News

மாணவரைக் கவர்ந்திழுக்கும் ஒன்லைன் கல்வி



கொரோனா தந்த துன்பங்கள், துயரங்கள் எண்ணிலடங்காதவை. கொரோனாவில் இருந்து மீள்வதற்காக அறிமுகமானவற்றில் ஒன்லைன் கல்வியும் ஒன்று. வெளிநாடுகளில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் நடை முறைப்படுத்தப்படும் ஒன்லைன் கல்வி இலங்கையிலும் இந்த கொரோனாவுடன்  அறிமுகமாகி உள்ளது.

இணையம் மூலம் நடத்தப்படும் ஒன்லைன் வகுப்புகளில் ”www.learneasy.lk" எனும் இணையதளம் இலங்கையில் முன்னணியில் வகிக்கிறது. தரம்1  முதல் க.பொ.த [உ/த] வரையிலான சகல பாடங்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் "www.learneasy.lk" எனும் இணைத்தளத்தில் ஒன்லைன் மூலம் கற்பிக்கப்படுகிறது.

எங்கிருந்தும், எப்போதும் கல்வியைப் பெற முடிவதுடன், அதை அனைவருக்கும் சாத்தியமாக்குவதும் தான் Learn Easy நிறுவனத்தின் நோக்காகும். மாணவரின் இயல்பு - தனித்துவத் தேவைக்கு ஏற்ற கற்றலைப்  பெறமுடியும்.



இது மீத்திறன் மாணவர்கள், மெல்லக் கற்போர், கற்றல் குறைபாடு உள்ளோர், சிறப்புக் குழந்தைகளுக்கு வரப்பிரசாதமாக அமையும். கல்வி நிலையங்களுக்கான அலைச்சல், கல்வி நிலையக் கட்டமைப்பு, ஆசிரியருக்கான தட்டுப்பாடு ஆகியவற்றுடன் புத்தகப்பொதி சுமத்தல், பாடசாலைக்கான பயணம், நேர விரயம், மற்றும் களைப்பு போன்றவற்றிலிருந்தும் மாணவர்களுக்குப் பெரும் விடுதலை கிடைக்கும்.

கல்விக்கான ஒன்லைன் வகுப்புக்கள் மட்டுமல்ல யோகாசனம், சதுரங்க, அபாக்கஸ் போன்ற ஏனைய ஒன்லைன் வகுப்புக்களும் மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

வகுப்பறைக் கற்றலைவிட ஒன்லைன் கல்விமுறையில் மாணவர்கள் கூடுதல் திறன்களைப் பெறுவது சாத்தியமாகும். வெவ்வேறு கல்வி நிறுவனங்களின் வாயிலாக ஒரே நேரத்தில் பல்வேறு படிப்புகளைப் பெறுவதும், உயர் கல்விக்கு உதவும். வருங்காலத்தின் பன்மயப்பட்ட தொழில் வளர்ச்சியை எதிர்கொள்ளும் பணித்திறனுக்கு அவை ஈடுகொடுக்கும்.  வீட்டில் இருந்தபடி  பிள்ளைகளைக் கண்காணிக்க ஒன்லைன் கல்வி உதவி செய்கிறது.

" www.learneasy.lk " இணையதளத்துக்கு ஒருமுறை சென்று பாருங்கள். இலகு முறையில் உங்கள் கல்வியை மேம்படுத்துங்கள்.


Get in Touch With Us to Know More
Like us on Facebook

------------------------------------------------------------------------------------------

இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

1 comment:

Lanka Education. Powered by Blogger.