News

க.பொ.த (சா/த) மாணவர்களுக்கான சுய கற்றல் இறுவெட்டுக்கள்



 இவ்வ ருடம் க.பொ .த சாதாரண தரப் பரீட்சைக்குத் (ஜனவரி 2021) தோற்றவுள்ள மாணவர்களுக்கு பரீட்சையை மையப்படுத்திய மீட்டல் வினா க்களும்.அதற்கான விடையளி க்கும் முறை தொடர்பான ஒலிப் பதிவினைக் கொண்ட இலத் திரனியல் கற்றல் இறுவெட் டூக்கள் தமிழ், ஆங்கிலம் கணி தம். விஞ்ஞானம். வரலாறு ஆகிய பாடங்களுக்கு வட மாகா ணக் கல்வித் திணைக்களத் தின் LMDM அலகினால் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இம் முன்னோடிச் செயற்றி ட்டத்தின் முதலாவது தொகுதி இறுவெட்டுக்கள் தீவகம், கிளி நொச்சி, முல்லைத்தீவு. துணு க்காய் . வவுனியா வடக்கு பாட சாலைகளுக்கு வழங்குவதற் கென அந்தந்த வலயங்களின் வலயக் கல்விப் பணிப்பாளர்க ளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

வட மாகாணத்தின் ஏனைய வலயப் பாடசாலைகள் தமக்குத் தேவைப்படும் இறு வெட்டினை பாடசாலை அதி பரின் கோரிக்கைக் கடிதத்தை யா/நல்லூர் ஆனந்தா வித் தியாலயத்தில் இயங்கும் வட மாகாணக் கல்வித் திணை க்களத்தின் LMDM அலகில் சமர்ப்பித்து பெற்றுக்கொள்ள முடியும். இறுவெட்டைப் பெற் றுக் கொள்ளும்பாடசாலை அதி பர்கள் உரிய நியமங்களைப் பின்பற்றி மாணவர்கள், சுய கற்றலில் ஈடுபட அவற்றைப் பிரதி செய்து வழங்க முடியும். மேற்படி பாடங்களுக்குரிய 2ம் தொகுதி இறுவெட்டுக்கள் டிசெம்பர் மாத முதல் வாரத்தில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் செ. உதயகுமார் அறிவித்துள்ளார்

Get in Touch With Us to Know More
Like us on Facebook



No comments

Lanka Education. Powered by Blogger.