News

அமுலுக்கு வரவுள்ள புதிய கல்வி சீர்திருத்தம்



2023 ஆண்டிலிருந்து அமுலுக்கு வரவுள்ள புதிய கல்வி சீர்திருத்தம் (New Syllabus) தொடர்பான வரைவு - கல்வி அமைச்சு.

1.பாடநூல்கள், ஆசிரியர் வழிகாட்டி (Teacher's Guide} நீக்கம் அதற்குப் பதில் இதழ்வடிவ முறை (Module)
2.முன்பள்ளி, தரம் 1,6,10 பூரண கலைத்திட்ட மாற்றம் ஏற்படுத்தப்படும்.
3.பாடவேளைகள் (subject period) 1 மணித்தியாலம் ஆக்கப்படும். நாள் ஒன்றுக்கு ஐந்து 5 பாடவேளை மட்டுமே நடைபெறும் மிகுதி நேரம் உடற்கல்வி செயற்பாடுகள் இடம்பெறும்.
4.பாடசாலை தவணை முறை நீக்கப்பட்டு, Semester முறை அறிமுகம். ஒரு Semester 12-14 வாரங்களைக் கொண்டது.
5.கற்றல் பேறு நீக்கம். விருப்புக்குரிய நோக்கம் அறிமுகம்
6.கலவை கற்பித்தல் முறை அறிமுகம்
1.நேரடியாக கற்றல்
2.ICT கற்றல்/ Digital Learning (ZOOM, Team, YouTube)
7.மொடியுல்கள் ((Modules) தீம் அடிப்படையில் உருவாக்கம்
8.தரம் 9 (Grade 9) இல் தேசிய பொது பரீட்சை (National General Exam) அறிமுகம்.
9.இடைநிலை பிரிவு மாற்றம்.                 கனிஷ்ட இடைநிலை : தரம் 6-11                 சிரேஷ்ட இடைநிலை : தரம் 12-13
10. தேசிய கல்வி குறிக்கோள்கள் ஆறு (6) ஆக்கப்படும்
11.பொது பரீட்சையில் எழுத்து பரீட்சைக்கு 60% புள்ளிகள் மிகுதி 40% செய்முறை (அனைத்து பாடங்களுக்கும்)
12. புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பாக பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் மனமாற்றம் தொடர்பான செயலமர்வுகள் ஆரம்பம். இதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 400 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி.
13.PTS பாடம் நீக்கம்
14.மீத்திறன் கூடிய மாணவர்கள் உரிய மொடியுல்களை (Modules) குறிப்பிட்ட காலத்திற்கு முன் பூர்த்தி செய்து வகுப்பேற்றம் பெறலாம்.
15.அனைத்து வகுப்பறையிலும் (class room) மடிக்கணிணி (Laptop) மூலமே கற்றல் இடம்பெறும். 2023 தரம் 1,6,10 வகுப்பறைகள் மாற்றத்திற்குள்ளாகும்.
16.கணிணி (computer) அறிவின்றி (knowledge) 2023 இல் ஆசிரியர்கள் கற்றல் செயல்பாட்டில் ஈடுபட முடியாது.
இவ் புதிய வரைபுக்கு கல்வி மற்றும் கல்வி ராஜாங்க அமைச்சர்கள் அனுமதி வழங்கியுள்ளனர்.
”நீங்களும் வெல்லலாம்” பரிசுப் போட்டிக்கான இன்றைய (01/05/2022) நாளுக்கான புதிர் வெளிடப்பட்டுள்ளது. புதிருக்கு விடையளிக்க முடிந்தவர்கள் : https://www.lkedu.lk/2020/08/5_7.html

இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.


Like us on Facebook

Viber இல் எம்மோடு இணைவதாயின்




No comments

Lanka Education. Powered by Blogger.