மனிதனின் குருதிச்சுற்றோட்டத் தொகுதி
மனிதனின் குருதிச்சுற்றோட்டத் தொகுதி
மனிதனின் குருதிச்சுற்றோட்டத் தொகுதி பின்வரும் பகுதிகளாக பிரிக்கப்படும்.
- இதயம்; - பம்பும் அமைப்பு
- குருதிக்கலன்கள் -குருதியை கடத்தல்
- குருதி - சுற்றியோடும் திரவம்
இக்கூறுகள் சுற்றோட்டத் தொகுதியில் காணப்படும் இழையப் பாயத்திற்கும் குருதிக்குமிடையில் வினைத்திறனான பதார்த்த பரிமாற்றத்தை ஏற்படுத்துகின்றது.
இதயம்
நெஞ்சறை குழிக்குள் இருசுவாசப்பைகளுக்குமிடையில் காணப்படும். இடைச்சுற்றே வழி பகுதியில் கூரான பகுதி இடது புறமாக அமையும். 5ம்,6ம் விலா என்புகளுக்கிடையில் அமைந்திருக்கும்.
கட்டமைப்பும் தொழிற்பாடும்.
குவிவான, தசைப்பற்றான அங்கமாகும். கூம்பு வடிவமாக காணப்படும்.
10cm நீளமும 250 கிராம் நிறையும் உடையது. ஒருவரின் மூடிய கை முட்டியிம் பருமனை கொண்டது. வெளிப்புறமாக விலாஎன்புகள், மார்புபட்டை, நெஞ்சறை முள்ளந்தண்டென்புகள் மூலம் பாதுகாக்கப்படும்.
இதயம் வெளிப்புறாமாக இரட்டைப் படையினாலான இதயச்சுற்று சவ்வினால் போர்த்ப்பட்டிருக்கும். இதனுள்ளே இதயச்சுற்றுப் பாய்பொருள் காணப்படும். இதயச்சுற்று சவ்வு விரைவாக விரிவடைவதிலிருந்து இதயத்தை பாதுகாப்பதுடன் அதிர்வுகளில் இருந்தும் பாதுகாக்கின்றது.
இதயத்தின் இழைய வியத்தம்
இதயத்தின் சுவர் இதயத்தசை நார்களையும், நுண்ணிய குருதிக்குழாய்களையும், தொடுப்பிழையங்களையும் கொண்டுள்ளது.
இதயச்சுற்று மென்சவ்வு
வெளிப்புறமாக நாரிழையத்தையும், உட்புறமாக செதின் மேலனியையும் கொண்டது. சுருங்கும் தன்மை கொண்டுள்ளது. இதன் சுரப்பு இதயச்சுற்று பாய்பொருள் எனப்படும். இது குருதித் திரவவிழையத்தை ஒத்தது. இதயச் சுற்று பாய்பொருள் இதயத்தை அதிர்ச்சி, தொற்றுதல், உலர்தல், ஒட்டுதல் என்பவற்றிலிருந்து பாதுகாக்கும்.
இதயச்சுற்றுக் குழி
இதய சுவரிற்கும் இதய சுற்று மென்சவ்விற்கும் இடையில் காணப்படும். இதில்; இதயச்சுற்று பாய்பொருள் காணப்படும்.
இதயச்சுவர்
இது மூன்று இழையப்படைகளை கொண்டது.
- Epicardium.
- Myocardium.
- Endocardium.
Epicardium.
தொடுப்பிழையத்தினாலும் செதில் மேலணியினாலும் ஆனது. சுருங்கும் தன்மை கொண்டுள்ளது. ஊடுபுகவிடும் தன்மையை கொண்டிருக்கும்.
Myocardium.
இதயத்தசைகளினால் ஆனது. இதயச்சுவரின் தடிப்பில் 3/4 பங்காக காணப்படும். இது இதயத்தசை கலங்கள் எனப்படும். இது இதயத்தசை நார்களினால் ஆனது. இதயத் தசை நார்கள் வரி கொண்டவை. ஒன்று அல்லது இரண்டு கருக்களைக் கொண்டிருக்கும். பல இழைமணிகள் காணப்படும். நார்கள் கிளை விட்டவை. இடைபுகுந்த வட்டத் தட்டு மூலம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் வலை போன்ற அமைப்பை பெறும். இடைபுகுந்த வட்டத்தட்டு மூலம் இதயத்தசையின் சுருக்கங்களை நார்களுக்கிடையில் விரைவாக பரப்பும். இதன் மூலம் இதயம் முழுமையாக செயற்படும் வகையில் அறைகளில் சுருக்கத்தை ஏற்படுத்தும்.
Endocardium.
இதயத்தின் குழிகளையும், பிரதான குருதிக்கலன்களின் ஆரம்ப முடிவிடங்களையும் சூழ்ந்து காணப்படும். உட்புறம் அழுத்தமான செதில் மேலணியையும், அதற்கு மேலதிகமாக மஞ்சள் நார், மழமழப்பான தசைகள் என்பவற்றையும் கொண்டது. இது உட்பக்கமாக மடிப்படைவதன் மூலம் வால்வுகள் தோற்றுவிக்கப்படும்.
இதயத்தின் கட்டமைப்பும், தொழிற்பாடும். click here
-------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !
No comments