News

நியூட்டனின் மூன்று விதிகள் நினைவில் வைக்க எளிய வழியாய் உருவாக்கப்பட்டதே இந்த கதை


நியூட்டனின் மூன்று விதிகள்

நினைவில் வைக்க எளிய வழியாய் உருவாக்கப்பட்டதே

இந்த கதை!!

நியூட்டனின் இயக்க விதிகள்

அறிவியல் படிக்கும் பலருக்கும் முதலில் நினைவில் கொள்ள

வேண்டிய விஷயம் நியூட்டனின் மூன்று விதிகள் தான்...

ஒரு மாடு நடந்து போய்கொண்டு இருந்தது. நியூட்டன்

அதை நிறுத்தினார்..மாடும் நின்றது.

உடனே முதல் விதி உதயமானது

ஒரு பொருளின் மீது வெளிப்புறவிசையொன்று செயல்படும் வரை எந்த ஒரு பொருளும் தனது ஓய்வு நிலையையோ அல்லது நேர்க்கோட்டில் அமைந்த சீரான இயக்க நிலையையோ மாற்றிக் கொள்ளாது

Every object continues in its state of rest, or of uniform motion in a straight line, unless compelled to change that state by external forces acted upon it

அதன் பிறகு தன் பலம் முழுவதையும் சேர்த்து மாட்டிற்கு

ஒரு உதை கொடுத்தார் நியூட்டன்..மாடு மா (MA) என்று

கதறியது..உடனே இரண்டாம் விதி பிறந்தது

பொருளின் உந்தம் மாறுபடும் வீதம் அதன்மீது செயல்படும் விசைக்கு நேர்த்தகவில் இருக்கும்

The Change of Momentum is directly proportional to the Force Applied

(அல்லது)

The acceleration a of a body is parallel and directly proportional to the net force F acting on the body, is in the direction of the net force

F = M A

சிறிது நேரத்தில் தன் கோபம் அனைத்தையும் சேர்த்துவைத்து

நியூட்டனை மாடு உதை உதையென்று உதைத்தது..உடனே

மூன்றாம் விதி பிறந்தது

ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர் வினை உண்டு.

For Every action, there is an equal and opposite reaction

1 comment:

Lanka Education. Powered by Blogger.