A/L - உயிரியல் - கழிவகற்றல் - பாட விளக்கக் குறிப்புக்கள்
அனுசேபத்தின் போது தோன்றுகின்ற மேலதிகமான, உடலிற்கு தேவையற்ற, நச்சுத் தன்மையை ஏற்படுத்துகின்ற விளைவுகள் கழிவுகள் எனப்படும். அனுசேபத்தின் போது தோன்றுகின்ற கழிவுப் பொருட்களை உடலில் இருந்து வெளியகற்றுதல் கழிவகற்றல் எனப்படும். இப்பதார்த்தங்கள் உடலிலிருந்து அகற்றப்படாவிட்டால் உடலில் நச்சுத் தன்மையான விளைவுகள் தோன்றும். உடலில் பிரதானமாக 3 கழிவுப் பொருட்கள் உருவாக்கப்படுகின்றன.
- காபனீரொட்சைட்டு(CO2)
- அமோனியா(NH3)
- நீர்(H2O)
சகல அங்கிகளினதும் கழிவகற்றலின் முதன்நிலை விளைவு அமோனியா ஆகும். சமிபாட்டுச் செயற்பாட்டின் விளைவாக தோன்றும் மலம் கழிவாக கருதப்படாது. சமிபாட்டு விளைவுகளை வெளியேற்றுதல் மல நீக்கமே அன்றி கழிவகற்றல் அல்ல.
பின்வரும் வழிகளில் மேற்படி கழிவுகள் உருவாகின்றன.
புரதத்திலுள்ள Aminoacid பின்வருமாறு மாற்றத்திற்குட்படும்.
ஈரலில் ஒனித்தைன் சக்கரத்தின் மூலம் யூரியா உருவாக்கப்படும்.
அமோனியா மென்காரத் தன்மையானது. காபனீரொடசைட்டு மென்னமிலத் தன்மையானது. இவற்றின் செறிவுகளில் ஏற்படும் மாற்றம் அமில கார சமநிலையில் பாதிப்பை ஏற்படுத்துவதால் புரதங்கள் அமைப்பழிவிற்குட்படும். இதனால் ஒருசீர்த்திடநிலை பாதிக்கப்படும்.
கழிவுகள் இரு வகைப்படும்.
கழிவுப்பொருட்கள்
அமோனியா (NH3)
நீரில் நன்கு கரையக்கூடியதாகும். அமோனியாவானது நரம்பு தொகுதிக்கு தீவிர நஞ்சாகும். இது உடல் மேற்பரப்பிலிருந்து பரவல் மூலம் அகற்றப்படும்.
அனுகூலங்கள்பிரதிகூலங்கள்
- காபன் இழப்பு இல்லை.
- இது முதல் நிலை விளைவாகையால் தொகுப்பின் போது சக்தி விரயமாக்கப்படுவதில்லை.
- இலகுவில் பரவக்கூடியதாகும்.
- நச்சுத் தன்மை கூடியதாகும்.
- இதனை அகற்றுவதற்கு பெருமளவில் நீர் தேவையாகும்.
உதாரணம் :-
- நீர்வாழ் முள்ளந்தண்டிலிகள்.
- முள்ளந்தண்டு விலங்குகளின் நீர் வாழ் குடம்பிப் பருவங்கள்.
- நன்னீர் வாழ் மீன்கள்.
- Protozoa க்கள்.
யூரியா (CO(NH3)2)
அமோனியா காபனீரொட்சைட்டுடன் தாக்கமுற்று யூரியா உருவாக்கப்படும். இது நச்சுத் தன்மை குறைந்ததாகும். அமோனியாவுடன் ஒப்பிடும் போது குறைந்தளவிலேயே நீரில் கரையும்.
அனுகூலங்கள்பிரதிகூலங்கள்
- குறைந்தளவு நச்சுத்தன்மை கொண்டதால் சேமித்துக் கொள்ளலாம்.
- அகற்றுவதற்கு குறைந்தளவு நீர் போதுமாகையால் நீர்க் காப்பில் உதவும்.
- காபன் இழப்பு அதிகம்.
- ஈரலில் உருவாக்கப்பட சக்தி அவசியம்.
உதாரணம்:-
- நிறையுடலி Amphibia.
- Mammalia
- கசியிழைய மீன்கள்
- உவர் நீர் என்பு மீன்கள்.
- சில நன்னீர் என்பு மீன்கள்.
யூரிக்கமிலம்
நீரில் கரையுந் தன்மை மிகக் குறைவாகும். யூரிக்கமிலமானது பகுதித் திண்மமாக அல்லது திண்மமாக வெளியேற்றப்படும். யூரிக்கமிலமாக அல்லது அதன் Urate ஆக அகற்றப்படும்.
அனுகூலங்கள்பிரதிகூலங்கள்
- அமோனியா, யூரியா உடன் ஒப்பிடும் போது நச்சுத் தன்மை குறைவு.
- உடலில் களஞ்சியப் படுத்தக்கூடியது.
- கழிவகற்றலுக்கு நீர் மிகக்குறைவாக அல்லது தேவைப்படாது.
- நீர்க்காப்பில் உதவும்.
- காபன் இழப்பு அதிகம்.
- இது தொகுக்கப்படுவதற்கு அதிகளவு சக்தி விரயமாக்கப்படும்.
உதாரணம்:-
- Crustacea தவிர்ந்த Arthropodas
- Reptelia
- Aves
கிரியற்றினின்
(முள்ளந்தண்டுலிகளில்) தசைகளில் காணப்படும் Creatin எனும் பதார்த்தத்தின் சிதைவினால் தோற்றுவிக்கப்படும். உடலில் இருந்து சிறுநீரகங்களுக்கூடாக மாத்திரம் முழுமையாக வெளியேற்றப்படும்.
காபனீரொட்சைட்டு
சுவாச அங்கம்/ சுவாசப்பைகளால் வெளியேற்றப்படும்.
பித்த நிறப்பொருட்கள்
ஈரலினால் தொகுக்கப்பட்டு சிறுநீரகம், குடலினால் கழிவகற்றப்படும்.
விலங்குகளில் கழிவகற்றல் அங்கங்கள்
கழிவகற்றல் இடம்பெறும் மேற்பரப்பு கழிவகற்றல் மேற்பரப்பு எனப்படும். பின்வருவன விலங்குகளில் கழிவகற்றல் மேற்பரப்புக்களாகத் திகழ்கின்றன.
01.உடல் மேற்பரப்பு
அங்கிகளின் கலங்கள் சூழலுடன் நேரடித் தொடர்புடையவையாகக் காணப்படும். கழிவுப்பொருட்கள் பரவல் மூலம் உடனடியாக வெளியேற்றப்படும். ஒப்பீட்டளவில் எளிய கட்டமைப்பாகும்.
02. சுருங்கத்தக்க புன்வெற்றிடம்
குழியவுருவினுள் காணப்படும் மென்சவ்வால் சூழப்பட்ட புன்னங்கமாகும்.
உதாரணம்:-
- Amoeba
- Parameciun
03. சுவாலைக் கலங்கள்
தனிக்கலத்தால் ஆன கழித்தல் கட்டமைப்பாகும். இவை தனல் போன்ற பிசிர்களைக் கொண்டிருப்பதால் சுவாலைக் கலங்கள் என அழைக்கப்படுகின்றன.
உதாரணம்:-
Platyhelminthes
04. கழிநீரகங்கள்
உடலின் உட்புறமாகவும், வெளிப்புறமாகவும் திறந்த குழாயுருவான கட்டமைப்புக்கள் ஆகும். பல் கலத்தாலானவை. குருதிக் கலன் தொகுதியுடன் தொடர்புடையவை.
உதாரணம்:-
மண்புழு போன்ற Annelidaக்கள்
05.மல்பீஜியன் சிறுகுழாய்கள்
பூச்சிகளில் காணப்படும் கழிவகற்றல் கட்டமைப்புக்களாகும்.
உதாரணம்:-
கரப்பான்
06. பசுஞ்சுரப்பிகள்/ உணர் கொம்பு சுரப்பிகள்
Crustacea க்களில் காணப்படும். இவற்றில் தலையின் வயிற்றுப்புறமும், களத்துக்கு முன்புறமும் இரு பெரிய பசுஞ்சுரப்பிகள் காணப்படுகின்றன. உடலிலிருந்தும், உடற்பாயியிலிருந்தும் கழிவுகளை அகற்றும்.
உதாரணம்:-
இறால்
07. வியர்வைச் சுரப்பிகள்
முழு மனிதத் தோலிலும் காணப்படும். உட்தோலில் காணப்படும் சுருளடைந்த குழாயுருவான சுரப்பிகள் ஆகும். வியர்வைக் கானுடன் இணைக்கப்பட்டு தோலின் மேற்பரப்பிலுள்ள துவாரனத்தினுடாக வெளித்திறக்கும்.
08. உப்புச் சுரப்பிகள்
கடல்வாழ் பறவைகள், ஊர்வன என்பவற்றில் கண்களிற்கு அண்மையாகக் காணப்படும். கடல்வாழ் பறவைகள் கடல் நீரில் அருந்திய உப்பை உப்புச் சுரப்பிகளினூடாக வெளியேற்றுகின்றன.
அங்களில் காணப்படும் கழிநீரக வகைகள்
01. முதற் கழிநீரகம்
கழிநீரக வாயில்கள் மட்டும் காணப்படும். உடற்குழியின் முற்பக்கத்தில விருத்தியடையும். இவை திறக்கும் கான்கள் (முதற் கழிநீரக கான்கள்) பின் நோக்கிச் சென்று கழியறையில் திறக்கும்.
உதாரணம்:-
அனம்நியோட்டாக்களின் முளையம்
கசியிழைய மீன்கள்
கசியிழைய மீன்கள்
02. இடைக் கழிநீரகம்
கழிநீரக வாயில்களுடன் போமனின் உறை காணப்படும். உடலின் இடைப்பகுதியில் உருவாகும். இவை திறக்கும் கான்கள் (இடைக் கழிநீரகக் கான்கள்) கழியறையில் திறக்கும்.
உதாரணம்:-
அனம்நியோட்டாக்களின் நிறையுடலி
அம்நியோட்டாக்களின் முளையம்
அம்நியோட்டாக்களின் முளையம்
03. அனுக் கழிநீரகம்
போமனின் உறைகள் மட்டும் காணப்படும். உடற்குழியின் பிற்பகுதியில் தோற்றுவிக்கப்படும். போமனின் உறைகளைக் கொண்ட சிறுநீரகத்திகள் ஓரிடப்படுத்தப்பட்டு சிறுநீரகங்கள் தோற்றுவிக்கப்படும். சிறுகுழாய்கள் ஒன்று சேறும் கான் சிறுநீர்க் கான் எனப்படும். இது சிறுநீர்ப்பையில் திறக்கும்.
உதாரணம்:-
அம்நியோட்டாக்களின் நிறையுடலி
மனித கழித்தலங்கங்கள் click here
-------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !
No comments