க தோற்றுகின்ற மாணவர்களுக்கு காலை 7.30 மணி முதல்பிற்பகல் 1.30 மணி வரை கற்பித்தல் நடவடிக்கைகள் இடம்பெறுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் 3ஆம் கட்டத்தின் கீழ் 10 ஆம் மற்றும் 12ஆம் தர மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் .4 ஆம் கட்டம் ஜூலை மாதம் 27 ஆம் திகதிn அரம்பமாகும். அதன் போது 3ஆம் 4ஆம் 6ஆம் 7ஆம் 8ஆம் 9ஆம் தர மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும். ஆகஸ்ட் 10 ஆம் திகதி முதல் சகல வகுப்புக்களுக்குமான பாடசாலை கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று ஆரம்பமாகும்.
இதேவேளை பாடசாலை நடவடிக்கைகள் ஆரம்பமாகும் நிலையில் பாடசாலை வேன்களை தொற்று நீக்கத்திதற்கும் உட்படுத்துமம் நடவடிக்கையும் இடம்பெற்றது. நாட்டின் பல பிரதேசங்களில் இவற்றை காணக்கூடியதாக இருந்தது.
No comments