கலிலியோகலிலி பற்றி ஒரு பார்வை
கலிலியோ (கி.பி. 1564 - 1642)
1564 இல் பீசா நகரில் பிறந்த இவர் தலைசிறந்த விஞ்ஞானியாவார். இவர் மற்றைய விஞ்ஞானிகளை விட சிறந்த விஞ்ஞான முறைகளைக் கண்டு பிடித்தமையால் உலகப் புகழ்பெற்றுள்ளர். கலிலியோ விஞ்ஞானப் பணிகளில் சடத்துவ விதி, தொலைநோக்கி கண்டு பிடிப்பு, வானியல் ஆய்வுகள், கொப்பனிக்கஸின் கோட்பாட்டை மெய்பித்தமை போன்றவை முக்கியமானவை. இவற்றைவிட இவர் விஞ்ஞான முறையியலை உருவாக்குவதற்குச் செய்த பணிகளே பெரும் புகழை ஈட்டித்தந்தது.
1. ஊசல்மாணியைத் தயாரித்தர்.
2. பின்னர் இதனடிப்படையில் இவரது மகன் (வின்சென்ஜி) சுவர்க்கடிகாரம் தயாரித்தார்;. இதுவே இன்றைய பென்டூலம் மணிக்கூடாக அபிவிருத்தியடைந்துள்ளது.
3. கலிலியோ தனது 22வது வயதில் ஆக்கிமிடிஸின் கொள்கையை பயன்படுத்தி பொருட்களின் அடர்த்தியைக் கணிப்பிதற்காக நீர்மட்டத் தராசைக் கண்டுபிடித்தார்.
4. பீசா பல்கலைக்கழத்தில் கணிதப் பேராசியர் பதவியை ஏற்றபின் (இருபத்தைந்து வயதில்) பாரம் குறைந்த பொருட்களைவிட பாரம் கூடிய பொருட்களே முதலில் விழும் என்ற அரிஸ்டோட்லின் கருத்தினை பல தொடர்ச்சியான பரிசோதனைகள் மூலம் பொய்யெனக் காட்டி 'பாரம் குறைந்த பொருட்களும் பாரம் கூடிய பொருட்களும் தடைத்தாக்கம் இல்லாவிட்டால் ஒரே நேரத்தில் விழும்' என்ற உண்மையை நிலை நாட்டினார். இந்த உண்மையினை நிலைநாட்டுவதற்காக தீர்ப்பு சோதனை செய்யப்பட்டது.
180 அடிகொண்ட பீசா கோபுரத்தின் 7 வது மாடியில் 100 பவுண்ட், கொண்ட இரு இரும்பு உருண்டைகளை (பந்து) போட்டவுடன் இரண்டுமே ஒரே நேத்தில் பூமியைச் தொட்டது. இயங்கும் பொருள் ஒன்றின் வேகம் படிப்படியாக குறைந்து கொண்டே செல்லும். இதனை வேறோர் விசையினால் முடிக்கிவிடாவிடின் அதன் இயக்கம் நின்றுவிடும் என நீண்ட காலமாக மக்கள் நம்பினால் இது தவறானது எனபதை கலிலியோ பல பரிசோதனைகள் மூலம் நிரூபித்தார். உராய்தல் போன்ற வேதக்தைக் குறைக்கும் விசைகளை அடியோடு நீக்குவோமாயின் ஒரு பொருள் இடைவிடாது தொடர்ந்து இயக்கிக் கொண்ட இருக்கும். (இதனை நியூட்டனின் தனது முதலாவது விதியாக வகுத்தமைத்தார்). கலிலியோ ஒளியின் வேகத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளுக்கும் வழிகோலினார்.
வானியல் பணிகள்
1. 17ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் குழப்பத்திலிருந்த வானியல் கோட்பாட்டை தெளிவாக்கினார். (1404 இல் கொப்பனிக்கஸின் கருத்தை சரியானதென நிரூபிக் காட்டினார்).
2. தொலைநோக்கி கண்டுபிடிப்பு:
லிப்பர்ஷி என்ற ஹாலந்து மூக்குக் கண்ணாடித் தயாரிப்பாளர் இரண்டு வில்லைகளை சமவளவு தூரத்தில் வைத்து நோக்கி அவ்வில்லைகளுக்கு அப்பால் வைக்கப்படும் பொருள் பெரிதாகத் தோன்றும் என்ற உண்மையைக் கண்டுபிடித்தார். இவ்வுண்மையை ஆதாரமாகக் கொண்டு கலிலியோ தொலைநோக்கியைக் கண்டுபிடித்தார். கலிலியோ முதலில் தயாரித்த தொலைக்காட்டி பொருட்களை மும்மடங்கு பெருப்பித்துக் காட்டியதுடன் அதன் உண்மையான தூரத்தில் மூன்றில் ஒரு பங்காக அண்மையில் சுருக்கியும் காட்டியது. எண்மடங்கு பெருப்பித்துக் காட்டும் தொலைகாட்டியைக் கண்டுபிடித்தார். இக்கருவியில் திருப்தியடையாத கலிலியோ முப்பது மடங்கு பெருப்பித்துக் காட்டக்கூடிய தொலைக்காட்டியொன்றை வடிவமைத்தார்.
இக்கருவியைச் பயன்படுத்திப் பின்வருவனவற்றைக் கண்டுபிடித்தார்.
1. ஆறு தாரைகள் என வர்ணிக்கப்படும் உடுத்தொகுதியைப் பார்த்து 36 உடுக்களை கண்டுபிடித்தார்.
2. பால்வீதியைக் கண்டுபிடித்தார்.
3. இக்கருவியினூடாக சந்திரனின் மேற்பரப்பை கண்டுபிடித்து அங்கு பெரும் மலைத்தொடர்களும், பள்ளங்களும் பரந்தர சமவெளிகளும் உண்டு என்பதை உலகறியச் செய்தார்.
4. 1610 இல் தனது கருவியை வியாழன் நோக்கித் திருப்பி அதற்கு அண்மையில் நான்கு சந்திரன்கள் உண்டு என்பதை உலகறியச் செய்தார்.
5. இத்துணைக்கோள்களில் ஒன்று வியாழனைச் சுற்றிவர நாற்பத்திரண்டு மணித்தியாலமும், ஏனையவை மூன்றும் பதினேழு நாட்கள் எடுக்கும் என்பதையும் கணித்துக் கூறினார்.
6. சூரியனை நோக்கி, அதில் சூரிய களங்கள் இருப்பதைக் கண்டறிந்தார்.
7. சந்திரனைப் போலவே சுக்கிரனுக்கும் வளர்ச்சியும் தேய்வும் உண்டு என்பதை கண்டுபிடித்து வெளிப்படுத்தினார்.
8. கலிலியோ கண்டுபிடித்த வெள்ளிக்கிரகம், செவ்வாய்கிரகம் போன்ற இரு கோள்கள் வேறு வேறு காலங்களில் பருமனில் மாற்றம் அடைந்தமை தெரிந்தது.
கலிலியோ விண்ணில் உள்ள பொருட்களைப் பற்றி இயற்கையான கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டார். இந்த இயற்கையான கண்டுபிடிப்பை மேற்கொள்வதற்கு தொலைநோக்கி என்ற கருவியைப் பயன்படுத்தினார். இந்த தொலைநோக்கியைக் கொண்டு வேறு வேறு நாட்களில் அவர் பல கண்டுபிடிப்பை மேற்கொண்டார். இந்த கண்டுபிடிப்பில் வெள்ளி என்ற கோள் வடிவத்தில் மாற்றம் அடைந்தமை தெரியவந்தது. இந்த முடிவைப் பெறுவதற்கு அவர் பலதடவை அவதானங்களை மேற்கொண்டதன் மூலம் பெறப்பட்டதாகும். இந்த முடிவு எல்லாவற்றையும் கலிலியா பதிவு செய்து கொண்டார்.

No comments