News

குருதி - குருதித் திரவவிழையம்

    குருதி



    சராசரியாக மனிதனில் 5 லீட்டர் குருதி காணப்படும்.

    குருதியின் கூறுகள்

    1. திரவவிழையம் - 55%
    2. திண்மவிழையம் - 45%
    குருதியை மைய நீக்கிய வகைக்கு உட்படுத்துவதன் மூலம் திண்மக் கூறுகளை வேறாக்கிக் கொள்ள முடியும். இது Red pellet எனப்படும்.
    இதன் மேல் திரவவிழையம் வைக்கோல் நிறமாகக் காணப்படும். குருதியின் PH 7.3 - 7.4 வரை வேறுபடும்.

    குருதித் திரவவிழையம்

    இதில் 90% நீர் ஆகக் காணப்படும். இதில் பல இரசாயன பதார்த்தங்கள் கரைந்த நிலையில் காணப்படும். சமிபாடடைந்த உணவுக் கூறுகள், ஓமோன்கள், பிறபொருள் எதிரிகள் என்பனவும் காணப்படும்.

    நீர்

    நீரானது பல்வேறு கரையும் பொருட்களையும் கடத்துகின்றது. குருதியின் கணவளவையும், அமுக்கத்தையும் பேணுகின்றது.

    குருதிப்புரதங்கள்

    இது 7-9% வரையில் காணப்படும். பல்வேறு வகையான புரதங்கள் உள்ளன.

    Albumin

    இதுவே பிரதான புரத வகையாகும். கல்சியத்துடன் இணைந்து அதை கடத்த பயன்படும். இது ஈரலில் உற்பத்தி செய்யப்படும். குருதியின் கரைய அழுத்தத்தில் பங்களிப்பு செய்யும்.

    Serwm globulins

    இது மூன்று வகைப்படும்.
    1. a- globulins
    2. b- globulins
    3. r- globulins

    a- globulins

    இது ஈரலில் உற்பத்தி செய்யப்படுகின்றது. கொழுப்பில் கரையும் விற்மின்களான A, E, D, K, தைரொட்சின் ஓமோன் என்பவற்றுடன் இணைந்து அவற்றைக் கடத்தும்.

    b- globulins

    இது ஈரலில் உற்பத்தி செய்யப்படும். இரும்பு, கொலஸ்திரோல், கொழுப்பில் கரையும் விற்றமின்கள் என்பவற்றுடன் இணைந்து கூற்றைக் கடத்தும்.

    r- globulins

    இவை நிணநீர்க் குழியங்களால் உற்பத்தி செய்யப்படும். பிறபொருள் எதிரியாகத் தொழிற்படும். நீர்ப்பீடன தொகுதியில் முக்கியப் பங்காற்றுகின்றது.

    Prothrombin

    இது ஈரலில் உற்பத்தி செய்யப்படும். குருதி உறைதலில் பங்குபற்றும்.

    Fibrinagen

    ஈரலில் உற்பத்தி செய்யப்பட்டு குருதி உறைதலில் பங்குபற்றும்.

    நொதியங்கள்

    இவை அனுசேபத் தொழிற்பாடுகளில் பங்களிக்கின்றன.

    கனிப்பொருள் அயன்கள்

    Na+, K+, Ca2+, Mg2+, HCO3-, H2PO4-, HPO42-, PO43-, SO42- ஆகியனவே கனிப்பொருள் அயன்களாகும். இவை குருதியின் கரைய அழுத்தம், குருதியின் pH என்பவற்றை பேண உதவும். இவை மேலும் பல்வேறு தொழில்களை புரிகின்றன. சமிப்பாட்டுப் பதார்த்தங்களான வெல்லங்கள், கொழுப்பமிலங்கள், கிளிசரோல், அமினோவமிலங்கள், விற்றமின்கள், கழிவுப்பதார்த்தங்களான யூரியா போன்றவற்றையும், இன்சுலின், வளர்ச்சி ஓமோன்கள், பாலியல் ஓமோன்கள் என்பனவும் குருதியில் மாறுபடும் அளவுகளில் காணப்படும். இவை குருதியின் மூலமாகவே கடத்தப்படும்.

    குருதியின் கலக்கூறுகள்

    இவை மூன்று வகைப்படும்.
    1. செங்குழியம் (RBC)
    2. வெண்குழியம் (WBC)
    3. குருதிச் சிறுதட்டு

    செங்குழியம்

    இவை இரட்டைக் குழிவானதாகக் காணப்படும். 2.2nm தடிப்புடையது. இவற்றில் கரு காணப்படுவதில்லை. இதில் Heamoglobin காணப்படும். செவ்வெண்பு மச்சையில் உருவாக்கப்பட்டு, ஈரலில் அழிக்கப்படும். இதன் ஆயட்காலம் 120 நாட்களாகும். 1mm3 குருதியில் 4.5-5 மில்லியன் வரையில் காணப்படும். வட்ட வடிவானதாகும். சிறியனவாக இருப்பதால் ஊடுறுவச் செல்லும் ஆற்றலுடையவை. தட்டையாக்கப்பட்டு கூடுதலான பரப்பை கொடுக்கும். இதனால் வாயுப்பரிமாற்றம் இலகுவாக்கப்படும். இவற்றின் எண்ணிக்கை பால், வயது, நோய் நிலைமை, சூழற்காரணிகள் என்பவற்றின் அடிப்படையில் வேறுபடலாம். இவை ஒட்சிசனைக் காவும். இதில் இழைமணிகள் காணப்படாது. எனவே ஒட்சிசனைப் பயன்படுத்தாது. காற்றின்றிய சுவாசத்தின் மூலம் சக்தியைப் பெறும். காபோனிக்கென் நைட்ரோஸ் எனும் நொதியத்தின் உதவியுடன் CO2 கடத்தலில் பங்குக் கொள்ளும்.
    ஈரலில் உடைக்கப்படும் போது இதன் புரதங்கள் அமினோவமிலங்களாக மாற்றப்படும். இரும்பு பெரட்டினாக மாற்றப்பட்டு ஈரலில் சேமிக்கப்படும். பித்த நிறப்பொருட்களான டிளீருபின், பிளிவேர்டின் என்பன RBC சிதைக்கப்படும் போது ஈரலில் தோற்றுவிக்கப்படும். ஒவ்வொரு விநாடியும் 10 பில்லியன் RBC க்கள் அழிக்கப்படுகின்றன. இவற்றின் உற்பத்தி வீதம் வளிமண்டல ஒட்சிசனின் அளவில் தங்கியுள்ளன. ஒரு RBC யில் 250 Heamoglobin மூலக்கூறுகள் காணப்படுகின்றன.

    வெண்குருதிச் சிறுதுணிக்கை

    இவை இரண்டு வகைப்படும்.
    1. சிறுமணி கொண்டவை.
    2. சிறுமணி அற்றவை.

    சிறுமணி கொண்டவை

    இவற்றின் குழியவுருவில் சிறுமணிகள் போன்ற அமைப்புகள் காணப்படும். இவை மேலும் மூன்று வகைப்படும்.
    1. நடுநிலை நாடி
    2. அமில நாடி
    3. மூல நாடி
    இவை 72% காணப்படும். இவை விழுங்குவதன் மூலம் பிறபொருட்களை அழிக்கும்.
    1. நடுநிலை நாடி

    2. இவை 70வீதமான அளவில் காணப்படும். அமில, கார சாயங்களை ஏற்கும். இதன் கருவானது 3 சோணைகளைக் கொண்டதாகக் காணப்படும். விழுங்குவதன் மூலம் பிறபொருட்களை அழிக்கும்.
    3. அமில நாடி

    4. இவை 1.5 வீதமான அளவில் காணப்படும். அமில சாயத்தை ஏற்கும். இயோசின் சாயத்துடன் சிவப்பு நிறத்தை தோற்றுவிக்கும். அலற்சி நிலைமைகளின் போது இதன் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படும். அன்டி ஹிஸ்டமின் பதார்த்தங்களைக் கொண்டது(ஹிஸ்டமின் எதிர் பதார்த்தம்). இதன் அளவு அதிரினலினால் சுரக்கப்படும் ஓமோன்களால் கட்டுப்படுத்தப்படும்.
    5. மூலநாடி

    6. கார சாயங்களுடன் நிற மாற்றத்தை காட்டும்;. மெதிலின் நீலத்துடன் இணைந்து நீல நிறத்தை தோற்றுவிக்கும். இவை 0.5 வீதம் என்ற அளவில் காணப்படும். கரு 2 அல்லது 3 ஒழுக்கங்களைக் கொண்டது. ஹிஸ்டமின், எபாரின் போன்ற பதார்த்தங்களைச் சுரக்கும். குருதி உறைதலை தடுக்கும் பதார்த்தங்களைக் கொண்டிருக்கும். அலற்சி நிலைமைகளின் போது எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படும். சிதைவடைந்த கலங்களை புணர்தாரனம் செய்யக்கூடிய இரசாயன பதார்த்தங்களைக் கொண்டிருக்கும்.

    சிறுமணி அற்றவை

    இவற்றின் குழியவுருவில் மணிகள் போன்ற அமைப்பு காணப்படாது. இவை 2 வகைப்படும்.
    1. நிணநீர்க் குழியம்
    2. ஒற்றைக் குழியம்
    குழியவுருவில் காணப்படும் இலைசோசோம்களே சிறுமணிகள் போன்ற அமைப்புக்களைத் தோற்றுவிக்கும். வெண்குழியங்களில் கரு காணப்படும். இவை குருதியில் குறைந்த தொகையிலேயே காணப்படும். இதன் கருவானது மாறுபட்ட அமைப்புகளைக் கொண்டது. இவை குருதியோற்றத்திற்கு எதிரான திசையில் அசைந்து செல்லும். நோய் ஏற்படும் போது இவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும். 28சதவீதமான அளவில் காணப்படும்.
    1. நிணநீர்க் குழியம்

    2. இவை 24 வீதமான அளவில் காணப்படும். பிறபொருள் எதிரிகளை சுரப்பதன் மூலம் நுண்ணங்கிகளை அழிக்கும். 'தைமஸ்' சுரப்பி, நிணநீர் இழையம் என்பவற்றால் உருவாக்கப்படும். பெரிய வட்ட வடிவான கருவைக் கொண்டது. இவற்றில் குறைந்த குழியவுரு காணப்படும். இதன் ஆயுட்காலமானது சில நாட்கள் தொடக்கம் 10 வருடங்கள் வரையாகும்.
    3. ஒற்றைக் குழியம்

    4. இவை 4 வீதமான அளவில் காணப்படும். கருவானது சிறுநீரக வடிவானது. பிடித்து விழுங்குவதன் மூலம் பற்றீரியாக்களை அழிக்கும். 30-40 மணித்தியாலங்களின் பின் பெருந்திண் கலங்களாக மாறும்.

    குருதிச் சிறுதட்டுக்கள்

    இவை ஒழுங்கற்ற உருவமுடையது. என்பு மச்சையில் தோற்றுவிக்கப்படும். கரு காணப்படமாட்டாது. சுடீஊ யின் பருமனில் நான்கில் ஒரு பங்காக காணப்படும். குருதி உறைதல் ஆரம்பிப்பதில் பங்கு கொள்ளும். 1mm3 குருதியில் ஏறத்தாழ 250X 103 சிறுத்தட்டுக்கள் காணப்படும். இவை 5-9 நாட்கள் வரை உயிர் வாழும்.

    குருதியின் தொழில்கள்

    1. கரையும் சேதன பதார்த்தங்களைக் கடத்தும்.
      • உதாரணம்- சமிபாட்டு விளைவுகள்
    2. கரையும் கழிவுப்பதார்த்தங்களை கடத்தல்.
      • உதாரணம் - யூரியா
    3. ஓமோன்களைக் கடத்தல்.
    4. O2, CO2 போன்ற வாயுக்களைக் கடத்தும்.
    5. நோய்களுக் கெதிரான பாதுகாப்பை வழங்கள்.
      • வெண்குழியங்கள் மூலம் நுண்ணங்கிகளை அழித்தல்.
      • இமியூனோ குளோபிலினின் மூலம் நுண்ணங்கிகளுக்கெதிரான பாதுகாப்பை வழங்கல்.
    6. வெப்பத்தை உடல் முழுதும் கடத்துதல்.

    சுவாசநிறப்பொருட்கள்/ குருதி நிறப்பொருட்கள்

    குருதியில் காணப்படும் சுவாச வாயுக்களைக் கடத்துவதில் உதவும் சேதனப் பதார்த்தங்கள்(புரதங்கள்) சுவாச/ குருதி நிறப்பொருட்கள் எனப்படும்.
    சுவாச நிறப்பொருள்
    நிறம்
    பிரதான மூலகம்
    காணப்படும் இடம்
    உதாரணம்
    Heamoglobin
    சிவப்பு
    Fe2+
    a. RBC




    b.
     பிளாஸ்மா
    .
    மீன்கள்,
    நகருயிர்கள்,
    முலையூட்டிகள்,
    பறவைகள்,
    அம்பிபியா,
    அனலிடா,
    மொலஸ்கா
    Heamocyanin
    நீலம்
    CU2+
    பிளாஸ்மா
    இறால்,
    நண்டு
    போன்ற கிரஸ்ட்ரேஸியன்கள்,
    சில மொலஸ்கா
    Heamoerthrin
    சிவப்பு
    Fe3+
    திரவவிழையம்
    சில அனலிடா,
    சில மொலஸ்கா
    Chlorocrurin
    பச்சை
    Fe2+
    பிளாஸ்மா
    சில Annelida
    Note:-
    • மனிதர்களின் தசைகளில் மயோ குளோபின் எனும் நிறப்பொருள் காணப்படுகின்றது.

    குருதிப் பரிசோதனைகள்

    பல்வேறு நோய் நிலைமைகளை அறிவதற்காக குருதிப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
    1. குருதிக் குழியங்களின் எண்ணிக்கையை துணிதல்
    2. குருதியில் காணப்படும் வௌ;வேறு கலக்கூறுகளின் எண்ணிக்கையை துணிவதன் மூலம் வௌ;வேறு நோய் நிலைமைகளை அறியலாம்.
    3. செங்குழிய அடையதல் வீதம்(ESR)
    4. செங்குழியங்களின் அடையல் வீதம் குருதிப் பாகுத்தன்மையில் தங்கியுள்ளது. தொற்றலின் போது குருதியின் பாகுத்தன்மை வேறுபடும்.
    5. Haemoglobin சதவீதம் துணிதல்
    6. யானைக்கால் நோய், டெங்கு, HIV மற்றும் மலேரியா போன்ற பல நோய்கள் குருதிப் பரிசோதனை மூலமே அறியப்படும். குருதியின் இரசாயன உள்ளடக்கங்கள் அறியப்படுவதன் மூலம் நீரிழிவு, கொலஸ்திரோல் பிரச்சினைகள், ஈரலின் ஆரோக்கியம் தொடர்பான தகவல்கள் என்பன பெறப்படும்.

    குருதிக் கூட்டங்கள்

    குருதிக்கூட்டங்களானது குருதியில் காணப்படும் புரதங்களால் தீர்மானிக்கப்படும். இப்புரதங்கள் இரண்டு வகைப்படும்.
    1. Agglutinogen Antigen(பிறப்பொருள்) - RBCயின் மென்சவ்வு
      1. A
      2. B
    2. Agglutinin Antibody(பிறபொருள் எதிரி) திரவவிழையம்
      1. a
      2. B
    RBC யில் உள்ள பிறபொருள் A யிற்கு எதிராக திரவவிழையத்திலுள்ள பிறபொருள் எதிரி தொழிற்படும். அதே போல் செங்குழியங்களில் காணப்படும் பிறபொருள் Bஇற்கெதிராக பிறபொருள் எதிரி B(பீட்டா) தொழிற்படும். ஒருவரின் செங்குழியத்தில் யிருப்பின் திரவவிழையத்தில் a இருக்க முடியாது. அதேபோல் RBC யில் B இருப்பின் திரவவிழையத்தல் B(பீட்டா) இருக்க முடியாது.
    RBCதிரவவிழையம்குருதிக் கூட்டம்
    AB(பீட்டா)A
    BaB
    AB-AB
    -B(பீட்டா) ,aO

    குருதிக்குருக்குப் பாய்ச்சல்

    ஒருவரின் குருதியை மற்றொருவருக்கு வழங்குதல் குருதிக் குருக்குப்பாய்ச்சல் எனப்படும். இதன் போது வாங்குபவரின் பிறபொருள் எதிரியும், வழங்குபவரின் பிறபொருள்களும் கருத்திற்கொள்ளப்படும்.
    வழங்கிABABO
    வாங்கிABABO
    Avxxv
    B(பீட்டா)
    Bxvxv
    a
    ABvvvv
    -
    Oxxxv
    a,B(பீட்டா)

    v - ஏற்கும் x - ஏற்காது


    O - சர்வ வழங்கி   AB - சர்வ வாங்கி
     A - 42 %   B - 9 %  
     AB - 3 %   O - 46 %  
    பாரிய குருதி மாற்றீட்டின் போது குருதிக் கூட்டங்கள் மிகத் திருத்தமாக துணியப்படல் வேண்டும்.

    Rhesus Factor (Rh காரணி)

    செங்குழியங்களில் AGGlutinogen இற்கு மேலதிகமாக Rhesus காரணி எனும் மற்றுமொரு Antigen உம் காணப்படுகிறது. உலகில் 85% ஆனோர் இக் காரணியைக் கொண்டிருக்கும். இந்நிலை Rh(+) எனப்படும். இது இல்லாத நிலை Rh(-) எனப்படும். Rh காரணிக்கெதிரான Antibody குருதியில் சாதாரணமாகக் காணப்படுவதில்லை. எனினும், Rh(-) உடைய ஒருவருக்கு Rh(+) குருதியை சேர்க்கும் போது Rh(+) இற்கு எதிரான பிறபொருள் எதிரிகள் உருவாக்கப்பட்டு ஒருங்கொட்டுத்தலை ஏற்படுத்தும்.

    Rh காரணியும் குழந்தைப் பிறப்பும்.

    Rh(-) உடைய ஒரு தாய் Rh(+) குழந்தையை தரிக்கும் போது குழந்தையின் குருதியில் இருந்து தாயின் குருதிக்கு செல்லும் Rh காரணிகளால் தாயின் குருதியில் பிறபொருள் எதிரிகள் உருவாக்கப்படும். இதன் மூலம் கருவிலுள்ள குழந்தை பாதிக்கப்பட்டு,
    1. குறைப் பிரசவம்
    2. குருதிச் சோகை
    3. மஞ்சற் காமாலை
    என்பன ஏற்படலாம். தாயினால் தொடர்ந்து குழந்தைகளை பெற முடியாமல் போகலாம். தற்போது இதனை தடுப்பதற்கு தாயிற்கு Anti Rhesus Antibody எனும் மருந்து நாளத்தினூடகச் செலுத்தப்படும். O- உடைய ஒரு தாய் O+ தவிர்ந்த A+, B+, AB+ குழந்தைகளை தரிக்கும் போது தாயின் உடலில் Rh(+) இற்கெதிரான பிறபொருள் எதிரிகள் உருவாகாது. ஏனெனில் குழந்தையின் குருதியிலிருந்து தாயின் குருதிக்கு சேர்க்கப்படும் RBCகள் உடனடியாகவே தாயின் குருதியில் காணப்படும். a, B (பீட்டா) என்பவற்றால் அழிக்கப்படும்.

    குருதி உறைதல்

    இதன் போது சிறுதட்டுக்களில் இருந்து Thromboplatin குருதி உறைதல் காரணிகள் VII, X என்பன வெளியேறும். இதன் மூலம் குருதியில் காணப்படும் புரதமாகிய புரோத்துரோம்பின் துரோம்பினாக மாற்றப்படும். இச் செயற்பாட்டிற்கு விட்டமின் K உம் தேவைப்படும். Thrombin புரத்தியேஸ் நொதியமாக தொழிற்படும். இது குருதியில் காணப்படும்.
    மற்றொரு புரதமாகிய Fibrinogen ஐ நீரில் கரைய முடியாத Fibrin இழைகளாக நீர்ப்பகுப்புச் செய்யும். இவ்விழைகள் ஒன்று சேர்ந்து உருவாகும் வலையில் குருதிக் கலங்கள் சிக்குண்டு குருதி உறைதலை ஏற்படுத்தும். இதன் மூலம் குருதி தொடர்ந்து வெளியேறுவதை தடுக்கும்.
    குருதி உறைதலுக்கு மேலும் குருதி உறைதல் காரணிகள் VIII, IX என்பனவும் தேவைப்படும்.
    -------------------------------------------
    இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !


    If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

No comments

Lanka Education. Powered by Blogger.