கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான விஷேட அறிவித்தல்
கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் எதுவரையில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்பது தொடர்பில் அறிக்கையொன்றைக் கோருவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில், ஒவ்வொரு பாடத்திட்டத்தையும் பூர்த்தி செய்துள்ள வீதம் மற்றும் பாடத்திட்டத்தை பூர்த்தி செய்வதற்கு எடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் மீளாய்வு செய்யப்படவுள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் 17 ஆம் திகதி முதல் கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை ஆரம்பமாகவுள்ளது.
-------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
No comments