சுவாசத் தொகுதி
சுவாசத் தொகுதி
அங்கிகள் சக்தியைப் பெற கலச்சுவாசத்தில் ஈடுபடுகின்றன. இதற்காக வாயுப்பரிமாற்றத்தில் ஈடுபடுகின்றன. சுவாச செயற்பாட்டிற்காக வாயுப்பரிமாற்றம் இடம்பெறும் மேற்பரப்பு சுவாச மேற்பரப்பு எனப்படும்.
வாயுப்பரிமாற்றம் பௌதீகப்பரவல் மூலம் இடம்பெறும்.
வாயுப்பரிமாற்றம் பௌதீகப்பரவல் மூலம் இடம்பெறும்.
சுவாச மேற்பரப்பின் இயல்புகள்
- மெல்லியதாகக் காணப்படல்.
- ஈரலிப்பாகக் காணப்படல்.
- உயர்ந்தளவு மேற்பரப்பை கொண்டிருத்தல்.
- போதுமான குருதி விநியோகத்தை கொண்டிருத்தல்.
Note:- ஈரலிப்பாகக் காணப்படுவதன் மூலம் வாயுக்கள் கரைந்த நிலையில் கடத்தப்படும்.
மனித சுவாசத்தொகுதி
மூக்குக் குழி
ஆப்பு வடிவானது. பிரிசுவரொன்றால் பிரிக்கப்பட்டிருக்கும். நடுப்பகுதி போலிப்படை கொண்ட மேலணியாலும், ஏனையவை பிசிர்க்கம்ப மேலணியினாலும் ஆனவை. சீத மென்சவ்வால் போர்த்தப்பட்டது. அண்ணத்தின் மூலம் வாய்க் குழியிலிருந்து பிரிக்கப்படும். பின்வரும் தொழில்களை ஆக்கும். |
- பிசிர், மயிர், சீதச்சுரப்பியின் உதவியுடன் தூசு, பற்றீயாக்களை அகற்றல்.
- சுருள் என்பின் மூலமும், அதிக குருதி விநியோகத்தை கொண்டிருப்பதன் மூலமும் வளியை உடல் வெப்பநிலைக்கு மாற்றும்.
- சீதச் சுரப்பிகளின் உதவியுடன் வளியை ஈரமாக்கலில் ஈடுபடும்.
- மண நுகர்ச்சி வாங்கிக் கலங்கள் மூலம் மண நுகர்ச்சியில் ஈடுபடல்.
தொண்டை
12 - 14cm நீளமானது. உணவு, சுவாசப் பாதைக்கு பொதுவானது. இது 3 பகுதிகளைக் கொண்டது.
|
வாய்த் தொண்டை
மெல்லண்ண மட்டம் தொடக்கம் 3ம் கழுத்து முள்ளென்பு மட்டம் வரை காணப்படும்.
குரல் வளைத் தொண்டை
3ம் கழுத்து முள்ளென்பு மட்டம் தொடக்கம் 6ம் கழுத்து முள்ளென்பு மட்டம் வரை காணப்படும்.
மூக்குத் தொண்டை
ஊத்தேக்கியாவின் குழாயுடன் தொடர்புடையது.
குரல்வளை
3ம் கழுத்து முள்ளென்பு மட்டம் தொடக்கம் 6ம் கழுத்து முள்ளென்பு மட்டம் வரை காணப்படும். குரல் நாண் கசியிழையங்களைக் கொண்டது. 4 வகைக் கசியிழையங்கள் காணப்படும்.
- கேடயப் போலிக்கசியிழையம்
- துடுப்புக் கசியிழையம்
- வளையுருக் கசியிழையம்
- மூச்சுக் குழல் வாய்மூடி
முதல் 3 வகை கசியிழையங்களும் பளிங்குருக் கசியிழையத்தினாலும், மூச்சுக் குழல் வாய்மூடி மஞ்சள் நார்க் கசியிழையத்தினாலும் ஆனது. பின்வரும் தொழில்களைப் புரியும்.
- குரல் நாண்களைக் கொண்டு ஒலி எழுப்பல்
- வளி, உணவு செல்வதை கட்டுப்படுத்தல்
- வளியை ஈரமாக்கலும், வெப்பப்படுத்தலும்
வாதனாளி
10 - 11cm நீளமானது. 2.5cm விட்டமுடையது. களத்திற்கு முன்பாகக் காணப்படும். " c " வடிவ கசியிழையங்களால் வலிமையூட்டப்பட்டிருக்கும். இக்கசியிழையங்கள் முற்புறம் முழுமையானது. 6ம் கழுத்து முள்ளென்பு மட்டம் தொடக்கம் 5ம் நெஞ்சறை முள்ளென்பு மட்டம் வரை காணப்படும்.
சுவாசப்பைக் குழாய்
5ம் நெஞ்சறை முள்ளென்பு மட்டத்தில் வாதனாளி இரண்டாகப் பிரிவதால் உருவாகும். வாதனாளியை ஒத்தது. ஆனால், முழு வளையக் கசியிழையங்கள் காணப்படும்.
சுவாசப்பை சிறு குழாய்
சுவாசப்பை சிறு குழாயானது இரு வகைப்படும்.
1.கடத்தலிற்குரிய சுவாசப்பை சிறுகுழாய்
|
2.சுவாசத்திற்குரிய சுவாசப்பை சிறுகுழாய்
சிற்றறைக் கான்
சுவாசப்பை சிறுகுழாய் பிரிவடைவதன் மூலம் உருவாகும்.
|
காற்றுப்பை/ கூடம்
ஒவ்வொரு சுவாசப்பை சிறுகுழாயும் ஈற்றில் கூடத்தை கொண்டிருக்கும். ஒவ்வொரு கூடமும் எறியங்களைக் கொண்டிருக்கும். இவ் எறியங்கள் சிற்றறைகள் எனப்படும்.
சிற்றறைகள்
தனிக்கலத் தடிப்புடையது. எளிய செதின் மேலணியால் ஆனது. இடையிடையே பெருந்தின் கலங்கள் காணப்படும். இது நுண்ணங்கிகளை அழித்து சிற்றறைத் தொற்றலிலிருந்து பாதுகாக்கும். ஏறத்தாழ 700 மில்லியன் சிற்றறைகள் காணப்படும். இவற்றின் பரப்பளவு ஏறத்தாழ 70 தொடக்கம் 90 சதுரமீற்றர்கள் ஆகும்.
சிற்றறையில் சேஃபெற்றான் சுரக்கப்படும். இது Phospo lipid, Lipio protein ஐ கொண்டது. சிற்றறை சிதைவிலிருந்தும், பற்றீரியத் தொற்றுக்களிலிருந்தும் பாதுகாக்கும். மேற்பரப்பிழுவையை 1/ 10 மடங்கால் குறைக்கும். வளி, திரவ அவத்தையில் ஒட்சிசன், காபனீரொட்சைட்டு இலகுவாக பரிமாற்றமடைய உதவும். வெளிச் சுவாசத்தின் போது சிற்றறைகள் ஒட்டிக்கொள்வதிலிருந்து பாதுகாக்கும். முளைய நிலையில் 5 மாத முடிவிலேயே சேஃபெற்றான் சுரக்கப்படும்.
சுவாசப்பைகள்
நெஞ்சறைக் குழியில் நடுக்கோட்டிற்கு இருபுறமும் பக்கத்திற்கொன்றாக காணப்படும். சுவாசப்பைகளின் நடுக்கோட்டுப்பகுதியிலுள்ள மணிப்புள்ளியினூடாக குருதிக்கலன், நரம்புகள், நிணநீர்க்கலன் என்பன செல்லும். கூம்பு போன்ற தோற்றமுடையது. நுரையீரல்கள் கடற்பஞ்சு போன்று காணப்படும்.
|
சுவாசப்பையை சூழ இரண்டு புடை மென்சவ்வுகள் காணப்படும்.
- உடலக புடை/உட்புடை மென்சவ்வு/ உள்ளுடன் விலா மென்சவ்வு.
- வெளிப்புடை மென்சவ்வு/ சுவர்படை/ உடலுடன் விலா மென்சவ்வு.
இவ் புடை மென்சவ்வுகளால் ஆன மூடிய பை காணப்படும். இவற்றிக்கிடையில் புடைக்குழி காணப்படும். புடைக்குழியானது பாய் பொருளால் நிரம்பிக் காணப்படும். இப்பாயியானது மென்சவ்வின் மேலணியால் சுரக்கப்படும்.
புடைக்குழி பாய் பொருளின் தொழில்கள்
- அதிர்ச்சியிலிருந்து பாதுகாத்தல்.
- ஈரலிப்பை வழங்குதல்.
- உராய்வை குறைத்தல்.
Note:-ஆண்களின் பிரிமென்றகடு மூலமான சுவாசம் முனைப்பானது.
Note:-பெண்களின் விலா என்பு மூலமான சுவாசம் முனைப்பானது.
No comments