சாதாரணதர பரீட்சை தொடர்பில் கல்வியமைச்சர் வெளியிட்ட தகவல்
சாதாரண தர பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன்படி பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் எவராவது கொவிட் தொற்றுக்கு உள்ளானால் அவர்கள் பரீட்சையை எழுதுவதற்கு ஏற்றவகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு பரீட்சை நிலையங்கள் பிரத்தியேகமாக அமைக்கப்டவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாடாளாவிய ரீதியில் 4,513 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் ஆறு இலட்சத்து 22 ஆயிரத்து 306 பேர் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
இவர்களில் ஒரு இலட்சத்து 98 ஆயிரத்து 606 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாவர்.
பரீட்சை முடிவுகள் எதிர்வரும் ஜூன் மாதம் வெளியிடப்படுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
சாதாரணதர பரீட்சை எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments