News

வகுப்பறைக் கற்றல்-கற்பித்தல் உயிரோட்டமாக அமைவதற்கு




வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் செயற்பாடு உயிரோட்டமாக அமையும் பட்சத்திலேயே இன்றைய சமூகம் எதிர்பார்க்கும் மாணவர்களை உருவாக்க. மாணவர்கள் மத்தியில் விரும்பத்தக்க மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டுமாயின் திறமையாகவும் வினைத்திறனாகவும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் அமைய வேண்டும். கற்றல்   என்றால் என்ன? கற்பித்தல் என்றால் என்ன? கற்றல் கற்பித்தல் உயிரோட்டமாக அமைய என்ன செய்ய வேண்டும்? இதுபோன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை காணும் போதே இது பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.

“கற்றல்” என்பது நடத்தை மாற்றம் ஆகும். அதாவது அவதானம், பயிற்சி அல்லது செயலில் ஈடுபடல் என்பவற்றின் அடிப்படையில் நிலைத்திருக்கும் நடத்தை மாற்றம் என லொவெல் கூறுகின்றார். நீண்டதும் உறுதியானதும் நிலைத்து நிற்பதுமான ஒரு நடத்தை மாற்றம் கற்றல் என மெல்வின் H.மார்க் குறிப்பிடுகின்றார். மேலும் கற்றல் தொடர்பாக பல்வேறு உளவியலாளர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர் அதாவது கற்றலானது நடத்தையில் ஏற்படும் மாற்றம் இது உறுதியானது எனவும் கற்றலில் மூலம் பெறப்படும் விளைவுகளை நடத்தையை அவதானித்து அதன்  மூலம் தீர்மானிக்க வேண்டியுள்ளது. அனுபவம் அவதானம் பயிற்சி நடத்தை இயக்கம் ஆகியவற்றின் மூலம் மனிதனிடத்தில் கற்றல் ஏற்படுகின்றது. மேலும் முதிர்ச்சியினால் ஏற்படும் மாற்றம் கற்றல் என்பதைவிட கற்ற நிகழ்வதற்கு அனுபவமே அடிப்படையாகும். எனவும் ஒருவரது ஆளுமையை முழுமையாகப் வெளிப்படுத்துவதற்கு உதவும் வழிகளில் ஒன்றாகும். கற்றல் என்பது எந்த இடத்திலும் எந்த நேரமும் இடம் பெறலாம். என்பது இவர்களின் கருத்தாகும் ஒரு உயிரிடம் குறிப்பிட்ட ஒரு வகைக் கற்றலை ஏற்படுத்த வேண்டுமாயின் கற்றலின் இயல்பு அதனை தாக்கும் காரணிகள் கற்றலுக்கான சூழ்நிலை ஆகியன பற்றிய அறிவு தேவையாகும்.

“கற்பித்தல்” என்பது “வகுப்பறையில் ஆசிரியர் என்ன கற்பிக்கின்றாரோ அது தான் கற்பித்தல்” என்று மிக பொதுவாக மற்றும் எளிமையாக பதில் சொல்லலாம். பாடசாலையில்  பல்வேறுபட்ட ஆசிரியர்கள் இருப்பதால் அவர்கள் பல்வேறு வகையான கற்பித்தலை கையாளுகின்றனர். ஆரம்பக் காலத்தில் நமது வகுப்பறை வழக்கத்தில் ஆசிரியர்கள் ஆதிக்கம் செலுத்துவதால் ஆசிரியர் மையமாக இருந்தது. இதில் வகுப்பறையில் நடக்கும் அனைத்தும் ஆசிரியரால் தீர்மானிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்படுகின்றது. மாணவர்கள் வகுப்பறையில் நடத்தப்படும் கற்றல்-கற்பித்தல் முறைகளை குறித்து எதுவும் சொல்வதில்லை. ஆசிரியர்கள் மாணவர்கள் விரும்பியதை செய்ய அறிவுறுத்துகின்றார். மற்றும் இயக்குகின்றார்கள் கற்பித்தல் என்பது பாடத்திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள தகவல்கள் உண்மைகள் மற்றும் கருத்துக்களை மாணவர்களுக்கு கல்வி. எனினும் ஆசிரியர் மையமாக இருந்த வகுப்பறை மாணவர் மையமாக மாற்றுவதன் மூலம் ஆசிரியர்கள் மற்றும் கற்பித்தல் பழக்கம் மாற்றி அமைக்கப்பட்டதால் மாணவர்கள் மட்டும் கற்றலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதை காணலாம்.
 

வகுப்பறையில் கற்றல் கற்பித்தல் செயன்முறையானது உயிரோட்டமாக திகழ்வதற்கு ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது. ஆசிரியரானவர் வகுப்பறையில் உள்ள அனைத்து மாணவர்களையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். வகுப்பறையிலுள்ள அனைத்து மாணவர்களும் திறமையுடையவர்களாக இருப்பார்கள் என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும். இதற்கேற்ப கற்பித்தல் பணியை மேற்கொள்ள வேண்டும்.ஆசிரியர் கற்பிக்கும் போது அந்த வகுப்பில் உள்ள மாணவர்கள் அனைவரும் ஆசிரியரின் கற்றல் செயற்பாட்டினை  கவனத்தில் கொள்ளும் வகையில் கற்றலை மேற்கொள்ள வேண்டும். இதற்காக ஆசிரியர்கள் பல்வேறு விதிமுறைகளை கையாள வேண்டியது அவசியமாகும்.

இதனடிப்படையில் பாடத்துடன் தொடர்புடைய உபகரணப் பயன்பாட்டினை கையாளுவதன் மூலம்  எந்த ஒரு பாடத்தையும் உயிரோட்டமாக கற்பிக்க முடியும். இதற்காக உண்மை பொருட்கள் இல்லாவிட்டால் மாதிரி பொருட்களையாவது பயன்படுத்துவது சிறந்தது. குறிப்பாக ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கு விரிவுரையிலான கற்பித்தலை மேற்கொள்வது அவ்வளவு சிறந்ததாக அமையாது. மேலும் உளவியலாளர்களின் கருத்தின் பிரகாரம் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு முறை கற்றல் முறைகளை மாற்றி கற்பித்தல் வேண்டும்.அவர்களது கவனகளைப்பின்றி மாணவர்கள் தொடர்ச்சியாக கற்றல் அவதானம் செலுத்துவார்கள். அந்த வகையில் கற்றல் முறைகளில் மாற்றம் கொண்டு கற்பிக்கின்ற போது மாணவர்களிடையே சிறந்த பெறுபேற்றினை பெற முடியும்.

குறிப்பாக ஆரம்பக்கல்வி பயிலும் மாணவர்கள் கனிஷ்ட இடை நிலைக்கு வருகின்ற போது, சில மாணவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. இதற்கான காரணம் ஆரம்ப வகுப்புகளில் மாணவர்கள் கற்க வேண்டியவற்றை கற்காமல் மேல் வகுப்புக்கு வகுப்பேற்றப்படுவதனாலாகும். மாணவர்கள் ஒவ்வொரு நிலையிலும் அடைய வேண்டிய தேர்ச்சிகளை இனங்கண்டு, எல்லா மாணவர்களுக்கும் ஆரம்ப கல்வியை சிறப்பான முறையில் வழங்குகின்ற போது அவர்கள் மேல் வகுப்புகளிலும் சிறப்பாக இயங்குவார்கள். இல்லையேல் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் என்பதையும் ஆசிரியர் உணர வேண்டும். மேலும் கற்றல் செயற்பாடானது மிகவும் சிறந்து அமைய வேண்டுமாயின் வகுப்பறை சூழலானது பொருத்தமானதாகவும் விரும்பத்தக்க முறையிலும் அமைக்க வேண்டும் பாடசாலை சூழலைப் பொறுத்து அமையும் சூழல் அமையும் பட்சத்தில் மாணவர்களின் வரவு விகிதம் அதிகரிப்பதோடு கற்றலின் விருப்பமும் ஏற்படும்.

அத்தோடு கற்றல்-கற்பித்தல் செயற்பாடானது உயிரோட்டமாக அமைய வேண்டுமாயின் ஆசிரியர் மாணவர் தொடர்பு அவசியம். ஆசிரியர்கள் மாணவர்களுடன் சகஜமாக பழகும் போதே அவர்கள் ஆசிரியர்கள் மீது விருப்பம்கொண்டு கற்றல் செயற்பாட்டில் ஆர்வம் காட்டுவர். நடைமுறையில் பல்வேறு உதாரணங்களை நாம் கண்கூடாகப் பார்க்கலாம் ஒரு குறிப்பிட்ட பாடத்தை மாணவர்கள் ஏன் அதிகமாக விரும்புகின்றனர். குறிப்பிட்ட பாடத்தில் மாத்திரம் ஆர்வம் காட்ட காரணம் என்ன? மேலும் அதிகமான புள்ளிகளை குறிப்பிட்ட பாடத்தில் பெற காரணமாக என்னவாக இருக்கும்? என்பதை  நோக்கும்போது குறிப்பிட்ட அந்தப் பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர்கள் மீதான விருப்பமாகவே அமையும். மேலும் கற்பித்தல் என்பது ஆசிரியர் கற்பவர் உறவு என்கின்ற அர்த்தத்தினையும் தருகிறது எனவேதான் மாணவர்களின் நிலை அறிந்து மாணவர்களுக்கு ஏற்ற விதத்தில் கற்றல் கற்பித்தல் செயல்பாட்டினை மேற்கொள்ள வேண்டும்.

மாணவர்கள் இன்றைய சமூகப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் அளவுக்கு அவர்களின் கல்வியானது அமையவேண்டும்.என்பதற்கிணங்க கற்றல் கற்பித்தல் செயற்பாடு அமைய வேண்டும் அதாவது தரம் ஒன்றிலிருந்து தரம் 5 வரையான வகுப்புகளில் முதன்மை நிலை 1 முதன்மை நிலை 2 முதன்மை நிலை 3 என்று வகுக்கப்பட்டு ஒவ்வொரு நிலையிலும் கற்கும் மாணவர்கள் அந்த நிலை முடிவடைகின்ற போது அத்தியாவசிய தேர்ச்சிகளை அடைந்து கொள்வதில் ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும்.



மேலும் ஆரம்ப கல்விக்கான கலைத்திட்டத்தில் மாணவர்கள் அடைய வேண்டிய தேர்ச்சிகள் யாவும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாடப்புத்தகங்கள்,செயல் நூல்கள், ஆசிரியரிடம் உள்ள ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி நூல்கள், பாடத்திட்டம், கற்றல் சாதனங்கள் ஊடாக தொடர்பாடல்,சுற்றாடல், சமய ஒழுக்கப் பண்புகள், விளையாட்டும் ஓய்வும், கற்றலுக்காக கற்றல் இவையாற்றிலும் தேர்ச்சிகள்  அறிவுறுத்தப்ப்பட்ட வண்ணமே உள்ளன. இதனை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர்களின் கற்பித்தல் நடைபெறும் எனின் சிறந்த தேர்ச்சி மட்டத்தை மாணவர்களினால் அடைய முடியும். அவ்வாறு தேர்ச்சிகள் அடையாத விடத்து அதற்குரியவாறு கற்றல் முறைகளை மாற்றியமைத்து மீண்டும் ஒரு முறை பரீட்சித்துப்பார்த்தல் அவசியமாகும்.

பொதுவாக வகுப்பறையில்  மீத்திறன் கொண்ட மாணவர்கள், சாதாரணமான மாணவர்கள்,மெல்ல கற்கும் மாணவர்கள் காணப்படுவார்கள். இவர்களை இனங்கண்டு கற்பித்தல் முறைகளை கையாளவேண்டும். வகுப்பறையில் உள்ள ஒவ்வொரு மாணவனும் ஏதாவது ஒரு வகையில் திறமை உடையவன் அதனை அடையாளம் கண்டு திறமையை வெளிக்கொண்டு வருவது ஆசிரியரின் தலையாய கடமையாகும். இவர்களின் நிலையை அறிந்து அதற்கேற்ப கற்பித்தல் பணியை செய்வதன் மூலம் சிறந்த பயனை அடைய முடியும். 



 மகாலிங்கம் சத்திலா 
2ம் வருட சிறப்புக் கற்கை
கல்வி பிள்ளை நலத் துறை
கிழக்கு பல்கலைக்கழகம்

No comments

Lanka Education. Powered by Blogger.