News

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கட்டமைப்பில் மாற்றம்

2020ஆம் ஆண்டு மற்றும் அதற்குப் பின்னர் நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வினாத்தாள் கட்டமைப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதன்படி பகுதி I ஆனது  40 பல்தேர்வு வினாக்களை கொண்டிருப்பதோடு விடை அளிப்பதற்காக இதுவரை வழங்கப்பட்ட 45 நிமிடங்களுக்கு பதிலாக ஒரு மணித்தியாலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

வினாத்தாள் II ஏற்கனவே உள்ளவாறு சுற்றாடல் தொடர்பான  30 பல்தேர்வு வினாக்கள் வழங்கப்படுவதோடு  நான்கு தெரிவுகளுக்குப் பதிலாக 3 தெரிவுகளுடன்  கூடியதாக அமையும் மற்றும் வினாத்தாள் கட்டமைப்பில் இது தவிர வேறு எந்த மாற்றங்களும் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:- Scholarship, Grade 5, Exam, Structure, Lanka Educations, Learn Easy, lkedu, News, Sri lanka, Department, Education

No comments

Lanka Education. Powered by Blogger.