News

சுவாச தொழிற்பாடு

சுவாச தொழிற்பாடு

சுவாசத் தொழிற்பாடு நான்கு படிகளைக் கொண்டது.
  1. சுவாசப்பைகளின் காற்றூட்டல்.
  2. புறவாயுப் பரிமாற்றம்.
  3. அகவாயுப் பரிமாற்றம்.
  4. கலச்சுவாசம்.

சுவாசப்பைகளின் காற்றூட்டல்

சுவாச ஊடகத்தை சுவாச மேற்பரப்பை நோக்கியும், விலத்தியும் அசைய செய்கின்றன். வட்ட ஒழுங்கில் நடைபெறும் செயற்பாடு சுவாச வட்டம் எனப்படும்.
சுவாச வட்டத்தில் மூன்று அவத்தைகள் காணப்படும்.
  
இச்செயற்பாடானது நிமிடத்திற்கு 12-16 தடவைகள் நடைபெறும்.

சுவாச வட்டம்

சுவாசத் தொழற்பாட்டின் ஒருங்கிணைப்பாளராக வரோலியின் பாலம் காணப்படுகின்றது. காபனீரொட்சைட்டின் செறிவை உணரக்கூடிய இரசாயன வாங்கிகள் காணப்படும்.
  1. தொகுதியுடல்
  2. சிரசுடல்
  3. பரிவகக்கீழ் வாங்கி

உட்சுவாசம்

தொகுதியுடல், சிரசுடல் என்பன சுற்றயலிற்குரிய இரசாயன வாங்கிகளாகும். பரிவகக்கீழ் வாங்கியானது மூளைக்குறிய இரசாயன வாங்கியாகும். குருதியில் காபனீரொட்சைட்டின் செறிவு அதிகரிக்க pH பெறுமதியானது குறைவடையும். இது இரசாயன வாங்கிகளால் உணரப்பட்டு நாவுரு தொண்டை நரம்பினூடாக உட்சுவாச மையத்திற்கு கடத்தப்படும்.
உட்சுவாச மையத்திலிருந்து கட்டளைகளானது பின்வரும் பகுதிகளுக்கு
கடத்தப்படும்.
  1. பிரிமென்றகடு - பிரிமென்றகட்டு நரம்பினூடாக.
  2. பளுவுக்குறிய தசைகள் - பளுவுக்குறிய தசை நரம்பினூடாக.
பிரிமென்றகட்டின் மத்திய பகுதியில் ஆரைவழித்தசைகள் சுருங்குவதால் பிரிமென்றகடு தட்டையாகும். இதன் கனவளவானது நிலைக்குத்தச்சில் கூடும்.
பளுவுக்கிடையிலான தசைகள் சுருங்குவதால் விலா என்புகள் முதலாம் சோடி விலா என்பை நோக்கி மேல்நோக்கியும், கீழ்நோக்கியும் அசையும். இதன் கனவளவானது முன்பின்னாகவும், பக்கம் பக்கமாகவும் அசையும்.
மார்பறையில் கனவளவு கூட புடைச்சவ்வு மார்பறையின் சுவரை நோக்கி இழுக்கப்படும். தொடர்ச்சியாக மாற்றத்தை எதிர்க்க முடியாத சுவாசப்பைகள் விரிவடையும். கனவளவு கூடி அமுக்கம் குறைய வளி உள்நோக்கி அசையும். இது ஒரு உயிர்ப்பான செயற்பாடாகும்.

வாயுப்பரிமாற்றம்

சிற்றரை சுவரின் தடிப்பானது 0.1um அளவானதாகும்.
சேஃபெற்றான் மூலம் உட்புறம் ஈரலிப்பாக்கப்பட்டு மேற்பரப்பிழுவை 1/10 மடங்கால் குறைக்கப்படும். குருதி மயிர்துளைக் குழாய்களின் விட்டத்தை விட செங்குழியங்களின் விட்டம் அதிகமாக காணப்படும். இதனால் செங்குழியங்கள் வளைவிற்குட்படும். இதனால் மெல்லியதாக்கப்படுவதுடன் செங்குழியங்களின் மேற்பரப்பு அதிகரிக்கும். அதனால் ஒட்சிசன் செல்வது இலகுவாக்கப்படும்.

வெளிச்சுவாசம்

அதிகரித்த உட்சுவாசம் இழுவை வாங்கிகளால் உணரப்படும். அலையு நரம்பு முனைவழிவிற்கு உட்படுவதால் உருவாக்கப்படும் கணத்தாக்கம் அலையுநரம்பினூடாக வெளிச் சுவாச மையத்திற்கு கடத்தப்படும். கட்டளைகள் பளுவுக்கிடையிலான தசைகளிற்கு அனுப்பப்படும். விலா என்புகள் நிறை காரணமாக ஆரம்ப நிலையை அடையும். வெளிப்பளுவிற்கிடையிலான தசைகள் தளர்வதால் விலா என்புகள் கீழ்நோக்கியும், உள்நோக்கியும் அசையும். வயிற்றறையின் அமுக்கத்தினால் பிரிமென்றகடு மேல் நோக்கி தள்ளப்படும். நெஞ்சறையின் கனவளவு குறைவதால் அமுக்கம் அதிகரிக்கும். இது வளிமண்டல அமுக்கத்தை விட அதிகமாகையால் வளி வெளிச்சுவாசப் பாதையினூடாக வெளியே செல்லும். இது ஒரு மந்தமான(உயிர்ப்பற்ற) செயற்பாடாகும்.

ஒட்சிசன் கடத்தப்படல்

ஒட்சிசனானது ஈமோகுளோபினுடன் இணைந்த நிலையில் 97சதவீதமாகவும், குருதியுடன் கரைந்த நிலையில் 3 சதவீதமாகவும் காணப்படும். ஒட்சிசனானது ஈமோகுளோபினுடன் இணைந்து பின்வருமாறு ஒட்சி ஈமோகுளோபின் எனும் சிக்கல் தோற்றுவிக்கப்படுவதன் மூலம் கடத்தப்படும்.
  
eLepiyahd pH, குறைந்த வெப்பநிலை, குறைந்த காபனீரொட்செட்டு செறிவு, அதிக ஒட்சிசன் செறிவு ஆகிய நிபந்தனைகளின் கீழ் முன்முகத்தாக்கம் ஊக்குவிக்கப்படும். ஒரு லீற்றர் குருதியில் ஏறத்தாழ 500அட ஒட்சிசன் கடத்தப்படும்.
காபனீரொட்சைட்டு கடத்தப்படல்
காபனீரொட்சைட்டானது 3 வழிகளில் கடத்தப்படும்.
  1. திரவவிழையத்தில் கரைந்த நிலையில்
  2. HCO3அயன்களாக செங்குழியங்கள் மூலம்
  3. Carbomyl Heamoglobin Mf

திரவவிழையத்தில் கரைந்த நிலையில்

இம்முறையில் 5.7% காபனீரொட்சைட்டு கடத்தப்படும். பின்வரும் படிமுறையினூடாக நடைபெறும்.
 
இங்கு H+ அயன்கள் விடுவிக்கப்படுவதால் அமிலத்தன்மை அதிகரிக்கும்.

HCO3அயன்களாக செங்குழியங்கள் மூலம்

இம்முறையில் 86% ஆன காபனீரொட்சைட்டு கடத்தப்படும். இதன் போது பின்வரும் செயற்பாடுகள் நடைபெறும்.
 
இச் செயற்பாடானது ஒட்சிசன் விடுவிக்கப்படலை தூண்டும். இத்தாக்கம் செங்குழியங்களிலுள்ள Carbonican Hydrase நொதியற்களினால் தூண்டப்படும்.

Carbomyl Heamoglobin ஆக

இம்முறையில் 7.9%காபனீரொட்சைட்டு கடத்தப்படும். பின்வரும் படிமுறையினூடாக நடைபெறும்.
 
நுரையீரல் கனவளவுகளும், கொள்ளளவுகளும்.
  • a.வற்றப் பெருக்குக் கனவளவு
  • b.உட்சுவாச ஒதுக்கக் கொள்ளளவு
  • c.வெளிச் சுவாச ஒதுக்கக் கனவளவு
  • d.மீதிக் கனவளவு
  • e.உயிர்க் கனவளவு
  • f.மொத்த சுவாசக் கனவளவு

a.வற்றப் பெருக்குக் கனவளவு

ஓய்விலுள்ள ஒருவர் உள்ளெடுக்கும், வெளிவிடும் வாயுவின் கனவளவாகும். இது ஏறத்தாழ 500 ml கனவளவுடையது.

b.உட்சுவாச ஒதுக்கக் கொள்ளளவு

ஆழ்ந்த உட்சுவாசத்தின் போது உள்ளெடுக்கப்படும் கனவளவாகும். இது உயிர்ப்பான சுவாசக் கனவளவு, சேமிப்புக் கனவளவு எனும் பெயர்களால் அழைக்கப்படும். இது ஏறத்தாழ 1500ml கொள்ளளவுடையது.

c.வெளிச் சுவாச ஒதுக்கக் கனவளவு

ஆழ்ந்த வெளிச்சுவாசத்தின் போது வெளியேற்றப்படும் வளியின் கனவளவாகும். இது ஏறத்தாழ 1500ml கொள்ளளவுடையது.

d.மீதிக் கனவளவு

வலிந்த வெளிச்சுவாசத்தின் பின்பும் சுவாசப்பைகளில் எஞ்சியிருக்கும் வளியின் கனவளவாகும். இதன் பெறுமானம் 1200ml ஐ அண்மித்தது.

e.உயிர்க் கனவளவு

சுவாசப்பைகளால் பரிமாற்றக்கூடிய மிக உயர்ந்த கனவளவாகும்.
e=a+b+c

f.மொத்த சுவாசக் கனவளவு

சுவாசப்பைகளால் கொள்ளக்கூடிய மொத்த கனவளவாகும்.

மரண மண்டலக் காற்று

குறிப்பிட்டளவு காற்று உள்ளெடுக்கப்பட்டு சுவாசப்பாதையில் காணப்பட்டு வாயுப்பரிமாற்றத்தில் ஈடுபடாது வெளியேறும். இது மரண மண்டலக் காற்று எனப்படும். இதன் பெறுமானம் 500ml ஐ அண்மித்தது.
Note:-இவ்வளவீடுகள் Spyrometer மூலம் அளவிடப்படும்.

No comments

Lanka Education. Powered by Blogger.