News

மனிதனில் தசையிழையம்

மனிதனில் தசையிழையம்

மனிதனில் மூன்று வகையான தசையிழையங்கள்
காணப்படுகின்றன.
  1. வன்கூட்டுத் தசை
  2. மழமழப்புத் தசை
  3. இதயத் தசை

மனிதனில் காணப்படும் தசையிழையங்களுக்கிடையிலான ஒப்பீடு

மழமழப்புத் தசை
இதயத் தசை
நீண்ட உருளையுருவான, கிளைகளற்ற ஒன்றுக்கொன்று சமாந்தரமான வலங்களைக் கொண்டது.
கதிருருவான கிளைகளற்ற கலங்களாகும்.
குறுகிய உருளையுருவான கிளைகளையுடைய கலங்களைக் கொண்டது.
ஒவ்வொரு தசைநாரும் மேற்பரப்பிற்கண்மையில் பல கருக்களைக் கொண்டது.
ஒரு கரு உடையது.
ஒரு கரு உடையது.
வரி கொண்டது. (Actin, Myosin புரதநார்களால் தசை சிறுநார்கள் வரிகளாகக் கருத்ப்படுகின்றன.)
வரியற்றது
வரியுடையது
தசைக்கல மென்சவ்வு, தசை முதலுரு என்பன காணப்படும்.
தசைக்கல மென்சவ்வு, தசை முதலுரு என்பன காணப்படும்.
தசைக்கல மென்சவ்வு, தசை முதலுரு என்பன காணப்படும்.
இடைபுகுந்த வட்டத்தட்டு இல்லை
இடைபுகுந்த வட்டத்தட்டு இல்லை
இடைபுகுந்த வட்டத்தட்டு இல்லை (இப் பகுதிகளில் தொடர்புபடுத்தும் சந்திகள் மூலம் அடுத்துள்ள கலங்கள் இணைக்கப்படும்.)
இச்சையுள் நரம்புகளால் கட்டுப்படுத்தப்படும்.
தன்னாட்சி நரம்புத் தொகுதியால் கட்டுப்படுத்தப்படும்.
தன்னாட்சி நரம்புத் தொகுதியால் கட்டுப்படுத்தப்படும்.
நரம்பு பிறப்பிற்குரியது.
நரம்பு பிறப்பிற்குரியது
தசைப் பிறப்பிற்குரியது.
வலிமையான சுருக்கத்தை ஏற்படுத்தும்.
ஆறுதலான, நீடித்த சுருக்கத்தை ஏற்படுத்தும்.
வலிமையான, சந்தம் பொருந்திய அசைவுகளை ஏற்படுத்தும்.
இலகுவில் களைப்படையும்.
ஆறுதலாக களைப்படையும்.
இலகுவில் களைப்படையாது.
இச்சை வழியானது.
இச்சை வழியானது.
இச்சை வழியானது.
  • வன்கூட்டுடன் தொடர்பாகக் காணப்படும்.
  • வன்கூட்டை அசைப்பதில் உதவும்.
  • Adrenaline, Acetylcholine என்பவற்றின் மூலம் இவற்றின் தொழிற்பாடு தூண்டப்படுகின்றது.
  • இவற்றில் கொலாஜன் காணப்படும்.
  • இது பல வகைப்படும்.
    1. வட்டத்தசை
    2. நீள்பக்கத்தசை
    3. சரிவுத் தசை
    4. மயிர் நிறுத்தித் தசை


வன்கூட்டுத் தசைகளின் கட்டமைப்பு

மனித உடலில் ஏறத்தாழ 600 வன்கூட்டுத் தசைகள் காணப்படுகின்றன. இவை பொதுவாக ஒரே கட்டமைப்பை உடையன. தசைக் கலங்கள் தசை நார்களாகக் காணப்படும். தசைகள் தசை நார்களால் ஆனது. ஒவ்வொரு தசை நாரும் தசையக மடல் எனும் தொடுப்பிழையப் போர்வையால் போர்த்தப்பட்டிருக்கும். இவ்வாறான பல தசை நார்கள் தசைச் சூழ் மடலினால் சூழப்பட்டு தசை நார்க் கட்டை தோற்றுவிக்கும். இவ்வாறா பல தசை நார்க்கட்டுக்கள் தசை மேல் மடலினால் சூழப்படுவதன் மூலம் தசைக்கட்டை தோற்றுவிக்கும். தசைநார்க் கட்டுகளுக்கிடையில் குருதிக் கலன்கள், நரம்புக் கலங்கள் என்பன காணப்படும்.
தசை நார்கள தசை சிறு நார்களால் ஆனது. தசை சிறு நார்கள் இரு வகை இழைகளால் ஆனது.
  1. Actin ஆல் ஆக்கப்பட்ட மெல்லியநார்கள்
  2. Myosin ஆல் ஆக்கப்பட்ட தடித்த தசைநார்கள்
இவ்விழைகள் தசைநாரின் குழியவுருவில் நீளப் போக்கில் அடுக்கப்பட்டிருக்கும். தசையிழைகளின் ஒழுங்கமைப்பு காரணமாக தசை சிறுநார்களில் பாத்து ஒழுங்கமைப்பு பெறப்படும்.

தசைப்பாத்து

  
தசையிழைகள் ஒன்றுடனொன்று ஒழுங்குபடுத்தப்பட்டு இருளான A பட்டி பெறப்படும். இருள குறைந்த இடத்தில் (பட்டியில்) மெல்லிய இழை மட்டும் காணப்படும். இது ஒளி வலயம் எனப்படும். H வலயத்தில் இழைகள் ஒன்றையொன்று மேவாது தடித்த Myosin இழை மட்டும் காணப்படும். ஒளி வலயத்தின் மத்திய பகுதி கோடு எனப்படும். தசையிழையத்தின் கட்டமைப்பு Z கோட்டிலிருந்து Z கோட்டிற்கு மீண்டும் மீண்டும் தொடர்வதாக அமையும். இரு Z கோடுகளிற்கிடைப்பட்ட பகுதி தசைப்பாத்து எனப்படும்.
இதுவே தசைகளின் தொழிற்பாட்டு அலகாகும்.

தசைச் சுருக்கம் தொடர்பான வழுக்கல் இழைக் கொள்கை

1950ம் ஆண்டு பில்டின் ஹென்சிலின் என்பவரால் இக்கொள்கை முன்வைக்கப்பட்டது. இது இழைகளின் வழுக்கல் எனப்படும். இதன்படி தசைச்சுருக்கத்தின் போது இழைகளின் நீளம் குறுகுவதில்லை. மெல்லிய இழைகளும், தடித்த இழைகளும் ஒன்றன் மேலொன்று வழுக்கி அசைவதால் இழைகளின் மொத்த நீளம் குறைவடைகின்றது. Actin புரதத்தால் ஆன மெல்லிய இழைகள் முதலான இழைகள் எனவும், Myosin புரதத்தால் ஆன இழையம் துணையான இழைகள் எனவும் அழைக்கப்படும். முதலான இழைகளும், துணையான இழையகளும் ஒன்றன் மேலொன்று வழுக்கி அசைவதால் சுருங்கிய நிலையில் tyak;> வலயம் என்பன காணப்படாது. எனினும், இருள் வலயத்தின் மொத்த நீளம் மாற்றமடையாது.

தசைச்சுருக்கப் பொறிமுறை

No comments

Lanka Education. Powered by Blogger.