News

தமிழ் - இலக்கணம் - வினைச்சொல் ஒரு கண்ணோட்டம்

  


 ''வினைச்சொல் என்பது ஒரு செயலை குறிக்கும் "


வினைச்சொல்லின்  பண்புகள்     
  • ஒரு வாக்கியத்திலுள்ள பெயர்ச்சொற்களுக்கு ஏதாயினும் ஒரு வகையில் தொடர்புடையதாய் அமையும் சொல்.
  • ஒரு வாக்கியத்திலுள்ள பெயர்ச்சொற்களை முடிக்க வரும் சொல்.  கருத்தா அல்லது எழுவாய் செய்யும் செயலைக் குறிப்பதாக அமையும் சொல்.
  • வேற்றுமை உருபுகளை ஏற்காததாய் அமைந்து, வாக்கியபொருள் முற்றுப்பெற்று நடப்பதற்கு உதவும் சொல்.
  • கால இடைநிலைகளை ஏற்றுக் காலத்தை உணர்த்துவதாய் அமையும் சொல்
  • வினைச்சொல்லின்  வகைகள் 
    வினைச்சொற்களை அவற்றின் அமைப்பு, பொருள், வாக்கியத்தில் அவற்றின் தொழிற்பாடு முதலிய அடிப்படைகளில் பலவகையாகப் பாகுபடுத்தலாம்.                                          
                                                                                         
     ¹.முற்றுவினை                                               
                      🔺தெரிநிலை வினைமுற்று                    
                           🔺குறிப்பு வினைமுற்று                                   

    ².எச்சவினை
                          🔺பெயரெச்சம்                        
                          🔺வினையெச்சம்
    ₃. ஏவல் வினை முற்று
    ₄. வியங்கோள் வினை
    ₅. உடன்பாட்டு வினை
    ⁴. எதிர் மறை வினை
    ⁵. தன்வினை
    ⁶. பிறவினை
    ⁷. செய்வினை
    ⁸. செயற்பாட்டுவினை
    ⁹. தனிவினை
    ₁₀. கூட்டுவினை


    முற்று வினை

    இதனை முற்றுவினை, வினைமுற்று என்பர். பிறிதொரு சொல்லை எஞ்சி நிற்காமல் தன்னளவில் பொருள் முடிப்பை உணர்த்தி நிற்கும் வினைச்சொல் வினைமுற்று அல்லது முற்றுவினை எனப்படும்.
    உ-ம்- கண்ணன் வந்தான், வளவன் உண்டான், செழியன் செல்வான், மாறன் உறங்குகிறான்.



    தெரிநிலை வினைமுற்று
    செய்பவன்(கர்த்தா)செயல், காலம் என்பவற்றை வெளிப்படையாக காட்டும்  வினைச்சொற்களே தெரிநிலை வினைமுற்றுக்கள் எனப்படும்.
                      உ-ம்    -    நடித்தான், 
                                      படித்தான், 
                                       சமைக்கிறான், 
    கால இடைநிலைகளைப் பெற்று காலத்தை தெளிவாகவும் வெளிப்படையாகவும் காட்டும் வினைமுற்று எனப்படும்.
                       உ-ம்  -     உண்டான் - உண் , ட் , ஆன்
                                       உண் - பகுதி
                                        ட் - இறந்தகால இடைநிலை
                                       ஆன் - ஆன்பால் வினைமுற்று விகுதி.

    தெரிநிலை வினைமுற்று
    01. ஒரு வாக்கியத்தின் பயனிலையாக வரும்.
                        உ-ம்- முரளி வந்தான்.
                                  பறவை பறக்கிறது.
                                 யாழினி எழுந்து நின்றாள்.
                                 மாணவர்கள் வரிசையாகச் செல்கிறார்கள்.
                                 மந்தைகள் தன் இருப்பிடம் நோக்கி நடந்தன்.
    02. எழுவாய் பெயரின் திணை, பால், எண், இடம் என்பவற்றை உணர்த்தும் விகுதிகளை பெற்று வரும்.
             உ-ம்- வந்தான் (ஆன்) உயர்திணை, ஆண்பால், ஒருமை, படர்க்கை
    03. கால இடநிலைகளைப் பெற்று காலத்தைத் தெளிவாகக் காட்டும்.
            உ-ம்-   வந்தான்       -  ந்த்      (இறந்தகாலம்)
                        வருகிறான்   -  கிறு    (நிகழ்காலம்)
                        பறக்கின்றது-  கின்று (நிகழ்காலம்)
                        அழுவார்       - வ்        (எதிர்காலம்)

    🔼தெரிநிலை வினைமுற்றுக்கள் ஒரு வாக்கியத்தில் பயனிலையாக வந்து எழுவாய் பெயரின் திணை, பால், எண், இடம் உணர்த்தி இடைநிலையால் காலம் காட்டும்.
    அதாவது,
    வினையடி ⥤ இடைநிலை ⥤  விகுதி என்ற அமைப்பில் காணப்படும்.

                                          கிறு                                 கின்று
    நாங்கள்                   வருகிறோம்                       வருகின்றோம்
    நீ                              வருகிறாய்                         வருகின்றாய்
    நீங்கள்                     வருகிறீர்கள்                       வருகின்றீர்கள்
    அவன்                      வருகிறான்                         வருகின்றான்
    அவர்                        வருகிறார்                          வருகின்றார்
    அது                          வருகிறது                           வருகின்றது
    அவை                       ..………                                வருகின்றன.

    வினைமுற்றுத்தொடர் 
    உண்டான் கண்ணன் - இங்கே உண்டான் என்பது வினைமுற்று அதனை தொடர்ந்து அதன் எழுவாய் ஆகிய கண்ணன் வருவதனால் இது வினைமுற்றுத்தொடர். இந்நிலைமாறி கண்ணன் உண்டான் என வரின் அது எழுவாய் தொடராக கருதப்படும்.



    குறிப்பு வினைமுற்று

    01. கால இடைநிலையைப் பெறாமல் காலத்தை குறிப்பால் உணர்த்தும் வினைமுற்றை குறிப்பு வினைமுற்று என்பர்.

            உ-ம் நல்லம் - நல் -  ல் -  அன்
                     நல்  -  பகுதி
                    அன் -  விகுதி

    02. திணை, பால், எண், இடம் என்பவற்றை வெளிப்படையாகக் காட்டி காலத்தை மட்டும் குறிப்பாக புலப்படுத்துவன குறிப்பு வினைமுற்று எனப்படும்.
          உ-ம்
                    • அவன் நல்லன்

                    • அவன் மூடன்
                    • அவன் பெரியன்
                    • இவன் கரியன்
                    • இவன் எம் ஊரன்
                    • சோழன் பொன்னன்
    # தற்காலத்தில் குறிப்பு வினைமுற்று அவசியம் இல்லை.
                  நான் நல்லவன்
                  நான் பெரியவன்
                  நாங்கள் கறுப்பர்கள்  என்றவாறு பெயர்ப் பயனிலையாகவே       பயன்படுத்துகிறோம்.


    ஏவல்வினை
    முன்னிலையில் இருப்போரை நோக்கி ஒரு வினையை (செயலை) நிகழ்த்துமாறு ஏவுவதற்கு (கட்டளையிடுவதற்குப்) பயன்படும் வினைவடிவம் ஏவல் வினைவினை எனப்படும்.
                  உ-ம் தம்பி போ, 

                          தம்பி போகாதே,  

                          மாணவர்களே போகாதீர்கள்.
    இதனை,
    1. ஏவல் ஒருமை, ஏவல் பன்மை என்றும்
    2. உடன்பாட்டு ஏவல் 

    3. எதிர்மறை ஏவல் என்றும் பாகுப்படுத்தலாம்.
    1. ஏவல் ஒருமை
    வா, போ, நில், இரு, நட, எழுது, உருட்டு, படி, புரட்டு, கைதுசெய்,  செய்துகாட்டு போன்ற வினையடிகள் உடன்பாட்டு ஏவல் ஒருமை வினையாக வரும்.


    1. எதிர்மறை ஏவல் ஒருமை வினைமுற்று
                  செய்யாதே   – செய்  , ஆத்  ஏ

                  நில்லாதே     –  நில்   , ஆத்  ,ஏ   

    இதில்,

    செய்  - நில் என்பன வினையடிகள். 

    ஆத்   - என்பது எதிர்மறை ஏவல் இடைநிலை. 

           -  என்பது எதிர்மறை ஏவல் விகுதியாகும்.

    எதிர்மறை ஏவல் ஒருமை வினைமுற்று வினையடி ,ஆத்  , ஏ எனும் அமைப்புடையதாக விளங்கும்.



    2. ஏவல் பன்மை வினைமுற்று
                     போங்கள்     -    போ  ,  ங்கள்   
                     எடுங்கள்      -    எடு   ,  ங்கள்

                     செய்யுங்கள் -    செய் ,  உங்கள்  

                     நில்லுங்கள்  -     நில்  ,  உங்கள்

    போன்ற சொற்களில் போ, செய், எடு, நில் என்பவை வினையடிகள். -ங்கள்- , -உங்கள்- என்பவை உடன்பாட்டு ஏவல் பன்மை விகுதிகள்.
    அதாவது ஏவல் பன்மை வினைமுற்று, வினையடி ஏவல் பன்மை விகுதி
    எனும் அமைப்பை கொண்டிருக்கும்.
      -ங்கள்- , -உங்கள்- என்பவை ஏவல் பன்மை விகுதிகளாகும்.ஏவல் பன்மை வினைமுற்று பன்மையை உணர்த்தவும்,    ஒருமைப்பெயர்களுடன் மரியாதை உணர்த்தவும் பயன்படுகின்றன.
             உ-ம்  
                 மாணவ, மாணவகளே வாருங்கள் - (பன்மை)
                 மாமா வாருங்கள் - (மரியாதை ஒருமை)

    எதிர்மறை ஏவல் பன்மை வினைமுற்று
                  செய்யாதீர்கள் - செய் ,   ஆத்  , ஈர்கள்
                  தொடாதீர்கள் - தொடு ,  ஆத்  ,  ஈர்கள்
                  ஓடாதீர்கள் -    ஓடு,       ஆத்  , ஈர்கள்
    இவற்றில் செய், தொடு, ஓடு என்பன வினையடிகள் 
                     -ஆத்    -  என்பன எதிர்மறை இடைநிலை. 
                     -ஈர்கள் - என்பது முன்னிலை பன்மை விகுதி.
    அதாவது எதிர்மறை ஏவல் பன்மை வினைமுற்று, வினையடி , ஆத் , ஈர்கள் எனும் அமைப்பை கொண்டது.


    வியங்கோள் வினை
     ஒருவரை வாழ்த்துவதற்கு, எதிர்ப்பை அல்லது வெறுப்பைத் தெரிவிப்பதற்கு, வினையமாக வேண்டிக்கொள்வதற்கு பயன்படும் வினைவடிவம் வியங்கோள் வினை எனப்படும்.
                       உ-ம்
                             வாழ்க  பெறுக  மலர்க
                             வளர்க வீழ்க  ஒழிக
                             எழுதுக அழிக  செய்க
                             எழுக  கூறுக  செல்க 
     இவை வினையடிகளுடன் -க- விகுதி பெற்று வந்துள்ளதை அவதானிக்கலாம். வினையடி , க விகுதி பெற்று வரும் வினைகளையே வியங்கோள் வினை என்பர்.
                       1. நீங்கள் நீடுழி வாழ்க!
                          2. உங்கள் வாழ்வில் இன்பம் மலர்க!
                          3. நீங்கள் எல்லாச் செல்வமும் பெறுக! 
                          4. கல்வியில் இன்னும் இன்னும் முன்னேறுக!
      இங்கு வாழ்க, மலர்க, பெறுகமுன்னேறுக என்பன ஒருவரை வாழ்த்துவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.
                       1. வறுமை ஒழிக!
                          2. கொடுங்கோள் அரசு வீழ்க!
                          3. உன் புத்தி பேதலித்துப் போக!
                          4. அறியாமை இருள் அழிக!
    இங்கு ஒழிக, வீழ்க, போக, அழிக, என்பன வெறுப்பை, எதிர்ப்பைத் தெரிவிக்கப் பயன்பட்டுள்ளன.
                        1. ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடை எழுதுக.
                           2. உங்கள் பிரச்சினைகளை அமைச்சரிடம் கூறுக.
                           3. விண்ணப்பங்களை என்னிடம் தருக.
    இங்கு எழுதுக, கூறுக, தருக, என்பன ஒருவரிடம் வினையமாக வேண்டிக் கொள்வதற்கு பயன்பட்டுள்ளது.பழந்தமிழில் வியங்கோள் வினைமுற்று விகுதிகளாக க, இய, இயர், அ, அல் என்னும் விகுதிகளை கூறுவர்.
                          உ-ம் வாழ்க  (க)
                                  வாழிய (இய)
                                  வாழியர் (இயர்)
                                  வர உண்ண (அ)
                                  ஓம்பல், எனவ் (அல்)
    தற்காலத்தில்…
     தற்காலத்தில் இவை வழங்குவதில்லை. இவற்றில் 
                       -க- பெருபான்மையாகவும்
                     -இய- விகுதி சிறுபாண்மையாகவும் கவிதைகளில் வருகின்றது.
       உ-ம் வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி    வாழிய வாழியவே.
    தற்கால தமிழில் -அட்டும்- என்பதும் வியங்கோள் வினை விகுதியாகப் பயன்படுகின்றது. -அட்டும்- வேண்டுதல் பொருளில் வருவதில்லை, வாழ்த்து, வெறுப்பு, விருப்பு ஆகிய பொருள்களிலேயே வருகின்றது.
                     உ-ம்     1. அவர்கள் நீடுழி வாழட்டும்.   - வாழ்த்து
                                 2. அவர்கள் வாழ்வில் இன்பம் மலரட்டும். - வாழ்த்து
                                 3. பாவிகள் ஒழியட்டும்.      - வெறுப்பு
                                 4. வையம் செழிக்கட்டும்.   - விருப்பு

                                 5. மழை பொழியட்டும்.      - விருப்பு



    உடன்பாட்டு வினைமுற்று

    ஒரு செயல் நிகழ்ந்ததை உணர்த்தும் வினைச்சொற்கள் உடன்பாட்டு வினைமுற்று எனப்படும். அதாவது வினைச்சொல் உடன்பாட்டுப் பொருளில் வருவது உடன்பாட்டு வினையாகும்.
                     உ-ம் வந்தேன், எழுதினேன், வரைந்தேன்…
                              அவன் நடந்தான், கோதை பாடுகின்றாள், மழை வரும்…

    1.பாரதிதாசன் சஞ்சீவி பர்வத்தின் சாரல் எனும் சிறுகாவியத்தை

        இயற்றினார்.
    2.கண்ணகியின் வாழ்வில் மீண்டும் மகிழ்ச்சி பொங்கும் என்று எதிர்பார்த்த    எமக்கு கோவலன் கொலை பேரதிர்ச்சியைத் தருகிறது.

    இவ்வாக்கியங்களில் வரும் இயற்றினார், பொங்கும், தருகிறது என்பன உடன்பாட்டு வினைகள். இவை செயல் நிகழ்வையும் காலத்தையும் காட்டுகின்றது.


    எதிர்மறை வினைமுற்று
    ஒரு செயல் நிகழாமையை உணர்த்தும் வினைச்சொற்கள்  எதிர்மறை வினைமுற்று எனப்படும். 
    அதாவது வினைச்சொல் எதிர்மறை பொருளில் வருவது எதிர்மறை வினையாகும்.
                            உ-ம் போகவில்லை, படிக்கவில்லை, வராது, செல்லாது…


    பழந்தமிழில் எதிர்கால வினைமுற்று…

                                      வரேன்    தரேன்     -  தன்மை ஒருமை
                                      வரோம் தரோம்     -  தன்மை பன்மை
                                      வராய்   தராய       -  முன்னிலை ஒருமை
                                      வரீர்   தரீர்             -  முன்னிலை பன்மை
                                      வரான் தரான        -  படர்க்கை
                                      வராது   தராது       -  படர்க்கை
       தற்காலத் தமிழில் இவ்வகையான எதிர்மறை வினைகள் வழக்கில் இல்லை. தற்காலத் தமிழில் மூன்று நிலைகளில் எதிர்மறை வினை முற்றுகள் அமைகின்றன. 
    1. –ஆ- , -ஆத்- ஆகியன எதிர்மறை இடைநிலை பெறுவன
                        உ-ம்  - அவை, வரா,  நிற்கா,   போ
                                   அது வராது  நிற்காது  போகாது
    2. –மாட்டு- என்ற எதிர்மறை இடைநிலை பெறுவன
                       உ-ம்  செய்யமாட்டேன் செய்யமாட்டான்
    இது எதிர்காலத்திலும், வழமைபொருளிலும் (நிகழ்காலம்) பயன்படுத்தப்படும்.
    3. -இல்லை- என்ற எதிர்மறை வினை பெற்று வருவன
                       உ-ம்  நான் போகவில்லை.
                                நான் இப்போது போகவில்லை.
                                நான் நேற்றுப் போகவில்லை.
                                நான் நாளை போகவில்லை.
     இது தன்மை முன்னிலை, முக்காலத்துக்கும் பொதுவானதாக வரும்.

    சில வினை வகைகள்
    1. செயப்படப்பொருள் குன்றிய வினை, குன்றா வினை
    2. செய்வினை, செயப்பாட்டுவினை
    3. தன்வினை, பிறவினை, காரணவினை
    4. முதல்வினை, துனைவினை
     செயப்படுபொருள் குன்றி, குன்றாவினை
      ஒரு வாக்கியத்தில் செயப்படுபொருளை இனங்கண்டுக்கொள்ள வினையில் எதை, யாரை, எவற்றை என்ற  வினாக்களை எழுப்ப வேண்டும். அதற்கு கிடைக்கும் பதிலே ஒரு வாக்கியத்தின் செயப்படுபொருளாகும்.



    1) செயப்படுபொருள் குன்றாவினை
     ஒரு வாக்கியத்தில் செயப்படுப்பொருள் வெளிப்படையாக தெரியுமாக இருந்தால் அது செயப்படுபொருள் குன்றா வினை எனப்படும்.
    ஒரு வாக்கியத்தில் செயப்படுபொருள் ஏற்கக் கூடிய வினைகள் செயப்படுபொருள் குன்றா வினை எனப்படும்
                    • நான் சோறு சாப்பிட்டேன் (எதை சாப்பிட்டேன்) - சோறு
                    • நான் கடிதம் எழுதினேன் (எதை எழுதினேன்) – கடிதம்
                    • அவள் புத்தகம் வாசித்தாள் (எதை வாசித்தாள்) – புத்தகம்

    2) செயப்படு பொருள் குன்றியவினை
    சில வினைகள் வாக்கியத்தில் செயப்படுபொருளை ஏற்பதில்லை அத்தகைய வினைகளை செயப்படுபொருள் குன்றி வினை என்போம்.
    •  நான் தனிமையில் சிரித்தேன்  (எதை சிரித்தேன்)
    • நான் வேனமான ஓடினேன்       (எதை ஓடினேன்)
    • அவன் மௌனமாக அழுதாள் (எதை அழுதாள்)                  
    என கேள்விகளை கேட்க முடியாது. அவ்வாறு கேட்க முடியாத வினைகளே செயப்படுபொருள் குன்றிய வினைகள் எனப்படும்

    செய்வினையும் செயப்பாட்டு வினையும்
    எழுவாய்க்கும், வினைக்கும் இடையே உள்ள உறவை வெளிக்காட்டுவது.
    செய்வினை எழுவயை கருத்தாவாக கொள்ளும் வினைகளே செய்வினை எனப்படும். இங்கு வினையை நிகழ்த்துபவர் எழுவாயாக காணப்படுவர்

    ஒரு வாக்கியத்தில் எழுவாயை இனங்கண்டுக்கொள்ள வினையில் எது, யார், எவை என்ற  வினாக்களை எழுப்ப வேண்டும். அதற்கு கிடைக்கும் பதிலே ஒரு வாக்கியத்தின் எழுவாயாகும்.
    1. அவன் வேகமாக ஓடினான்
    2. அவள் ஊரக்கு வந்தாள்
    3. ரவி பலமாக சிரித்தான்    இவ்வாக்கியங்களின் எழுவாய் அவன்,அவள், ரவி. இவர்களே வினையை நிகழ்த்துபவர்களாக உள்ளனர்.
    செயப்பாட்டு வினை
     செயப்படுபொருளை எழுவாயாகக் கொள்ளும் வினை செயப்பாட்டு வினை எனப்படும். செயப்படுபொருள் குன்றா வினைகளே செயப்பாட்டு வினை வாக்கியமாகும்.
            җ யானை பாகனைக் கொன்றது – செய்வினை
            җ பாகன் யானையால் கொல்லப்பட்டான்
            җ யானையால் பாகன் கொல்லப்பட்டான்

    தன்வினை, பிறவினை, காரணவினை
    தன்வினை
     வினையின் பயன் கருத்தாவை அல்லது எழுவாயை அடையுமாக இருந்தால் அது தன் வினை எனப்படும்.
               • தம்பி சோறு உண்டான்
    தம்பியே வினையை நிகழ்த்தியது அதனுடைய பயனை அடைந்ததும் தம்பியே
    பிறவினை
     ஒரு வினையின் பயனை கருத்தா அல்லது எழுவாய் அடையாமல் வேரொருவரை சேருமாயின் அவ்வினை பிறவினை என்ப்படும்.
               • தாய் குழந்தைக்கு சோறூட்டினாள்
    இங்கு வினையை நிகழ்த்தியவர் தாய். ஆனால் அதனுடைய பயனை அடைந்தவர் தம்பி.
    காரணவினை
     கருத்தா தானே வினையை நிகழ்த்தாமல் வேரொருவரைக் கொண்டு நிகழ்த்துவது.
        • அம்மமா தம்பிக்கு சோறு உண்பித்தால் (இங்கு அம்மா சோறு ஊட்டாமல் வேரொருவரைக் கொண்டு ஊட்டியிருப்பதை காணலாம்.)
         அம்மா வினை நிகழ காரணமானவர்
         வினையை நிகழ்த்தியவர் வேரொரு நபர்
         வினையின் பயனை அனுபவித்தவர் மற்றுமொரு நபர்.
           முதல் வினை, துனைவினை

    முதல் வினை - நான் படம் பார்த்தேன் 

    இங்கு பார் என்பது பிரதான கருத்தை உணர்ததுகிறது
    துனை வினை - அவன் ஓடப்பார்த்தான் - இங்கு பார் என்பது அடி சொல்லை விளக்க பயன்படுகின்றது 

    தொகை,தொகாநிலைத் தொடர்கள்.
    தொடர்கள் என்றால் என்ன?
    இறு சொற்கள் இணைந்து ஒரு பொருளை உணர்த்துவது தெபாடர்கள் எனப்படும்.      ( துடி , இடை , துடியிடை )
    தொகை நிலைத் தொடர்கள்
     “சொற்றொடர்களுக்கிடையில்  உருபுகள் தொக்கி நிற்பதைத் தொகை நிலைத் தொடர்கள் என அழைப்போம்
    இரு சொற்கள் இணைந்து ஒரு சொல்லின் தன்மையை பெற்று பொருள் பிளவுப்படாது காணப்படும்.

     உதாரணமாக : நாடுகடந்தான் 

                                 வருபுகழ், 

                                 கருங்குரங்கு, 

                                 பவளவாய்

                                 இராப்பகல்
    தொகைநிலைத் தொடர்களின் வகைகள்
    1. வேற்றுமைத் தொகை
    2. வினைத்தொகை
    3. பண்புத்தொகை
    4. உவமைத் தொகை
    5. உம்மைத்தொகை
    6. அன்மொழித்தொகை

    1. வேற்றுமைத் தொகை
     “வேற்றுமை உருபுகள் மறைந்து அல்லது கெட்டு நிற்கும் சொற்றொடர்களை நாம் வேற்றுமைத்தொகை என்போம்”
    வேற்றுமைத்தொகை           உருபு                           விரிவு
    நிலங்கடந்தான்                       ஐ                          நிலத்தைக் கடந்தான்
    தலைவணங்கினான்             ஆல்                        தலையால் வணங்கினான்
    கண்ணன் மகன்                      கு                          கண்ணனுக்கு மகன்

    ஆதவன்கை                           அது                        ஆதவனது கை



    2. வினைத்தொகை
     பெயரெச்சத்தின் விகுதியும் காலங்காட்டும் இடைநிலைகளும் கெட்டு வரும் சொற்றொடர்களே வினைத்தொகை எனப்படும். மூன்று காலங்களையும் காட்டக்கூடியது.



    உதாரணமாக
    வினைத்தொகை  இறந்தகாலம்        நிகழ்காலம்              எதிர்காலம்
    1.வருபுனல்        வந்தபுனல்           வருகின்றபுனல்          வரும்புனல்
    2.கொல் களிறு    கொன்ற களிறு    கொள்கின்ற களிறு    கொள்ளும் களிறு
    3.விடு கணை      விட்ட கணை       விடுகின்ற கணை      விடும் கணை
    4.சுடு சாம்பல்      சுட்ட சாம்பல்      சுடுகின்ற சாம்பல்      சுடும் சாம்பல்

    5.குளிர்நீர்            குளிர்நத  நீர்       குளிருகின்ற நீர்          குளிரும் நீர்



    3. பண்புத் தொகை
    பண்புத்தொகை என்பது வண்ணம், வடிவு, அளவு, சுவை, முதலியவற்றை வெளிப்படுத்துவதாக அமையும். இங்கு ஆகிய, ஆன என்னும் சொல்லுருபுகள் கெட்டு நிற்கும்
    • செந்தாமரை             செம்மையாகிய தாமரை       வண்ணம்
    • வட்டக்கல்                 வட்டமாகிய கல்                     வடிவம்
    • முக்குணம்                மூன்றாகிய குணம்                அளவு
    • இன்சொல்                இனிமையான சொல்              சுவை
    பண்புரு கெட்டு, பொது பெயரோடு சிறப்புப் பெயரும் ஒரு பொருள்பட வருவதை இருபெயரொட்டு பண்புத்தொகை என்போம்.
               சாரைப்பாம்பு – சாரையாகிய பாம்பு (இங்கு பாம்பு என்பது பொது பெயராகவும், சாரை என்பது சிறப்புப் பெயராகவும் அமைவதைக் காணலாம்)

    4. உவமைத்தொகை
    • உவமை உருபுகள் கெட்டு நிற்குமாயின் அது உவமைத் தொகை எனப்படும்.
    • உவமை உருபுகளாக :- போல, புரைய,ஒப்ப, உறழ, மான, கடுப்ப, இயைய, ஏய்ப்ப, நேர, அன்ன, இன்ன
                  பால் நிலவு    - பால் போன்ற நிலவு
                  கொடியிடை  - கொடி போன்ற இடை
                   மான்விழி     - மான் போன்ற விழி
    5. உம்மைத்தொகை
     ‘உம்’ என்ற இடைச்சொல் தொக்கி நிற்குமாக இருந்தால் இது உம்மைத்தொகை எனப்படும்
                 இராப்பகல் - இரவும் பகலும்
                 ஒன்றேகால் - ஒன்றும் காலும்
     6. அன்மொழித்தொகை
    “வேற்றுமை தொகை முதலான ஐந்து தொகை நிலைத் தொடர்களும் தமக்குரிய பொருளை உணர்த்தாது அதற்கு அப்பால் வேறு பொருளை உணர்த்தி நிற்பதை அன்மொழித்தொகை என்போம்”
  • --------------------------------------------

    இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !



    If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !
    Get in Touch With Us to Know More
    Like us on Facebook









No comments

Lanka Education. Powered by Blogger.