விலங்குகளின் சுற்றோட்டத்தொகுதி
விலங்குகளின் சுற்றோட்டத்தொகுதி
அங்கிகளின் கலங்களின் செயற்பாட்டிற்கு O2, போசனை பொருட்கள் போன்ற பல்வேறு பதார்த்தங்கள் அவசியமானவை. மேலும், அங்கிகளின் கலங்களிலிருந்து N2,CO2 போன்ற கழிவுகள் வெளியேற்றப்பட வேண்டியுள்ளது. அமீபா, பரமேசியம் போன்ற எளிய அங்கிகளில் பரவல் மூலம் இச்செயற்பாடு இடம்பெறுகிறது. இவற்றில் குறைந்த சக்தி பயன்பாட்டுடன் குறைந்த தூரத்திற்கு பதார்த்தங்கள் கடத்தப்படுகின்றன. எனினும், உயர் அங்கிகளில் நீண்ட தூரத்திற்குப் பதார்த்தங்கள் கொண்டு செல்லப்படவேண்டியுள்ளது. இது சுற்றோட்டத் தொகுதியினூடாக திணிவோட்டத்தின் மூலம் நடைபெறுகின்றது.
விலங்குகளின் சுற்றோட்டம்
அடிப்படையில் இரு வகைப்படும்
- திறந்த சுற்றோட்டத்தொகுதி
- மூடிய சுற்றோட்டத்தொகுதி
திறந்த சுற்றோட்டத்தொகுதி
இவற்றில் உடற்குழி ஒடுக்கப்பட்டு குருதிக் குழியாக மாற்றப்பட்டிருக்கும். முதுகு புறம் தசைகளாலான இதயம் காணப்படும். இது சுருங்குவதன் மூலம் அமுக்கத்தை ஏற்படுத்தும். சுற்றோட்ட பாய்பொருளிற்கும் உடற்குழி பாய்பொருளிற்கும் இடையில் வேறுபாடு காணப்படாது. உடல் உறுப்புக்கள் இப்பாய்பொருளில் நனைந்தவாறு காணப்படும். உறுப்புகளிற்கும் பாய்பொருற்கும் இடையில் பதார்த்த பரிமாற்றம் நிகழும். Pylum Arthropoda, Pylum Mollusca வை சேர்ந்த அங்கிகள் இவ்வகை சுற்றோட்டத் தொகுதியை உடையவை.
|
மூடிய சுற்றோட்டத் தொகுதி
இவ்வகை சுற்றோட்டத் தொகுதியில் குருதி மூடிய குருதிக் கலன்களுக்கூடாகச் செல்லும். சுற்றோட்டத் தொகுதியில் நாடி, நாளம்,மயிர்த்துளைக் குழாய்கள் என்பன காணப்படும். Pylum Annalida, Pylum Vertibrataஎன்பவற்றில் இவ்வகை சுற்றோட்டத் தொகுதி காணப்படும்.
மூடிய குருதி சுற்றோட்டத்தொகுதி இரு வகைப்படும்.
- ஒற்றை குருதி சுற்றோட்டத் தொகுதி
- இரட்டை குருதி சுற்றோட்டத் தொகுதி
Annalida இன் சுற்றோட்டத் தொகுதி
முதன் முதலில் சுற்றோட்டத் தொகுதி விருத்தியடைந்த அங்கிக் கூட்டமாகும். இவற்றில் உண்மையான உடற்குழி காணப்படுவதால் உள் உறுப்புக்கள் உடற் சுவரிலிருந்து பிரிக்கப்பட்டுக் காணப்படும். இதன் மூலம் உள்ளுறுப்புக்கள் சுயாதினமாக தொழிற்படும் தன்மை காணப்படும்.
|
இவற்றில் இரு வகை பிரதான குருதிக் கலன்கள் காணப்படும்.
- வயிற்றுப்புற குருதிக்கலன்
- முதுகுபுற குருதிக்கலன்
மூடிய குருதி சுற்றோட்டத்தொகுதி இரு வகைப்படும்.
- ஒற்றை குருதி சுற்றோட்டத் தொகுதி
- இரட்டை குருதி சுற்றோட்டத் தொகுதி
ஒற்றைக் குருதி சுற்றோட்டத் தொகுதி
குருதி ஒரு தடவை உடல் முழுதும் சுற்றோட்டத்தில் ஈடுபடும் போது இதயத்தினூடாக செல்லுமாயின், அவ்வகை சுற்றோட்டத் தொகுதி ஒற்றை குருதி சுற்றோட்டத் தொகுதி எனப்படும்.
மீன்களில் இவ்வகை சுற்றோட்டத் தொகுதி காணப்படும். இதயத்திலிருந்து அமுக்கப்பட்ட குருதி சுவாச அங்கங்களாகிய பூக்களுக்கூடாகச் சென்று வாயுப் பரிமாற்றத்தில் ஈகடுபட்ட பின் உடல் முழுவதும் செல்லும். பூக்களினூடகச் செல்லும் போது அமுக்கம் வெகுவாக குறைக்கப்படும். எனவே, குருதி மெதுவாகவும், குறைந்த அமுக்கத்துடனும் உடல் உறுப்புக்களிற்கு செல்லும்.
|
இரட்டை குருதிச்சுற்றோட்டம்
குருதி உடல் முழுதும் ஒரு தடவை சுற்றோட்டத்தில் ஈடுபடும் போது இதயத்தினூடாக இரு தடவை செல்லுமாயின், அது இரட்டை குருதிச்சுற்றோட்டம் எனப்படும்.
இச்சுற்றோட்டம் இரு பகுதிகளை கொன்டது.
- சுவாசச் சுற்றோட்டம்
- தொகுதிச் சுற்றோட்டம்
சுவாசச் சுற்றோட்டம்
குருதி இதயத்தின் இடது இதயவறையிலிருந்து சுவாச பெருநாடியினூடாக நுரையீரல்களுக்கு சென்று அங்கு வாயு பரிமாற்றத்தில் ஈடுபட்டு O2 ஐ ஏற்றியபின் சுவாசப்பை
நாளங்களுக்கூடாக மீண்டும் இதயத்தின் இடது சோனையறையை
வந்தடையும்.
நாளங்களுக்கூடாக மீண்டும் இதயத்தின் இடது சோனையறையை
வந்தடையும்.
தொகுதிச் சுற்றோட்டம்
இதயத்தின் இடது இதயவறையிலிருந்து தொகுதிப் பெருநாடியினூடாக செல்லும். குருதி உடல் முழுதும்
சுற்றோட்டத்தில் ஈடுபட்ட பின் மேற்பெருநாளம், கீழ்ப்பெருநாளம் மூலமாக மீண்டும் இதயத்தை வந்தடையும். |
Note:-
- தேரை போன்ற விலங்குளில் நிறைவற்ற இரட்டைக் குருதிச் சுற்றோட்டம் காணப்படும்.
- இவற்றில் சுவாசச் சுற்றோட்டக் குருதியும், தொகுதிச் சுற்றோட்டத் தொகுதியும் கலப்படுகின்றன.
|
மனித சுற்றோட்டத் தொகுதியின் கட்டமைப்பும், தொழில்களும்.
மனிதனின் சுற்றோட்டத்தொகுதி முள்ளந்தண்டுகளின் அடிப்படை சுற்றோட்டத் திட்டத்திலிருந்து கூர்ப்படைந்துள்ளது. இது இதயம், குருதிக்கலன்கள், குருதி என்பவற்றைக் கொண்டுள்ளது.
முள்ளந்தண்டுளிகளின் அடிப்படை குருதி சுற்றோட்டத் திட்டம்.
வயிற்றுப் புறமாக தசை செறிந்த இதயமும், வயிற்றுப்புற பெருநாடியும் காணப்படும். வயிற்றுப்புற பெருநாடியிலிருந்து தோன்றும் 6 சோடி பக்கத்திற்குறிய பெருநாடி விற்கள் முதுகுப் புறமாக காணப்படும். பக்கப்புற பெருநாடியுடன் இணையும். பக்கப்புற பெருநாடிகள் இணைந்து தனித்த முதுகுப்புற பெருநாடியை தோற்றுவிக்கும். முதுகுப்புற பெருநாடி பல கிளைகளாக பிரிந்து உடலில் காணப்படும் அங்கிகளுக்கு குருதியை விநியோகிக்கும். இதயத்திலிருந்து தொண்டைக்கு கீழே வயிற்றுப்புற பெருநாடி முன்நோக்கிச் செல்லும். இதிலிருந்து தொடரான பெருநாடி விற்கள் தோற்றுவிக்கப்பட்டு உடலக பிலவுகளுக்கூடாச் சென்று இருபுறமும் காணப்படும் பக்க முதுகுபுற நாடிகளுடன் இணையும். பக்க முதுகுபுற நாடிகள் இணைவதன் மூலம் பின்னோக்கிச் செல்லும் நடுக்கோட்டிற்குறிய முதுகுபுற நாடி தோற்றுவிக்கப்படும்.
|
இதுவே முலையூட்டிகளில் சுற்றோட்டத்தொகுதியின் அடிப்படை கட்டமைப்பாகும். மனிதனில் இதனை முளைய நிலையில் அவதானிக்கலாம். முளைய நிலையில் 6 சோடி விற்கள் காணப்படும்.
மீன்களின் பெருநாடி விற்கள்
மீன்களில் முதலாவது சோடி பெருநாடி விற்கள் மறைகின்றன. பெருநாடி விற்கள் பூக்களினால் இரு பகுதிகளாகப் பிரிக்கப்படும்.
|
ஒவ்வொரு பூவிலிருந்தும் தோன்றும் வெலிக்காவுப் பூநாடிகள் இணைந்து மேற்காவுப் பூநாடியை தோற்றுவிக்கும்.
|
தேரையின் பெருநாடி விற்கள்
வெளிப்பூ நிலையில்
2ம் சோடி பெருநாடி வில்லும் மறையும். 3ம்,4ம்,5ம் சோடி விற்கள் வெளிப் பூக்களிற்கு குருதியை விநியோகிக்கும். 6ம் சோடி வில் முதுகுபுற பெருநாடியுடன் இணைந்திருக்கும். 3ம் சோடிவில்லில் இருந்து சிரசு நாடிகள் தோற்றுவிக்கப்படும்.
|
உட் பூ நிலையில்
இந்நிலையில் 4 சோடி உட்பூக்கள் சுவாச அங்கங்களாகத் தொழிற்படும். மீன்களைப் போன்று சுவாசம் இடம்பெறும். 6ம் சோடி பெருநாடியிலிருந்து சுவாசப்பை நாடிகள் தோன்ற ஆரம்பிக்கும்.
|
நிறையுடலி நிலையில்
நிறையுடலி நிலையில் 3வது சோடி சிரசு வில்லாக மாறும். 4வது சோடி தொகுதி வில்லாக நிலைத்திருக்கும். 5வது சோடி வில் மறையும். 6வது சோடி சுவாசப்பை தோல் வில்லாக நிலைத்திருக்கும். 3வது, 4வது சோடி பெருநாடி விற்களுக்கிடையே உள்ள பக்க முதுகுபுற பெருநாடிகள் சுருக்கமடைந்து அற்றுப்போகும். இது சிரசு கான் எனப்படும். 6வது சோடி நாடி விற்களிற்கும், பக்க முதுகுபுற பெருநாடிகளுக்குமிடையிலான தொடர்பு அற்றுப்போகும். இது நாடிக்கான் எனப்படும். இதன் போது சோனை அறைகள் இரண்டாக பிரிக்கப்படும்.
|
முலையூட்டிகளின் நாடி விற்கள்
3வது சோடி நாடிவிற்கள பொது சிரசு நாடிகளாக திரிபடைந்திருக்கும். 4வது சோடி நாடி வில்லின் இடது பக்க வில் தொகுதி பெருநாடியாக மாற்றமடையும். வலது பக்க வில் காரை என்புக் கீழ் நாடியாக மாற்றமடையும். 6வது சோடி வில்லின் இடது பக்க வில் சுவாசப்பை வில் நாடியாக மாற்றமடையும் அதேவேளை வலது பக்க வில் மறையும்.
|
இதயத்தில் ஏற்படும் மாற்றங்கள்
- இதயம் 4 அறைகளைக் கொண்டதாக மாற்றமடையும்.
- முளைய நிலையில் காணப்படும் நாளக்குடா வலது சோணையறையாக வியத்தமடையும்.
- இதயக் குமிழ் காணப்படாது.
- இரட்டைக் குருதிச் சுற்றோட்டமாக மாற்றமடையும்.
Note:-
- முளைய நிலையில் இரு வாயில் நாளங்கள் காணப்படும்.
- ஈரல் வாயில் நாளம்
- சிறுநீரக வாயில் நாளம்
- எனினும், நிறையுடலி நிலையில் சிறுநீரக வாயில் நாளம் மறைய ஈரல் வாயில் நாளம் மட்டும் காணப்படும்.
மனிதனின் குருதிச்சுற்றோட்டத் தொகுதி click here
-------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !
No comments