News

இதயத்தின் கட்டமைப்பும், தொழிற்பாடும்.

இதயத்தின் கட்டமைப்பும், தொழிற்பாடும்.

 
மனித இதயம் 4 அறைகளைக் கொண்டது. மேற்புறம் 2 சோணையறைகளையும், கீழ்ப்புறம் 2 இதயவறைகளையும் கொண்டது. சோணையறைகளிலும் பார்க்க இதயவறைகளின் சுவர் அதிக தடிப்பைக் கொண்டது. இவற்றுள்ளும் இடது இதயவறையின் சுவர் அதிக தடிப்பைக் கொண்டது. சோணையறைகள் சோணையறை இடை பிரிசுவர் மூலமும், இதயறைகள் இதயவறை இடைபிரிசுவர் மூலமும் பிரிக்கப்பட்டிருக்கும். வலது சோணையறையும், வலது இதயவறையும் வலது சோணை இதயவறை இடை பிரிசுவர் மூலமும், இடது சோணையறையும், இடது இதயவறையும் இடது சோணை இதயவறை இடைபிரிசுவர் மூலமும் பிரிக்கப்பட்டிருக்கும். இவ்விரு சுவர்களிலும் முறையே முக்கூர், இருகூர் வால்வுகள் காணப்படும். வால்வுகள் கூம்பிய, கீழ் நோக்கிய, மத்தியில் துவாரம் கொண்ட அமைப்புக்கள் ஆகும். வால்வுகள் இதயறையின் உட்புற மேற்பரப்பில் காணப்படும் இதயச் சிம்பிகளுடன் இதய நாண்கள் மூலம் இணைக்கப்பட்டிருக்கும்.

இதய வட்டம்.

,ரு சோணையறைகளும் சுருங்கும் போது குருதி முக்கூர், இருகூர் வால்வுகளுக்கூடாக இதயவறைகளை வந்தடையும். சோணையறைகளின் சுருக்கத்திற்கு 0.1 செக்கன் செல்லும். சோணையறைகள் கீழ் நோக்கி இதயவறைக்கு குருதியை அனுப்பும். இரு இதயவறைகளும் சுருங்கும் போது அறைமதி வால்வுகளுக்கூடாக குருதி சுவாசப்பை பெருநாடி, தொகுதிப் பெருநாடியை அடையும். இதற்கு 0.3 செக்கன் செல்லும்.
சுருக்கமடைந்த சோணையறைகளும், இதயவறைகளும் முற்றாகத் தளர்வடையும். இதற்க 0.4 செக்கன் செல்லும். இவ்வாறான இதயத்தின் தொழிற்பாடு இதய அடிப்பு எனப்படும். ஒரு பூரண இதயவடிப்பின் போது நிகழும் செயற்பாடுகளின் தொடர் ஒழுங்கே இதய வட்டம் எனப்படும்.

மின் இதய வரையம்(ECG)

இதயத் தசைகள் சுயமான சந்தத்துடன் சுருங்கி விரியக்கூடியன. இதில் பின்வரும் பகுதிகள் பங்குபற்றும்.
  • S.A கணு(குடாச் சோணைக்கணு)
  • A.V கணு (சோணை இதயவறைக் கணு)
  • ஹிஸ்ஸின் கட்டு
  • பேர்கின்ஜே நார்கள்
S.A கணு வலது சோணையறைச் சுவரின் மேற்பெருநாளம் திறபடும் இடத்திற்கருகில் காணப்படும். இதில் இதயத் தசைநார்களும், சில தன்னாட்சி நரம்பு முடிவிடங்களும் காணப்படும். இதுவே, இதயத் துடிப்பை ஆரம்பிக்கும் கணுவாகும். சோணையறைகளின் தளர்ச்சியினால் ளு.யு கணு முனைவழிவிற்குள்ளாகி உருவாகும் தாக்க அழுத்தத்தின் மூலம் சோணையறைச் சுவர்கள் தூண்டப்பட்டு மேலிருந்து கீழாக சுருங்கும். இது 1m/s வேகத்துடன் செல்லும். இச்சுருக்கம் இதயவறைகளைச் சென்றடைதல் சோணை இதயவறை பிரிசுவரினால் தடுக்கப்படும்.
S.A கணுவிலிருந்து வரும் தூண்டலினால் A.V கணு அருட்டப்படும். A.V கணு இதயத்தின் பிரிசுவரிற்கருகில் சோணை இதயவறை வால்வுகளுக்கு நெருக்கமாகக் காணப்படும். இதிலிருந்து உருவாக்கப்படும் தாக்க அழுத்தம் ஹிஸ்ஸின் பட்டிகை (சோணை இதயவறை பட்டிகை) மூலம் இதயவறையின் கீழ்ப்பகுதிக்கு கடத்தப்படும். A/V கணுவிலிருந்து ஆரம்பிக்கும் ஹிஸ்ஸின் பட்டிகைகள் நுண்ணிய பேர்கின்ஜே நார்களால் ஆனது.
பேர்கின்ஜே நார்கள் விசேட இதயத் தசை நார்களாகும். இது இரண்டு கிளைகளாகப் பிரிந்து இதயவறைகளின் இரு பக்க சுவர்களிற்கும் செல்லும். இதன் மூலம் கடத்தப்படும் மின் கணத்தாக்கங்கள் மூலம் இதயவறைகள் கீழிருந்து மேலாகச் சுருங்கும். இதயவறைகளின் சுருக்கம் 5m/s வேகத்துடன் இடம்பெறும்.
இதயத்தசை நார்களின் மென்சவ்வுகளில் ஏற்படும் மின்னழுத்த மாற்றங்களை உடலின் மேற்பரப்பில் மின்வாய்களை பொருத்துவதன் மூலம் அறியலாம். இவ்வாறான அழுத்த மாற்ற கோலங்களை அலைவு காட்டியினூடாக அவதானிக்கலாம். இது மின் இதயவரையம (ECG) vனப்படும். இதய வட்டங்கிடையே அல்லது அவற்றின் பகுதிகளுக்கிடையேயான நேர இடைவெளிகளையும், அலைகளின் கோலத்தையும் ஆராய்வதன் மூலம் இதயத்தசை நார்களின் நிலை பற்றி கூறலாம்.
P - சோணையறைகளின் சுருக்கம்
Q, R, S - இதையவறைகளின் சுருக்கம்
T - இதையவறைகளின் தளர்வு

இதய ஒலிகள்

இதயம் 'லப்' , 'டப்' என்ற ஒலிகளை ஏற்படுத்தும். லப் சுருதி கூடியது. இதயவறைத் தசைகள் சுருங்கும் போது சோணை இதயவறை வால்வுகள் மூடிக்கொள்ளும். இதன் போது இவ்வோலி ஏற்படும்.
டப் சுருதி குறைந்தது. நாடிகளினுள் குருதி சென்ற பின் அரைமதி வால்வுகள் மூடிக்கொள்ளும். இதன் போது இவ்வொலி ஏற்படும்.

குருதியமுக்கம்.

சுருங்கலமுக்கமும், தளர்தல் அமுக்கமும்.

குருதிக் கலன்களின் சுவர்களில் குருதியால் ஏற்படுத்தப்படும் அமுக்கம் குருதியமுக்கம் எனப்படும். இதயவறைகள் சுருங்கும் போது குருதிக் கலன்களில் குருதியால் அதிக அமுக்கம் ஏற்படுத்தப்படும். இது சுருங்கலமுக்கம் எனப்படும்.
இதயவறைகள் தளரும் குருதிக்கலன்களினுள் குறைந்த அமுக்கமொன்று தோற்றுவிக்கப்படும். இது தளர்தலமுக்கம் எனப்படும். சாதாரண வயது வந்த ஒருவரின் குருதியமுக்கம் பின்வருமாறு அமையும்.
   120/80 mmHg
பால், வயது, நேரம், தொழிற்பாடு, மன அழுத்தம், மெய்ந்நிலை என்பவற்றிற்கேற்ப இதன் பெறுமானம் வேறுபடும்.
பின்வரும் காரணிகள் சாதாரண குருதியமுக்கத்தை பேண பொறுப்பாக உள்ளன.
  1. இதயக் குருதி வெளியேற்றம்.
  2. குருதியின் கனவளவு.
  3. நாடிகளின் சுருக்கமும், விரிவும்.
  4. நாடிச் சுவர்களின் மீள்தன்மை.
  5. நாளத்தினூடாக இதயத்திற்கு கொண்டுவரப்படும் குருதியின் அளவு.
  1. இதயக் குருதி வெளியேற்றம்.
  2. ஒரு நிமிடத்தில் இதயத்தின் மூலம் வெளியேற்றப்படும் குருதியின் அளவாகும். இது பின்வரும் காரணிகளில் தங்கியுள்ளது.
    • அடிப்புக் கனவளவு
    • இதயத் துடிப்பு வீதம்
    ஒரு தடவை இதயம் துடிக்கும் போது வெளியேறும் குருதியின் கனவளவு அடிப்புக் கனவளவு ஆகும்.
      இதயக்குருதிவெளியேற்றம் = அடிப்புக் கனவளவு  X இதயத் துடிப்பு வீதம்
  3. குருதியின் கனவளவு
  4. குருதியின் கனவளவு அதிகரிக்கும் போது அமுக்கமும் அதிகரிக்கும். பாரிய காயங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் உடலை விட்டு பெருமளவு குருதி வெளியேறுவதால், குருதியின் கனவளவு குறைந்து அமுக்கமும் குறைவடையும்.
  5. நாடிகளின் சுருக்கமும், விரிவும்.
  6. நாடிகள் சுருங்கும் போது அமுக்கம் அதிகரிக்கும். நாடிகள் தளர்ச்சியடையும் போது அமுக்கம் குறைவடையும்.
  7. நாடிச் சுவர்களின் மீள்தன்மை
  8. நாடிச் சுவர்களின் மீள்தன்மை குறையும் போது அமுக்கம் அதிகரிக்கும்.
  9. நாளத்தினூடாக இதயத்தினுள் கொண்டு வரப்படும் குருதியின் அளவு
  10. இது பின்வரும் காரணிகளால் கட்டுப்படுத்தப்படும்.
    • உடலின் நிலை
    • தசைகளின் சுருக்கம்
    • சுவாச அசைவு
    உட்சுவாசத்தின் போது நெஞ்சறைக் குழியில் அமுக்கம் குறைக்கப்படும். இதனால், இதயத்தை நோக்கி குருதியோட்டம் அதிகரிக்கும்.

    உயர் குருதியமுக்கம்.

    சாதாரண நிலையிலும் குருதியமுக்கம் அதிகரிக்கும் நிலையாகும். இது பின்வரும் காரணிகளால் ஏற்படலாம்.
    • அதிக உப்பை உள்ளெடுத்தல்
    • அதிக கொழுப்புணவை உள்ளெடுத்தல்
    • அதிக உடற்பருமன்
    • புகைத்தல்
    • மதுபானங்களின் பாவனை

    தாழ் குருதியமுக்கம்

    சாதாரண குருதியமுக்கத்திலும் பார்க்க குருதியமுக்கம் குறைவடையும் நிலையாகும். பின்வரும் காரணிகளால் ஏற்படும்.
    • அதிக குருதி வெளியேற்றம்
    • போசாக்கின்மை

    இதயத்தின் நரம்பு ஓமோன் கட்டுப்பாடு

    இதயத்தின் இயக்கம் தன்னாட்சி நரம்புத் தொகுதியினால் கட்டுப்படுத்தப்படும். நீள்வளைய மையவிழையத்தில் இதயத்தின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் இதய கலன்கட்டு மையம் காணப்படுகின்றது. பின்வரும் இடங்களில் அமுக்க வாங்கிகள் காணப்படுகின்றன.
    • சிரசு நாடிகளில் காணப்படும் சிரசுக் குடாக்கள்
    • பெருநாடி வில்
    • மேற்பெரு நாளம்
    இவற்றின் மூலம் குருதிக் குழாய்களில் ஏற்படும் அமுக்க மாற்றங்கள் உணரப்பட்டு இதய கலன்கட்டு மையத்திற்கு கடத்தப்படும். இதயவறைகள் வேகமாக சுருங்கும் போது பெருநாடி, சிரசு நாடி போன்றவற்றின் சுவர்களில் அதிக இழுவை காணப்படும். இவ்விழுவை தொகுதி வில், சிரசுக்குடாக்களில் காணப்படும் அமுக்க வாங்கிகள் மூலம் உணரப்பட்டு புலன் நரம்புகளின் மூலம் இதயக்கலன் கட்டு மையத்தின் நிரோதிக்கும் மையத்திற்கு கடத்தப்படும். இம்மையத்தின் மூலம் அலையு நரம்பினூடாக S.A கணு, A.V கணு என்பவற்றின் தூண்டல்கள் குறைக்கப்படும். அலையு நரம்பு இரு கிளைகளாகப் பிரிந்து வாதனாளியின் இரு பக்கங்களுக்கூடாகவும் சென்று இதயத்தை அடையும்.
    உடலின் அதிக தொழிற்பாட்டின் போது வன்கூட்டுத் தசைத் தொகுதிகளின் சுருக்கத்தினால் பெருநாளங்களினூடாக அதிக குருதி சோணையறைகளினுள் செலுத்தப்படும். பெருநாளங்களினூடாக வரும் அதிக குருதியினால் ஏற்படுத்தப்படும் அமுக்கம் பெருநாளத்தில் காணப்படும் இழுவை வாங்கிகளினால் உணரப்பட்டு புலன் நரம்பின் மூலம் இதயக் கலன் கட்டுமையத்திலுள்ள தூண்டும் மையத்திற்கு கடத்தப்படும். இம்மையத்திலிருந்து பரிவு நரம்பின் மூலம் S.A கணுவிற்கு கணத்தாக்கம் கடத்தப்படும். இதன் மூலம் S.A கணு தூண்டப்பட்டு இதயத்தின் தொழிற்பாடு வேகமாக்கப்படும்.

    இதயத்தின் ஓமோன் கட்டுப்பாடு

    அதிரினலின், நுராடினலின், தைரொக்ஸின், பாலியல் ஓமோன்கள், கபச்சுரப்பி ஓமோன்கள் என்பன இதயத்தின் தொழிற்பாட்டில் செல்வாக்கு செலுத்துகின்றன. அதிரினலின், நுராடினலின் என்பன இதயத்தை தூண்டி இதயத் துடிப்பு வீதம், அடிப்புக் கனவளவு என்பவற்றை அதிகரிக்கும். இதன் மூலம் இதயக்குருதி வெளியேற்றத்தை அதிகரித்து உடலை அவசர நிலைமைகளுக்கு தயார்படுத்தும்.
    தைரொக்ஸின் அனுசேப தொழிற்பாடுகளை அதிகரிக்கும். இதன் மூலம் குருதிக் குழாய்களில் தளர்வு ஏற்பட்டு அதிக குருதி செலுத்தப்படும். அல்டெஸ்டரோன், ADH என்பன உடலில் Na இன் சமநிலையை பேணுவதுடன் குருதியமுக்கத்தை பேணும்.

    முடிவுறுச் சுற்றோட்டமும், முடிவுறு நாடிகளில் ஏற்படும் அடைப்பும்

    இதயம் மிகவும் உயிர்ப்பாக தொழிற்படும் பாகமாகும். எனவே, கூடிய ஒட்சிசன், போசணை என்பன அவசியம். இதயத்துக்கான குருதி விநியோகம் முடிவுறு நாடிகள் மூலம் மேற்கொள்ளப்படும். பெருநாடியிலிருந்து எழும் வலது, இடது முடிவுறு நாடிகள் இதயத்திற்கு நாடிக் குருதியை விநியோகிக்கின்றன. இவை பின் முடிவுறு நாளங்களினூடாக வலது சோணையறைகளில் இடப்படும். சிறிதளவு குருதி இதயவறைகளினுள் நேரடியாக திறக்கும் சிறு கான்களினூடாக இதயத்தை அடையும்.

    குருதிக் கலன்கள்

    3 வகையான குருதிக் கலன்கள் காணப்படுகின்றன.
    1. நாடிகள்
    2. நாளங்கள்
    3. மயிர்த்துளைக் குழாய்கள்

    நாடித் தொகுதி

    நாடிகள் இரு பிரிவுகளுக்குள் உள்ளடக்கப்படும்.
    1. சுவாசப்பை நாடி
    2. தொகுதிப் பெருநாடி

    சுவாசப்பை நாடி

    காபனீரொட்சைட்டு செறிவு கூடிய குருதியை கொண்டு செல்லும். வலது இதயவறையிலிருந்து தோன்றி பின் இரண்டாகப் பிரிந்து சுவாசப்பைகளுக்குச் செல்லும்.

    தொகுதிப்பெரு நாடி

    இடது இதயவறையில் ஆரம்பித்து மேல் நோக்கிச் சென்று பின்புறமாக வளைந்து கீழ் நோக்கிச் செல்லும். பிரிமென்றகட்டை துளைத்து கீழ்ப் பகுதிக்கு செல்லும். இதிலிருந்து பல கிளைகள் தோன்றும்.
        

    நாளங்கள்

    நாளங்கள் பிரதானமாக 3 வகைப்படும்.
    1. சுவாசப்பை நாளம்
    2. மேற்பெரு நாளம்
    3. கீழ்ப் பெருநாளம்

    சுவாசப்பை நாளம்

    வலது, இடது சுவாசப்பைகளிலிருந்து இவ்விரு நாளங்கள் தோற்றுவிக்கப்பட்டு இடது சோணையறையில் திறக்கும்.

    மேற்பெரு நாளம்

    இது பின்வருமாறு கிளை கொள்ளும்.
        

    கீழ்ப்பெரு நாளம்

    இது பின்வருமாறு கிளை கொள்ளும்.
        

    நெஞ்சறைக்குரிய நாளங்கள்

    இணைப்படா நாளம், அரை இணைப்படா நாளம் என்பன நெஞ்சறைப் பகுதியிலிருந்து குருதியை சேகரிக்கின்றன. இணைப்படா நாளம் மேற்பெரு நாளத்திலும், அரை இணைப்படா நாளம் இடது காரை என்புக் கீழ் நாளத்திலும் பொருந்தும்.
        

    வாயில் நாளங்கள்

    மயிர்த்துளைக் குழாய்களில் ஆரம்பித்து மயிர்த்துளைக் குழாய்களில் முடிவடையும் நாளங்கள் வாயில் நாளங்கள் எனப்படும். வாயில் நாளங்கள் இரு வகைப்படும்.
    1. ஈரல் வாயில் நாளம்
    2. சிறுநீரக வாயில் நாளம்

    ஈரல் வாயில் நாளம்

    1. மண்ணீரல் நாளம்
      • மண்ணீரல், சதையி என்பவற்றிலிருந்து
        குருதியை சேகரிக்கும்.
    2. கீழ் மடிப்பு நாளம்
      • பெருங்குடல், நேர்குடல் என்பவற்றிலிருந்து
        குருதியை சேரிக்கும்.
    3. உயர் நடுமடிப்பு நாளம்
      • சிறுகுடல், பெருங்குடல் என்பவற்றிலிருந்து
        குருதியை சேகரிக்கும்.
    4. உதர நாளம்
      • இரைப்பையிலிருந்து குருதியை சேகரிக்கும்.
    5. Systic நாளம்
      • பித்தப்பையிலிருந்து குருதியை சேகரிக்கும்
           

    குருதிக் கலன்களின் கட்டமைப்பு

         

    வெளிப்படை

    அதிகமாக தொடுப்பிழையங்களைக் கொண்டதாக் காணப்படும். பெரிய குருதிக் கலன்களின் அடிப்படையில் சிறிய குருதிக் கலன்கள் காணப்படும். பெரிய கலன்களில் வெளிப்படைக்கும், நடுப்படைக்கும் இடையே வெளிப்புற மீள் சக்தி மென்சவ்வு காணப்படும். அக மேலணிக்கும், நடுமேலணக்கும் இடையே உட்புற மீள்சக்தி மென்சவ்வு காணப்படும்.

    உட்படை

    இது உட்புறமாக ஒழுங்காக்கப்பட்ட மழமழப்பான தசைகளைக் கொண்டது.

    அகமேலணி

    இது செதில் மேலணியால்; ஆனதாகும். அகமேலணியானது குருதிக் கலன்களின் உட்போர்வை ஆகும்.

    குருதி குருதித் திரவவிழையம்click here

No comments

Lanka Education. Powered by Blogger.