News

பல்கலைக்கழக விடுதி அறையில் இருக்கக் கூடிய மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பு



பல்கலைக்கழக விடுதி அறையில் தங்கக் கூடிய மாணவர்கள் எண்ணிக்கை இரண்டாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அதிகரித்துள்ளது.
ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமதுங்க நாட்டினுள் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதைக் கருத்திற் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 6 ஆம் திகதி பல்கலைக்கழக செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டாலும், விடுதி அறையில் ஒரு மாணவர் மாத்திரமே தங்க முடியும் என்ற கட்டுப்பாடுகள் காணப்பட்டதால் அனைத்து வருடங்களுக்குமான வகுப்புகள் ஆரம்பிக்கப்படவில்லை.
எனினும், இத்தீர்மானத்தின் பின்னர், மற்றொரு வருட வகுப்பை ஆரம்பிக்க பல்கலைக்கழகம் தீர்மானிக்கும் என அறியமுடிகிறது.

Tags:- UGC, University Grant Commission, Lanka Educations, Learn Easy, lkedu, Hostel, Students, 

No comments

Lanka Education. Powered by Blogger.