பல்கலைக்கழக நுழைவுக்கு விண்ணப்பிக்கும்போது, ஒன்லைன் (Online) முறையில் மாத்திரம் விண்ணப்பிப்பது போதுமானது
பயனக்கட்டுப்பாடு அமுலில் உள்ள காலப்பகுதியினுள், 2020/21 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக நுழைவுக்கு விண்ணப்பிக்கும்போது, ஒன்லைன் (Online) முறையில் மாத்திரம் விண்ணப்பிப்பது போதுமானது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூன் 11 ஆம் திகதி ஒன்லைன் முறைமை ஊடாக விண்ணப்பிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துவெளியிட்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.
அத்தோடு, பாடசாலை விலகல் சான்றிதழோ அல்லது க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேற்றின் பிரதியோ பல்கலைக்கழக விண்ணப்பத்துடன் இணைப்பது கட்டாயமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதனாலும் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்துவதனாலும் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தனிப்பட்ட பரீட்சார்த்திகள் கிராம அதிகாரியின் சான்றிதழை இணைத்து அனுப்ப வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது. எனினும் அவ்வாறான சான்றிதழ் இன்றி விண்ணப்பத்தை மட்டும் அனுப்புமாறும் அவர் வேண்டிக் கொண்டார்.
நிலமை சீரடைந்து பாடசாலைகள் மீளத் திறந்த பின்னர் இவ்வாறான சான்றிதழ்களை அனுப்புவது போதுமானது என அவர் தெரிவித்துள்ளார்.
வேறு இடங்களுக்குச் செல்லாமல் தமது வீடுகளில் இருந்து மாத்திரம் விண்ணப்பப் படிவத்தை நிரப்பி அனுப்பும் வகையில் செயற்படுமாறு அவர் வேண்டிக் கொண்டார்.
-------------------------------------------
No comments