News

நிணநீர்த் தொகுதி

நிணநீர்த் தொகுதி

நிணநீர்த் தொகுதியில் பின்வரும் பகுதிகள் காணப்படுகின்றன.
  1. நிணநீர்க் கணுக்கள்
  2. தைமஸ் சுரப்பி
  3. மண்ணீரல்
  4. என்பு மச்சை

நிணநீர்

குருதித் திரவவியைத்தை ஒத்தது. எனினும், பதார்த்தங்கள் வேறுபட்ட செறிவுகளில் காணப்படும். இதில் நிணநீர்க் குழியங்கள் காணப்படும். எனினும், செங்குழியங்கள் காணப்படுவதில்லை.

நிணநீர் மயிர்த்துளைக் குழாய்

இழையங்களுக்கிடையிலுள்ள இடைவெளிகளில் காணப்படும் மிக மெல்லிய கலன்களாகும். இவற்றின் சுவரில் தொடுப்பிழையம், அக மேலணி என்பன காணப்படும்.

நிணநீர்க் கலன்கள்

நிணநீர் மயிர்த்துளைக் குழாய்கள் இணைவதன் மூலம் தோற்றுவிக்கப்படும். இவற்றின் சுவரில் நாரிழையமும், நடுப்படையில் தசையிழையமும், உட்படையில் மேலணியும் காணப்படும். நிணநீர்க் கலன்கள் ஒன்று சேர்ந்து நிணநீர்க் கான்களை தோற்றுவிக்கும். நிணநீர்க்கான்கள் பிரதானமாக இரு வகைப்படும்.
  1. நெஞ்சறைக் கான்
  2. வலது நிணநீர்க் கான்

நெஞ்சறைக் கான்

1ம், 2ம் நாரி முள்ளந்தண்டென்புகளுக்கு அருகாக ஆரம்பிக்கும். நீளமான கானாகும். மேல் நோக்கிச் சென்று இடது காரை என்புக் கீழ் நாளத்தில் திறக்கும். இது பின்வரும் பகுதிகளிலிருந்து நிணநீரை சேகரிக்கும்.
  1. இடுப்புக் குழி
  2. பின் அவயவம்
  3. இடது நெஞ்சறைப் பகுதி
  4. இடது பக்கத்தலை
  5. இடது பக்க கழுத்து
  6. இடது முன் அவயவம்

வலது நிணநீர்க் கான்

கழுத்தின் அடிப்பகுதியில் ஆரம்பிக்கும். வலது காரை என்புக் கீழ் நாளத்தில் திறக்கும். குறுகியது. ஏறத்தாழ 10 cm நீளமானது. இத பின்வரும் பகுதிகளிலிருந்து நிணநீரை சேகரிக்கும்.
  1. வலது பக்க கழுத்து
  2. வலது பக்க முன் அவயவம்

நிணநீர் சிறு கணுக்கள்

நிணநீர் இழையங்களைக் கொண்ட சிறிய அங்கங்களாகும். ஏறத்தாழ 1mm விட்டமுடையது. ஒவ்வொன்றைச் சுற்றியும் நாரிழையம் காணப்படும். இதிலிருந்து தோன்றும் சிறு சலாகைகள் போன்ற அமைப்புக்கள் கணுக்களை அறைகளாகப் பிரிக்கும். கணுவின் வெளிப்பகுதியில் நிணநீர்க் குழியங்களைக் கொண்ட மையங்கள் காணப்படும். இம் மையங்களைச் சூழ பெருந்திண் கலங்கள் காணப்படும். இவை உடலில் தொற்றுதலடையும் நுண்ணங்கிகளை அழிப்பதில் உதவும். உடலில் தொற்றல் ஏற்படும் போது நுண்ணங்கிகள் இப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டு அழிக்கப்படும். இதன் போது நிணநீர்க் கணுக்கள் வீக்கமடையும். இது நெறிகட்டல் எனப்படும்.

நிணநீர்க் குழியங்கள்

நிணநீர்க் குழிங்கள் இரு வகைப்படும்.
  1. T cells
  2. B cells

T cells

நுண்ணங்கிகளை அழிப்பதில் முழுக் கலமும் பங்குபற்றும்.
இவை பிறப்பொருள் எதிரிகளை சுரப்பதில்லை.
இவை தைமஸ் சுரப்பியினால் உற்பத்தி செய்யப்படும்.
இவை 2 வகைப்படும்.
  1. Tcells -Helper cells
  2. T8 cells -Suppreser cells (Killer cells)
பின்வரும் கலங்களை அழிப்பதில் பங்குபற்றும்.
  1. வைரஸ் மூலம் தொற்றல் ஏற்பட்ட கலங்கள்
  2. புற்றுநோய்க் கலங்கள்
  3. மாற்றீடு செய்யப்பட்ட கலங்களும், இழையங்களும்

B cells

இவை பிறப்பொருள் எதிரிகளை சுரப்பதன் மூலம் நுண்ணங்கிகளை அழிக்கும். இவற்றால் சுரக்கப்படும் பிறப்பொருள் எதிரிகள் குருதித் திரவவிழையம், இழையப்பாயம், நிணநீர் என்பவற்றில் சேர்க்கப்படும். இவற்றின் மூலம் அப்பகுதிகளில் காணப்படும் நுண்ணங்கிகள் அழிக்கப்படும். இவை இரு வகைப்படும்.
  1. Memory cells
  2. Plasma cells
Memory cells ஒரு சில மாதங்கள் தொடக்கம் பல வருடங்கள் வரை வாழ்க்கைக் காலம் கொண்டவை. எனினும், Plasma cells ஒரு சில நாட்கள் மட்டுமே உயிர் வாழும். Helper cells இனால் B cells இன் உற்பத்தி தூண்டப்படும். Suppreser cells இனால் B cells கட்டுப்படுத்தப்படும். B cells என்பு மச்சையினால் உற்பத்தி செய்யப்படும்.
Note:-
  • AIDS நோய்க்கு காரணமான HIV Tcells ஐத் தாக்கும்.
  • இதன் மூலம் நிர்ப்பீடனத் தொகுதி பாதிக்கப்படும்.

நிணநீர் இழையங்கள் காணப்படும் பகுதிகள்

  1. தொண்டை முளைகள்
  2. Adinoids
  3. மூக்குத் தொண்டைச் சுவர்
  4. தனியான நிணநீர் சிறுகணுக்கள்
  5. கூட்டங்களான நிணநீர்க் கணுக்கள்

மண்ணீரல்

குருதி சுற்றோட்டத் தொகுதியுடன் தொடர்பானது.பகுதியாக நிணநீர் இழையங்களைக் கொண்டது. சுற்றுவிரியினால் சூழப்பட்டது. மண்ணீரலின் பதார்த்தம் மச்சை எனப்படும். இதில் நிணநீர் இழையங்களும், குருதி மயிர்க் குழாய்களும் காணப்படும்.

மண்ணீரலின் தொழில்கள்

  1. தேய்ந்த செங்குழியங்களை அழித்தல்
  2. குருதியை சேமித்தல்
  3. நிணநீhக் குழியங்கள், பிறப்பொருள் எதிரிகள், தொட்சின்கள் என்பவற்றை உற்பத்தி செய்தல்.

No comments

Lanka Education. Powered by Blogger.