News

கலைப்பிரிவு மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பம், ஆங்கிலம் கற்பிக்க விசேட திட்டம்



பல்கலைக்கழகங்களில் கலைப்பிரிவில் கற்கும் மாணவர்களுக்காக தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில பாடநெறிகளைக் கற்பிப்பதற்கான விசேட திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இதனடிப்படையில், ஒவ்வொரு கலைப் பீடத்திலும் தகவல் தொழில்நுட்ப பிரிவொன்று ஸ்தாபிக்கப்படுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் ஜனிதா லியனகே தெரிவித்தார்.
மேலும், கலைப் பீடங்களில் அனைத்து மாணவர்களுக்கும் கற்பிக்கக்கூடிய வகையில், கணினி ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்படுமெனவும் அவர் கூறினார்.
பல்கலைக்கழகங்களிலிருந்து மாணவர்கள் வௌியேறிய பின்னர், அவர்களின் தகவல் தொழில்நுட்பத்துறை தொடர்பான அறிவு குறித்து சான்றிதழ்கள் வழங்கப்படுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் ஜனிதா லியனகே குறிப்பிட்டார்.
இதனிடையே, இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு, கணினி மற்றும் ஆங்கில பாடநெறி கற்கைகளை அடுத்த மாதம் முதல் ஒன்லைன் மூலம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்
குறித்த பாடநெறிகளை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு, வேறாக சான்றிதழ்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் ஜனிதா லியனகே குறிப்பிட்டார்

No comments

Lanka Education. Powered by Blogger.