News

மனிதனில் அசைவு

அசைவு

ATP சக்தியை பயன்படுத்தி முழு உயிரி/ அங்கம்/ இழையம்/ கலத்தில் நடைபெறும் பெயர்வுகள்/ சுயமான இயக்கம் அசைவு எனப்படும். அசைவானது பல மட்டங்களில் இடம்பெறலாம்.
  1. கலங்கள் - Chlamydomonas
  2. அங்க மட்டம் -
இதயத் துடிப்பு
சுவாசப்பைகளின் அசைவு
கைகளின் அசைவு

  1. அங்கி மட்டம் - மனிதன்

இடப்பெயர்ச்சி

ஒரு அங்கி ஓரிடத்திலிருந்து மற்றுமொரு இடத்திற்கு முழுமையாக அசைதல் இடப்பெயர்ச்சி எனப்படும்.

இடப்பெயர்ச்சியின் அவசியம்

  1. இறை தேடும் முகமாக.
  2. இறை கவ்விகளிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக.
  3. பரவலடைவதற்காக.
  4. புரிய பொருத்தமான வாழிடங்களை தேடிக் கொள்வதற்காக.
  5. தனியன்கள் இனப்பெருக்கத்தின் பொருட்டு சேருவதற்கு.
Note:-
  • உடலின் அசைவை ஏற்படுத்துவதற்காக சிறப்பாக்கம் அடைந்த இழையங்கள் தசையிழையங்களாகும்.

இடப்பெயர்ச்சி, அசைவு வகைகள்

  1. போலிப்பாத அசைவு
  2. Amoeba, WBC போன்ற அமீபா போலிக்கலங்கள் தமது வடிவத்தை மாற்றி அமைக்கக் கூடியன. இதுவே அசைவிற்கு அடிப்படையாகும். கலம் அசையும் போது உற்புறம் ஏற்படும். திரவமயமான குழியவுரு உள்நோக்கி நகர வெளிப்புறமான விரைப்பான பகுதி போலிப்பாதமாக வெளி எரியப்படும்.
       உதாரணம் - Amoeba, WBC
  3. சவுக்கு முளை மூலமான அசைவு
  4. சவுக்கு முளை, சவுக்கு முளையை ஒத்த விந்துகளின் வால் போன்ற கட்டமைப்புகள் சவுக்கின் வளியே முன் நோக்கி நகரக்கூடிய அசைவுகளை அடியிலிருந்து நுனியை நோக்கி செலுத்தும். இதன் முலம் அங்கியை எதிர்த் திசையில் அசையச் செய்யும்.
       உதாரணம் -  இயூக்ளினா
           பற்றீரியா
                Chlamydomonas
  5. பிசிர் மூலமான அசைவு
  6. ஒவ்வொரு பிசிரும் கலத்திலிருந்து வெளி நீட்டப்பட்டிருக்கும். பிசிர்கள் 180o கோண வில்லினூடாக அசைவதன் மூலம் துடுப்பினால் அசைக்கப்படும் படகு போல் அங்கி முன்நோக்கி அசையும். இவ் அசைவு முடிந்ததும் பிசிர் மீண்டும் அசைவை ஏற்படுத்தக் கூடியவாறு பழைய நிலைமையை அடையும்.
  7. தசை மூலமான அசைவு
  8. உயர் விலங்குகளிலும், Arthropoda, Annelida போன்றவற்றிலும் காணப்படும். தசையிழையம் சுருங்கித் தளரக்கூடிய தசைநார்களால் அமைந்த தசைக் கலங்களால் ஆனது. இக்கலங்களின் சுருங்கி விரியும் தன்மை அங்கிகளின் அசைவு நிகழ காரணமாகும்.

தசையிழையத்தின் பண்புகள்

  1. இழுபடும் இயல்பு

    • தசைகள் இழுபடக்கூடியனவாகவும், சுருங்கக் கூடியனவாகவும்
      காணப்படும்.
  2. மீளும் இயல்பு

    • சுருங்கிய பின் அல்லது இழுவைக்குள்ளான பின் மீண்டும்
      அதன் ஆரம்ப நிலையை அடையும்.
  3. அருட்டப்படும் இயல்பு

    • தூண்டல்களைப் பெற்று அதற்கேற்ப துலங்கலை
      காட்டக்கூடியன.
  4. சுருங்கும் இயல்பு

    • தசைகள் சுருங்கக் கூடியனவாக அல்லது நீளத்தில்
      குறுகக்கூடியனவாகக் காணப்படும்.

மனிதனில் தசையிழையம்

No comments

Lanka Education. Powered by Blogger.