News

பாடசாலைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை!


கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக 200 க்கும் அதிகமான மாணவர்களை கொண்ட பாடசாலைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

வைரஸ் பரவலின் தற்போதைய நிலைமையினை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

கடந்த 10 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், 200 க்கும் அதிகமான மாணவர்களை கொண்ட பாடசாலைகளில் ஒவ்வொரு வகுப்பு மாணவர்களும் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டிய தினம் கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களின் கீழ் பாடசாலைகளை வழமைப் போல் நடாத்திச் செல்ல முடியுமானால் வழமைப்போல் மாணவர்களை பாடசாலைகளுக்கு அழைத்துக் கொள்ளவதில் தடையில்லை என கல்வி அமைச்சு பாடசாலை பிரதானிகளுக்கு அறிவித்துள்ளது

No comments

Lanka Education. Powered by Blogger.