சாதாரண தரப் பரீட்சை பிரயோகப் பரீட்சைகளை நடாத்துவதில் சிக்கல்
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளின் பிரயோகப் பரீட்சைகளை நடத்துவதில் பரீட்சைகள் திணைக்களம் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
பிரயோகப் பரீட்சைகளை நடத்தி அதன் பெறுபேறுகளை சேர்க்காமல் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளின் பெறுபேறு வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போதைய நிலைமையில் பிரயோகப் பரீட்சைகளை நடாத்துவது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவத்த பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
பரீட்சை முடிவுகள் வெளிவரும் திகதிகள் தொடர்பாக பல்வேறு ஊடகங்களிலும் கருத்துக்கள் வெளியான போதிலும் பிரயோகப் பரீட்சைகளை நடாத்துவற்கு பொருத்தமான சூழல் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இது தொடர்பாக கருத்துக் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டவுடன் ஒரு வாரத்திற்குள் பிரயோகப் பரீட்சைகளை நடத்துவதற்கான திட்டத்தை பரீட்சைகள் திணைக்களம் தயாரித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இப்பரீட்சையில் 600,000 க்கும் மேற்பட்டோர் பங்குபற்றியிருந்தனர்.
No comments