அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பம்!
நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளன.
பொதுத் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் கடந்த 4ஆம் திகதி முதல் முதல் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பொதுத் தேர்தல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாடளாவிய ரீதியில் சகல பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை முதல் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தரம் 5, 10, 11, 12 மற்றும் தரம் 13 ஆகியவற்றுக்கான கல்வி நடவடிக்கைகள் வாரத்தில் ஐந்து நாட்களும் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவைதவிர தரம் 1, 2, 3 மற்றும் தரம் 4 ஆகியவற்றுக்கான கல்வி நடவடிக்கைகள் நடவடிக்கைகள் வாரத்தில் ஒரு நாள் மாத்திரமே முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
No comments